இணையம் என்றால் என்ன ?
இணையம் என்பது உலகெங்கிலும் உள்ள கணினிகளை இணைக்கும் ஒரு உலகளாவிய நெட்வொர்க் ஆகும். இது மின்னஞ்சல், வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள், மற்றும் பிற வகையான தகவல் தொடர்பு மற்றும் தகவல் பகிர்வு சேவைகளை வழங்குகிறது.
இணையம் 1960 களில் அமெரிக்க இராணுவத்தால் உருவாக்கப்பட்டது. அது முதலில் ஆராய்ச்சி மற்றும் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது 1990 களில் பொதுமக்களுக்கு அணுகப்பட்டது.
இணையம் உலகெங்கிலும் உள்ள மக்களை இணைக்கவும், தகவல்களை பகிரவும், மற்றும் கலாச்சாரங்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வழிமுறையாக மாறியுள்ளது. இது உலகத்தை ஒரு சிறிய இடமாக மாற்றியுள்ளது.
இணையத்தின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- உலகளாவிய: இணையம் உலகெங்கிலும் உள்ள கணினிகளை இணைக்கிறது.
- கணினி-கணினி: இணையம் கணினிகளிலிருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புகிறது.
தரநிலைப்படுத்தப்பட்ட: இணையம் தரநிலைப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
பகிரப்பட்ட: இணையம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தகவல்களைப் பகிர அனுமதிக்கிறது.
இணையம் நம் வாழ்வில் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. இது நம்மை தகவலறிந்தவர்களாகவும், இணைக்கப்பட்டவர்களாகவும், உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் உதவுகிறது.
இணையத்தின் சில பயன்பாடுகள் பின்வருமாறு:
- தகவல்: இணையம் செய்தி, தகவல் மற்றும் கல்வி உள்ளடக்கத்தை வழங்குகிறது.
- தொடர்பு: இணையம் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ அரட்டை போன்ற தகவல் தொடர்பு சேவைகளை வழங்குகிறது.
- வணிகம்: இணையம் வணிகம், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் இணைய வங்கி போன்ற சேவைகளை வழங்குகிறது.
- கலாச்சாரம்: இணையம் இசை, திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பிற கலாச்சார உள்ளடக்கத்தை வழங்குகிறது.
இந்த நொடி இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதற்கு இணையம் உதவியாக இருக்கின்றது. இணையம் இல்லாவிட்டால் இந்த பதிவு உங்களை வந்து சேர்ந்திருக்காது.
இன்றைய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நம்மால் இன்டர்நெட் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது. கல்வி, வேலை, பொழுதுபோக்கு, பொருட்கள், உணவு என எல்லாம் இணையம் மூலமாகவே கிடைக்கின்றது. எல்லோருக்குமே ஏதோவொரு வகையில் இணையம் உதவியாக இருக்கின்றது.
உலகில் பல்வேறு மூலைகளிலும் இருப்பவர்களை தொடர்புபடுத்துவதற்கு சில வினாடிகள் போதுமானதாக உள்ளது. இணையத்தினுடைய செயற்பாடு அந்த அளவிற்கு வேகமானதாக அமைந்திருக்கின்றது.
இன்டர்நெட் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் மொபைலில் பயன்படுத்தலாம் என்று சொல்லலாம். ஆனால் இன்டர்நெட் எங்கிருந்து வருகின்றது, எப்படி செயற்படுகின்றது, இன்டர்நெட் யாருக்கு சொந்தமானது இந்த மாதிரியான கேள்விகள் கேட்டால் பலருடமிருந்து பலவிதமான பதில்கள் வரும்.
இன்டர்நெட் எங்கிருந்து வருகின்றது, எப்படி செயல்படுகின்றது என்பது பற்றிய பல்வேறு தகவல்களை இந்தப் பதிவு மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.
