நான் விரும்பும் பெரியார்

 இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்  


(s.neha)

நான் விரும்பும் பெரியவரான சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். (06/06) 


நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை


"(Shahfa)

1.நான் விரும்பும் பெரியார் அப்துல்கலாம் ஆவார்.

2.சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியானவர்தான் அப்துல்கலாம்.

3.1980ம் ஆண்டு SLV-111  ரொக்கட்டைப் பயன்படுத்தி ரோகினி என்ற துணை கோளை வெற்றிகரமாக ஏவச் செய்தார்.

4.திருச்சி புனித ஜோசெப் கல்லூரியில் இயற்பியல் கல்வி கற்று  இளங்கலைப் பட்டத்தை  பெற்றார். (06/06)


(s..mithusha)

நான் விரும்பும் பெரியவரான சின்னச்சுவாமி சுப்பிரமணியப் பாரதியார் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல்  ஒரு எழுத்தாளர்,பத்திரிக்கையாசிரியர்,சமூக திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுக்களின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.இவர் சின்னச்சுவாமி ஐயனாருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு எட்டையபுரம் எனும் ஊரில் பிறந்தார்.பாரதியாரின் இலக்கியப் பணியில் மீசைக்கவிஞன், முண்டாசு கவிஞன் என்னும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார்.  (06/06)


(M.F. Saimah)

நான் விரும்பும் பெரியார்

நான் விரும்பும் பெரியார் கருணையின் உறைவிடமான அன்னை தெரேசா அவர்களாவார். 

இவர் பிறர் மீது அளவற்ற கருணையும் எல்லையில்லா அன்பும் கொண்டவர்.

இவர் 45 வருடங்களுக்கு மேலாக அநாதைகளுக்கும் , ஏழை எளியோர்களுக்கும்  இறக்கும் தருவாயில் இருப்போர்க்கும் தொண்டாற்றினார்.  (06/06)


(M.A.M.Amhar)

நான் விரும்பும் பெரியார்                                                     ஈழ நாடு பெற்றெடுத்த பெரியார் சேர். பொன்  இராமநாதனும் ஒருவர். அவரே நான் விரும்பும் பெரியார்.                                                                                               இவர் யாழ்,மாவட்டத்தில்  மானிப்பாய்  எனும்மிடத்தில்  பிறந்தார். தமது கல்வியை கொழும்பு நகரில் கற்றார்.    *இலங்கை ஆட்சிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை   ஏற்படுத்தினார். தம் வாழ்நாள் முழுவதும் சமய வளர்ச்சிக்காகவும்,தமிழ்  இனத்தின் நல்வாழ்வுக்காகவும் அரும்பாடுபட்டார்.  (06/06) 


(s.riththes)

நான் விரும்பும் பெரியார்  நான் விரும்பும் பெரியார்  விவேகானந்தர்  அவர்  1867 ஐனவரி 12 ம் நாள்  கல்கத்தாவில்  பிறந்தார். இவரது இயற்கை  பெயர்  நரேந்திரநாத தத்தர்.இவரது  தந்தையின் பெயர் விசுவநாத தத்தர்.தாயின் பெயர் புவனேசுவரி. இவர் ஆங்கிலக் கல்வி பயின்று கல்லூரி பட்டம்  பெற்றார். இளமையிலேயே இவர்  அறிவாற்றலும் தியானம்  செய்யும்  பழக்கமும்  உடையவராக இருந்தார்.  (06/06)

(சசிராஐ் விதுர்சா)

நான்  விரும்பும்  பெரியார்.

1)நான்  விரும்பும்  பெரியாரின்  பெயர்  ஆறுமுக  நாவலர்  ஆகும்.

2)அவர்  யாழ்ப்பாணம்  நல்லூரில்  கந்தப்பிள்ளை,சிவகாமி  அம்மையருக்கு  மகனாகப்  பிறந்தார்.

3) இவர்  சைவநெறி  தழைத்தோங்கவும்  தமிழ்  மொழி  செழித்து  வளரவும்  பெரும்  பங்காற்றியவர்.

4)இவருக்கு  திருவாவடுதுறை  ஆதீனம் "நாவலர்"  என்ற  பட்டத்தை  வழங்கியது. (06/06)


(B.Ashwin)

திருவள்ளுவர் தமிழ் புலவர்களுள் ஒருவராவார். இவர் திருக்குறள் என்னும் நூலை இயற்றியுள்ளார். திருக்குறள் 1330 குறட்பாக்களைக் கொண்டது. 133 அதிகாரங்களை உடையது.vஒரு அதிகாரத்தில் பத்து பாக்கள் உள்ளன.vஅறத்துப்பால்.பொருட்பால்.காமத்துப்பால் எனும் முப்பால் கொண்ட நூலாகும்.vதிருவள்ளுவர் தமிழ்நாட்டில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்தவராவார். இவரது கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றதாகும். திருவள்ளுவரின் திருக்குறள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவரை செந்நாப்போதர்.வள்ளுவர்.பொய்யா மொழிப்புலவர்.ஐயன் என்றெல்லாம் அழைப்பர். "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் பாடியுள்ளார்." (06/06)


(V.S.Srimitha)

நான் விரும்பும் பெரியார். நான் விரும்பும் பெரியார் ஏ.ஜே. அப்துல் கலாம் அவர்கள். இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியாக பணியாற்றினார். இவர் பல தத்துவம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். தனது வாழ்நாளை மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.  (06/06)

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post

Advertisement

Advertisement