இணையத்தினுடைய ஆரம்பம்
இன்டர்நெட் என்பது முதல் முதலாக கணணிகளை இணைத்து தகவல் பரிமாற்றம் செய்வதற்காக அமெரிக்க இராணுவத்தால் ஆர்ப்பாநெட் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் ஆர்பாநெட் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்கள், ஆய்வுகூடங்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
பின்காலத்தில் ஆர்ப்பாநெட் ஆனது உலக அளவில் விரிவடைந்து இன்டர்நெட் ஆக வளர்ச்சியடைந்தது. இன்டர்நெட் பல மடங்கு வளர்ச்சியடைந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது.
இன்டர்நெட் எங்கிருந்து வருகின்றது?
நமது மொபைலிற்கு இன்டர்நெட் எங்கிருந்து வருகின்றது என்று கேட்டால் எல்லோரும் சொல்லிவிடுவார்கள். பக்கத்திலிருக்கின்ற டவரிலிருந்து (Tower) வருகின்றது. இன்டர்நெட் அலை வடிவத்தில் உங்களுடைய மொபைலிற்கு வந்து சேர்கின்றது.
அதே போல கண்டங்களிற்கிடையில் அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இணைக்கப்படும் இணைப்புக்களும் Fiber Optic Cable கள் மூலமாகவே இணைக்கப்படுகின்றன.
இந்த Fiber Optic Cable கள் சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படுகின்ற கேபிள்கள் போன்று இருக்காது. மிகப்பெரிய அளவில் பலமானவையாக இருக்கும். அதிவேகமாக இன்டர்நெட் ஐ கடத்தக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும். உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் Fiber Optic Cable-கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் கண்டங்களிற்கிடையில் இன்டர்நெட் பரிமாறப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிற்கும் இன்டர்நெட் செய்மதி தொழினுட்பம் (Satellite) மூலமாக வருகின்றது என்றுதான் பல பேர் நினைக்கிறார்கள். நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் இன்டர்நெட் கடல் வழியாக Fiber Optic Cable கள் மூலமாக வருகின்றது.
உலகம் முழுவதும் பதிக்கப்பட்டுள்ள கேபிள்களை வரைபடத்தில் பார்க்க Submarine Cable Map என்ற இணையத்தளத்தை பயன்படுத்த முடியும்.
கடலுக்கடியில் Fiber Optic Cable யாரால் பதிக்கப்படுகின்றது
Fiber Optic Cable உலகம் முழுவதும் பதிப்பதற்கென தனியாக ஒரு நிறுவனம் கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனியார் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் என உலகில் பல நிறுவனங்களும் சேர்ந்துதான் Fiber Optic Cable-களை பதிக்கின்றன.
கடலுக்கடியில் கண்டங்களிற்கிடையில் பதிக்கப்படும் Fiber Optic Cable-கள் ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு பகுதிகளிற்கும் சென்றடைகின்றன.
அதிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இன்டர்நெட் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ஒரு நாட்டிற்குள் இன்டர்நெட் இணைப்புக்களை ஐ ISP-கள் வழங்குகின்றன. ISP-களிடமே நாம் பணம் செலுத்தி இன்டர்நெட் இணைப்பை பெற்றுக்கொள்கிறோம்.
கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருக்கின்ற Fiber Optic Cable ஒன்றில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இன்டர்நெட் தடைப்படாது. இன்டர்நெட் இணைப்பிற்காக பல Fiber Optic Cable கள் பதிக்கப்பட்டிருக்கும்.
நமது வீட்டிலிருந்து வேறொரு கண்டத்திற்கு அல்லது வேறொரு நாட்டிற்கு தரவுகள் அதிவேகமாக சென்றடைவதற்கும் அங்கிருந்து நமக்கு இங்கு தரவுகள் வந்தடைவதற்கும் காரணம் உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற இணைப்புக்கள்தான்.
தரவுகளை பரிமாற்றம் செய்வதற்கு உலகம் முழுவதும் சிலந்தி வலை போன்று நிறைய இணைப்புக்கள் இருக்கின்றன.
நாம் ஆன்லைனில் ஒரு விடயத்தை பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கான தரவுகள் ஏதோவொரு இடத்தில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி சேமிக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் நம்மால் அதனை பயன்படுத்த முடியும்.
நாம் பயன்படுத்துகின்ற வெப்சைட்டுக்கள் ஆப்கள் போன்றவற்றினுடைய தரவுகள் எங்கே சேமிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் வேறு வேறு நாடுகளில் உள்ள Server-களில் சேமிக்கப்படுகின்றன.
சேவையகங்கள் (Servers)
உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் Server-கள் இருக்கின்றன. நாம் பயன்படுத்துகின்ற வெப்சைட்டுக்கள், ஆப்கள், சேவைகள் போன்றவற்றின் எல்லா தரவுகளும் உலகில் இருக்கின்ற ஏதோவொரு Server-இல் சேமிக்கப்பட்டிருக்கும்.
அந்த Server-களிலிருந்துதான் தரவுகள் நமது மொபைலுக்கு அதிவேகமாக வந்தடைகின்றது. அது எப்படி வந்தடைகின்றது என்பதை ஆரம்பத்திலேயே பார்த்திருந்தோம்.
Server-களும், கடலுக்கடியில் பொருத்தப்பட்டிருக்கின்ற Fiber Optic Cable-கள், நாட்டில் உள்ளே இணைக்கப்பட்டுள்ள இணைப்புக்கள், நமது வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு போன்ற பல இணைந்துதான் இன்டர்நெட் உருவாகுகின்றது.
ஒரு வெப்சைட் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நமது நாட்டில் அல்லது அருகில் உள்ள நாடுகளில் அந்த வெப்சைட்டின் Server இருந்தால் வெப்சைட் வேகமாக Open ஆகும். வேறொரு கண்டத்தில் இருந்தால் கொஞ்சம் மெதுவாக Open ஆகும். மில்லிசெக்கன்கள் அல்லது சில செக்கன் வித்தியாசப்படும்.
இதற்கு காரணம் நமது நாட்டில் உள்ள Server என்றால் பக்கத்தில் உள்ள Server ஊடாக நம்மை வந்தடையும். இதுவே வேறொரு கண்டத்தில் தூரத்தில் இருந்தால் பல Server-களை கடந்து வந்தடையவேண்டும். இதன் காரணமாக நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.
நீங்கள் ஒரு வெப்சைட் உருவாக்குகின்றீர்கள் என்றால் உங்களது வெப்சைட்-ஐ எந்த நாட்டில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்குகின்றீர்களோ அந்த நாட்டில் Server-ஐ வைத்தால் அங்கே வெப்சைட் வேகமாக Open ஆகும்.
இணையம் யாருக்கு சொந்தமானது
இன்டர்நெட் என்பது ஒரு தனி நபருக்கோ அல்லது தனி நிறுவனத்திற்கோ அல்லது ஒரு அரசாங்கத்திற்கோ சொந்தமானது கிடையாது.
ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கம்பெனிகளும் தனி நபர்களும் சேர்ந்து உருவாக்கியதே இன்டர்நெட் ஆகும். எல்லோருக்குமே இன்டர்நெட்டில் பங்கு இருக்கிறது என்று சொல்லலாம்.
யாருக்கும் இன்டர்நெட் சொந்தமானது கிடையாது என்பதால் யாரும் இன்டர்நெட்-ஐ கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு நாடுகளும் விரும்பினால் தமது நாட்டில் இன்டர்நெட்-ஐ கட்டுப்படுத்த முடியும்.
ஒட்டுமொத்த இன்டர்நெட்-ம் என்னுடையதுதான் என்று யாரும் சொல்ல முடியாது. அதே போல ஒட்டுமொத்த இன்டர்நெட்-ஐ யும் கட்டுப்படுத்தவும் முடியாது.
இன்று எல்லோருமே இன்டர்நெட் பயன்படுத்துகின்றோம். இன்டர்நெட் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. எல்லோரும் பயன்படுத்துகின்ற இன்டர்நெட் எங்கிருந்து வருகிறது என்பது பலருக்கும் தெரியாமலேயே இருக்கின்றது. இன்டர்நெட் எப்படி செயல்படுகிறது என்பதனை சொல்வதற்காகவே இந்த பதிவு.
இணையத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
வின்டன் செர்ப்(vinton cerf) இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
தமிழின் முதல் இணையதளம் எது?
"1995ம் ஆண்டு அக்டோபர் மாசம் சிங்கப்பூர் அதிபர் ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.
Www என்பதன் விளக்கம் என்ன?
மாண்டரின் சீனத்தில், World Wide Web என்ற சொல்லானது பொதுவாக ஓர் ஒலிப் பொருள் பொருத்துதல் முறையில் வேன் வேய் வேங் (万维网) என மொழி பெயர்க்கப்படுகிறது, இது www என்பதற்கு போதுமானதாக உள்ளது. மேலும் சொற்றொடராகப் பார்க்கையில் "எண்ணற்ற பரிமாணங்களைக் கொண்ட வலை" என்று பொருள் தருகிறது.
இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பு+ர்த்தி செய்யும் புதுக்கண்டுப்பிடிப்பு என்று கூறலாம். மிக பழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பல புதிய தகவல்களையும் பெற இணையம் உதவி வருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களை பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பணை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.
இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொரு வரும் வெவ்வேறு தகவல்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். அவை இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.
உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற முடியும். முற்காலத்தில் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய சூழல் இருந்தன. இப்பொழுது தேவையான ஒன்றையோ அல்லது கருத்தையோ, ஒருவர் பற்றிய தகவல்களையோ, தெறிந்து கொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்க கருவியான அலைபேசி மற்றும் திறன்பேசி, நுண்ணரிபேசி, வில்லை, மாத்திரை, மடிகணினி, கணினி போன்றவற்றில் இணைய வசதிபெற்று கருத்துகளைத் தெறிந்து கொள்ளலாம்.
இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், தகவல் பரிமாற்றலாம், பொழுதுபோக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இது போன்ற பல தகவல்களைப் பெற்று மனநிறைவு பெறசெய்வது இணையமாகும். அந்த அளவிற்கு இணையம் இன்று வளா்ந்து கொண்டே வருகின்றது.
இணையம் சொற்பொருள்
உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னனு வலையில் சங்கிலிப்பிணைப்பு செய்யப் பெற்று ஒன்றாக்கப்பட்டது தான் இணையம். உலகெங்கும் கணிப்பொறியில் உள்ள செய்திகளின் இணைப்பே இணையம் ஆகும். உலகளாவிய வலை இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதனை சுருக்கமாக WWW என்றும் W3 The Web என்றும் குறிப்பிடுவதுண்டு.
இணைய வரலாறு
இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடை போடுகிறது எனில் அது மிகையன்று. 1950 ஆம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத் தொடர்பு வலையமைப்பின் பயன்கள் பெரிதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினார்.
இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள் வரிசைப்படுத்தும் முறைகள் மற்றும் தரவுப்பொது நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினார்.
இணையத் தந்தையாக ஜே.சி.ஆர்.லிக்லைடர் என்பவரை அழைக்கின்றனர்.
அரிய கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான “சார்லஸ் காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன்” ஆகியோர் ஆவார். 1996 இல் ஃபைபர் நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப் பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தனர்.
1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல் என்பவர் தொலைபேசிக் கம்பி வழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார் 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது.
1993 செப்டம்பர் 15 இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கான திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது.
1993 இல் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் (National Centre For Super Computing) என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பல வசதிகள் கொண்ட இணையத் தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார்.
வலைப்பின்னல் மையம்
வலைப்பின்னல் என்பது மீள்கருவி மையம் என்று குறிப்பிடுவார். பல சுருளிணைகள் ஒளியிழை, ஈத்தர்நெட் கருவிகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஒற்றை வலைப்பின்னல் கூறாகச் செயல்பட உதவும் கருவியாகும்.
1994 இல் WWW என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உருமாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை மட்டும்மல்லாத படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சொ்ன் என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு தழுவிய விரிவு வலைமுறையைக் கொண்டு வந்தது.
1995 இல் கொhpய நாட்டில் பிறந்த பின் அமெரிக்கா நாட்டில் குடியுரிமை பெற்ற நாம் ஜீன் பெய்க (Nam Jun Paik) என்பவர் (Yber Town) என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார்.
இணையத்தை வழிநடத்துவோர்
இணையத்தை தனி மனிதனோ அல்லது குழுவோ கட்டுப்படுத்துவதில்லை எனினும் இணையத்தினை வழிநடத்த இணையக் கழகத்தைக் கணினி வல்லுநர்கள் இலாப நோக்கமின்றி நடத்தி வருகின்றனர். அவற்றுள் iab, ietf ஆகிய இரண்டு கழகங்கள் குறிப்பிடத்தக்கன.
- IAB - Internet Architecture Board
- IETF - Internet Engineering Test Force
IAB என்பது கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கான வரையறு ஆகும். இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கு முகவரிகளை இது வழங்குகிறது. மேலும் தேவைப்படுகின்ற நேரங்களின் தேவைகேற்ப வரையறுகளை மாற்றி அமைக்கும் பணியையும் இக்கழகம் செய்கிறது.
IETF என்பது கணினியின் தொழில் நூட்ப வளர்ச்சி குறித்தும் அதனால் இணையத்தில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள் குறித்து முடிவு செய்கிறது.
இணைய விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக The Internet Society Overseas for the Development of the Internet என்ற அமைப்பும் இணைய தளங்களை மேற்பார் வையிடுவதற்காக World Wide Web Consortium என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றன.
இணைய வசதி வழங்குவோர்
இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கட்டணம் செலுத்தி இணைய இணைப்புப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் Service provider என்று அழைக்கப்படும். தமிழில் சேவை வழங்குநர் என்று கருதப்படுவதுண்டு.
அமெரிக்காவில் GTR, MCI, SEINT, UUNET, AOL ஆகிய நிறுவனங்கள் இணைய சேவையை வழங்குகின்றன. இந்தியாவில் VSNL, BSNL, DISHNET, STFY, AIRTEL, RELIANCE, TATA INDICOM முதலிய பல நிறுவனங்கள் இச்சேவையை அளிக்கின்றன. இணைய சேவை வசதி என்று குறிப்பிடுவதுண்டு.
இணைய இணைப்பு பெற தேவையானவை
இணைய இணைப்பு பெறுவதற்குக் கணினி, தொலைபேசி, இணைப்பு (Modem) பாங்கு ஆகிய மூன்று இருந்தால் போதும். இணைய வசதி பெற்றிடலாம். இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிடம் கட்டணம் செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் அளவிற்கேற்ப உரிய தொகையானது முன் தொகையாகவோ பின் தொகையாகவோ செலுத்தப்பட வேண்டும்.
இணைய முகவரி
ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருப்பது போல் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருக்கிறது. இதனை இணைய முகவரி என்று கூறுவது. https://ealuvi.blogspot.com/ இம்முகவரியில் ஐந்து பகுதிகள் உள்ளன.
- http - Hypertext transport protocol என்பதன் சுருக்கமாகும்.
(மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)
- www - Worldwide web என்பதன் சுருக்கமாகும். (வைய வரி வலை)
- ealuvi- குறிப்பிட்ட ஓர் இணையதளத்திற்கு வழங்கப்பட்டும் பெயர் ஆகும்.
- blogspot - தனியார் நிறுவனத்தின் பெயர்
com - Commerce
என்பது சுருகமாகும். இணையதளத்தின் தன்மையைக் குறிப்பிடுவதாகும்.
“சுவிட்சர்லாந்து நாட்டில் ‘செர்ன்’ என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்கு டிம் பெர்னர்லீ என்ற இயற்பியல் வல்லுநர் பணியாற்றினார். இவர் 1989 இல் உலகளாவிய வலைப்பின்னலுக்கு WWW world wide web என்ற பெயரிட்டார்.”
டிம்பெர்னா் லீ இணையத்துக்கு அடிப்படையான மூன்று கருத்துக்களை கண்டுபிடித்தார்.
அவை
- http
- url
- html
http Hypertext transfer protocol என்பதன் சுருக்கமே ஆகும். (மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை) வையக வலையில் தகவலைப் பெறுவதற்கான விதிமுறை புரோட்டோக்கால் எனப்படும். தொடக்கம் செய்தி படம் எழுத்து முடிவு இவையென இந்த விதிமுறைகள் மூலம் முன்பே தீர்மானித்தார்.
URL - Uniform Resource Locator என்பதன் சுருக்கம் ஆகும். சீரான வள இடங்காட்டி இணையத்தில் உள்ள தகவலின் இருப்பிடம் காட்டும் முகவரியே இதுவாகும். இந்த முகவரியைப் பயன்படுத்தியே உலாவிகள் இணைய வலங்களைக் கண்டறிகின்றன. http;//www.Google.com என்பது சீரான வள இடங்காட்டிகளுள் ஒன்று ஆகும்.
HTML – Hyper Text Markup Language என்பதன் சுருக்கம் ஆகும். மீயுரைக் குறிப்பு மொழி இணையத்தில் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குத் தாவிச் செல்ல குறிப்புகள் எழுதவேண்டும். இந்த குறிப்புகள் எழுதும் மொழியே மீயுரைக் குறிப்பு மொழி ஆகும். ஆவணத்தில் இரு பகுதிகள் உண்டு.
அவை
- தலை
- உடல்
தலைப்பகுதியில் ஆவணத்தின் தலைப்பும் உடல் பகுதியில் ஆவணமும் இருக்கும். 1991 மே மாதம் இந்த வையக விரிவு வலை அறிமுகமானது. காலாகாலத்திற்குச் சேமிக்க முடிவதால் இப்பொழுது வலையேகதி என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.
இணைய முகவரியும் இணையச் செயல்பாடும்
ஒவ்வொரு தொலைபேசி இணைப்பிற்கும் ஓர் எண் இருப்பதுபோல இணையத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஓர் அடையாள எண் உண்டு. இந்த எண்ணில் நான்கு பகுதிகள் இருக்கும். சான்றுக்கு 456-12-25-78 என்பது ஒரு முகவர் கணிப்பொறியின் அடையாள எண் ஆகும். இந்த அடையாள எண்களை நினைவில் வைத்திருப்பது கடினம். எண்ணிற்குப் பதிலாக எழுத்திலான பெயரைப் பயன்படுத்துகிறோம்.
நமக்குத் தேவையான முகவரியை உள்ளிட்டால் தேடும் பொறி அந்தக் கணிப்பொறியைக் கண்டுபிடித்து நம் கணிப்பொறித் திரையில் காட்டும். இதற்கு யாகு, கூகிள், அல்டாவிஸ்டா எனப் பல தேடும்பொறிகள் உள்ளன.
இணையச் செயல்பாடு
இணைய இணைப்பைப் பெறத் தேவையானவை சில கருவிகள் உள்ளன. அவை
- கணிப்பொறி Computer
- தொலைபேசி Tele communication
- மாற்றி Modem
- தொடர்பு மென்பொருள் Communication Software
இணையச் சேவை வழங்குபவர் Internet Service Provide
இது போன்ற கருவிகளின் மூலம் இணைய வசதிகள் பெற முடிகின்றன. தொலைபேசி வழியே இணையத்தைப் பயன் படுத்துவதில் தொடர்பு மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. இப்பொழுது ஒளியிழைத் தடங்கள் வழியே இணைய இணைப்பை எளிதிலும் விரைவாகவும் பெறமுடிகிறது.
கணிப்பொறியில் இணைய சேவை பெறுவதற்கு முன்பே இணையம் செயல்படுவதற்காண மென்பொருள்களை பொருத்தி இருக்க வேண்டும். Landline net தொலை நிகர வசதியாகவும், Modem மாற்றி போன்ற முறையிலும் இணைய சேவை கணிப் பொறியில் பெறமுடியும்.
இணைய குறியீடுகள்
இணைய குறியீடு என்பது ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாட்டிற்கும், கல்வி, பல்கலைக்கழகம், இராணுவம் போன்ற பல நிறுவணங்களின் விரிவான பெயர்களை தான் இப்பொழுது இணையத்தில் சுருக்கமாக வடிவமைத்து குறிப்பிட்டுள்ளனர்.
கல்வி edu
பல்கலைக்கழகம் univ
அரசு சாராநிறுவனம் org
இராணுவம் mail
வலைப்பராமரிப்பு net
அரசாங்கம் gor
தமிழ்நாடு tn
இந்தியா in
சிங்கப்புர் sg
கனடா ca
இங்கிலாந்து uk
ஒருவருக்கு எழுதப்படுகின்ற கடிதங்களில் சரியான முகவரி இருந்தால் அக்கடிதம் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று கிடைக்கும். முகவரி சரியாக இல்லை என்றால் அக்கடிதம் உரியவருக்குச் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்படும்.
பல நேரங்களில் அது உரியவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். கடிதத்தில் முகவரியே இல்லையென்றால் அக்கடிதம் யாருக்குமே சென்று சேராது.
இணையதள முகவரி சரியாக இருந்தால் அத்தளத்தைச் சரியாகச் சென்றடையலாம். முகவரி சரியாக இல்லையென்றால் உரிய இணையதளத்தை உரிய நேரத்தில் சென்றடைவது கடினம். முகவரியே இல்லையென்றால் இணையதளத்தை அடையவே முடியாது.
ஒவ்வொரு இணையதளமும் எளிதில் அடையும் வகையில் ஒவ்வொரு இணையதளம் முகவரியைக் கொண்டு விளங்குகின்றன. நாம் எளிதில் மனதில் பதியவைத்து கொள்ளும் வகையில் முகவரிகள் அமைந்திருந்தாலும் கணினிக்கு முகவரிகள் தெரியாது.
முகவரிகளைக் கணினி எண்களைக் கொண்டே அடையாளம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக 212.58.240.32 என்ற எண் ஒரு முகவரியின் இணையதளத்தைக் குறிக்கிறது. இதனை IP முகவரி என்று கூறுவதுண்டு. Internet Protocol என்பதன் சுருக்கம் IP ஆகும்.
இணையத்தில் தகவல் தேடும் வசதிகள்
விரிந்து பரந்த இந்த உலகத்தில் ஒருவருக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப்பிடித்தல் என்பது எளிதன்று. ஆராய்ச்சி தொடர்பாக ஒருவர் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய ஒரு நூலை தேடினால் அந்நூல் அங்கு இருக்கலாம், இல்லாமல் போகலாம், இருந்து யாராவது எடுத்துப் போயிருக்கலாம் இருந்தும் கூட நம் பார்வைக்கம் வைத்தும் கிடைக்காமல் போகலாம்.
இணையம் என்பது அவ்வாறு அல்ல தேடிய நேரத்தில் தேடியதைக் கண் முன்னே கொண்டு வந்து குவித்துவிடும். சில வேளைகளில் நாம் ஒன்றைத் தேட அதைனைக் கொண்டு வந்து தருவதோடு மட்டுமன்றி அதனோடு தொடர்புடைய மேலும் பல தகவல்களை அள்ளித் தந்து நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கின்றன. ஆய்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு இணையம் மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் அமைகிறது.
வேண்டிய வேண்டியவாறு மட்டுமன்றி கூடுதலாகவும் அதே வேளையில் தனியொரு மனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தேடிக் கண்டுபிடிக்க முடியாதவற்றையும் மிகுந்த காலம் தேவைப்படுகின்ற தேடுதல்களைக்கூட மிக எளிதாகவும் விரைந்தும் செய்து முடிகின்ற ஆற்றல் வாய்ந்ததுதான் இணையம்.
சிறப்பு மிக்க தேடுதல் வசதிகளைப் பல நிறுவனங்கள் இணையப் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.
தேடு பொறிகள்
அலெக்ஸா Alexa
கூகிள் Google
யாகு Yahoo
ஸ்டார்வர் Starware
தமிழ் தேடல் W3 tamil Search
மொசிலா ஃபையர் பாக்ஸ் Mozilla Firefox
எம்.எஸ்.என் Msn
அல்டாவிஸ்டா Alta vista
பிங்கு bing
ஆஸ்க்.காம் Ask.com
இவ்வாறு தேடுப் பொறிகளில் வேண்டிய செய்திகளைச் சில நொடிப் பொழுதில் இருந்த இடத்தில் இருந்தவாறே எளிதில் பெற முடியம்.
தேடு பெறியினால் விளையும் சில நன்மைகள் இருக்கின்றன. அவை கால விரயத்தினைத் தவிர்க்கலாம் செலவு குறைவு தகவல்களை விரைந்து பெறலாம். கூடுதல் தகவல்களையும் பெறலாம் தமிழ் மொழி வழியாகவும் தேடலாம்.
இணையத்தில் கலந்துரையாடல்
இணைய வழிக் கலந்துரையாடல் இணையவழி அளவளாவுதல் இணையவழி பொழுது போக்குதல் என்று கூறுவர்.
பொழுதுப் போக்கிற்காக நண்பர்கள் ஒன்று கூடி எதனையோ பற்றி பொழுது போக்காகப் பேசி மகிழ்வது ஆகும். இதில் மகிழ்ச்சியும் பொழுதுப் போக்குமே முதன்மை நோக்கமாக இருக்கும்.
இணையவழிக் கலந்துரையாடல் என்பது ஏதேனும் ஒரு பொருள் பற்றி ஆக்கப்புர்வமான முறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணையம் வழிக் கூடிப் பேசுவது ஆகும். இக்கலந்துரையாடலுக்கு இ - குழு (e – Group) என்று குறிப்பிடுகின்றனர். இக்குழுவில் நண்பார்கள் ஓய்வான நேரங்களில் அமர்ந்து கொண்டு கணினியிலோ அலைப்பேசியிலோ நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதும் தகவல்கள் பரிமாறுவதும் போன்ற உணர்வையும் மகிழ்ச்சியையும் இம்முறையின் வழியாகப் பெற இயலும் என்பர்.
பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்ற அவ்வகையில் www.chatting.com என்ற இணையதளம் குறிப்பிடத்தக்கது.
இணையத்தின் பயன்கள்
இணைய உலகம் உண்மையிலேயே விந்தையானது ஒரு மனிதனுக்கு ஒரளவு நேரமும் இணையத்தில் உலாவு வதற்குப் புரிதலும் இருந்து விட்டால் உலகையே அவன் தன் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம்.
இணையம் விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகையே நம் வீட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் வாய்ந்தது.
இணையத்தின் வழி புதியன புகுந்து, அறிவுப் பெருக்கி, சிந்தனை செழிக்கச் செய்கிறது. இதன் மூலம் தகவல்களைப் பெறலாம், அளிக்கலாம், வாங்கலாம், கல்வி பயிலலாம், பயிற்று விக்கலாம், எவரும் - எங்கிருந்தும் - எந்த தகவல்களையும் 24 மணி நேரமும் நாடு, இனம், மொழி, என்ற எத்தகைய வேறுபாடுகளும் இன்றிப் பெறும் ஊடகமாக இணையம் விளங்குகிறது.
இதன் மூலம் தொலைவில் இருப்பவர்களைக் கண்காணிக்க முடியும். இவற்றின் வழி சாதனங்களையும் தகவல்களையும், கருத்துக்களையும் பகிற முடியும்.
இணையத்தில் அ முதல் ஔ வரை எந்தச் செய்தியையும் பெற முடியும். இணைய தளத்தை உள்ள நண்பனாகவும் எவ்வளவு நேரம் உறவாடினாலும் சலிப்பு ஏற்படாமல் உற்சாகம் குறையாத உணர்விலும் தகவல்களை அளிக்கும் வகையில் இணையம் திகழ்கிறது.
Tags:
மாணவர் கற்றல்