s.mithusha
01.எமது பாடசாலையின் பெயர் வவுனியா/ சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை.எனது பாடசாலை ஓர் அழகிய பூங்காவனம் போல் காணப்படும் .அங்கு எமது பாடசாலைத் தோட்டத்தில் பூத்திருக்கும் மலர்களின் மீது தேன் அருந்த வரும் வண்ணத்துப்பூச்சிகள் ஒரு புறம் தேன்சிட்டுக்கள் மறுபுறம்.எமது பாடசாலையில் உள்ள நூலகத்தில் ஏறத்தாழ ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன.எமது பாடசாலையில் ஏறக்குறைய எழுநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.அதோடு முப்பது ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்கள்.எமது பாடசாலை முதல்வரின் பெயர் திருமதி.தியாகசோதி யவராஜா அம்மை ஆவார்.எமது பாடசாலையில் அதிபர் அலுவலகம், நூலகம்,சிற்றுண்டிச்சாலை,கணனி அறை,மலசலகூடம்,ஆசிரியர் ஓய்வு அறை போன்ற கட்டடங்கள் காணப்படுகின்றன. (06/06)
- நான் விரும்பும் பெரியார்
- இலங்கையின் அவசர தொலைபேசி எண்கள்
- ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை(Ozone Awareness Essay)
- ஈமெயில் மார்க்கெட்டிங் என்றால் என்ன ?
- வேப்பமரத்தின் பயன்கள்(Neem Tree)
diloshan
பாடசாலை மன்/நானாட்டான ஆரம்ப பாடசாலை. எனது பாடசாலை எழில் நிறைந்து காணப்படுகிறது.உயர்ந்த ஆலமரத்தின் நிழல் எம் பாடசாலையை பரவசப்படுத்துகிறது.பாடசாலைக்கு அருகே அழகான தேவாலயம் உள்ளது.என் வகுப்பறைக்கு முன்பே ஒரு அழகிய விளையாட்டு மைதானம் இருக்கின்றது. (06/06)
M.F. Saimah
எனது பாடசாலை எனது பாடசாலையாகிய ஸாஹிரா கல்லூரி வடமத்திய மாகாணத்தில், அனுராதபுர மாவட்டத்தில், அனுராதபுர நகரில் அமைந்துள்ளது. இப்பாடசாலையில் ஆயிரத்து ஐந்நூறிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதோடு எண்பதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கல்வி கற்பித்துக் கொடுக்கின்றனர். இங்கு கணினியறை, விஞ்ஞான ஆய்வுக்கூடம், நூலக வசதிகள் என்று எமது கற்றலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன.(06/06)
s.riththes
எனது பாடசாலை திருகோணமலை தி/தி/புனித சூசையப்பர் கல்லூரி. எனது பாடசாலை 1867ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி மாவட்டத்தில் மாத்திரமல்லது. தேசிய அளவிலும் பேசப்படுகின்றன ஒரு புகழ் பூத்த கல்விக் கூட்டமாகும். திருகோணமலை தலைநகரிலே தனக்கென தனியிடம் பதித்த குருளைச் சாரணர் குழுக்களைக் கொண்ட ஒரு விளையாட்டுத் தேசிய பாடசாலை எனது கல்லூரி ஆகும். கி.பி 1920 களில் சாத்தியம் ஆரம்பமாகியது.அதிபர் .ஆசிரியர்கள்.பாடசாலை அபிவிருத்தி சங்கம். பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் ஆதரவில் வெற்றி நடைபோடும் பிரசித்தி பெற்ற பாடசாலை. (04/06)
Shahfa
1) எனது பாடசாலை தென்மாகாணத்தில் நாவின்னை நகரில் அமைந்துள்ளது.
2) எனது பாடசாலை மைதானம் வட்டவடிவில் பச்சை பசேல் எனக் காட்சியளிக்கின்றது.
3) தென்மாகாணத்திலே எனது பாடசாலை முதலிடம் எனக் கருதப்படுகிறது.
4) எனது பாடசாலையில் ஐந்நூறிட்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளார்கள்.
5)எனது பாடசாலையில் வண்ண வண்ண பூச்சாடிகள் அழகாக நடப்படுகின்றன. (05/06)
B.Ashwin
எனது பாடசாலை வடமாகாணத்தின் வாசல் எனப்படும் வவுனியா நகரின் எழில் கொஞ்சும் பெரிய கோமரசன்குளம் எனுமிடத்தில் எனது பாடசாலை அமைந்துள்ளது. இங்கு எழுநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கல்வி கற்கின்றனர்.நாற்பத்தெட்டு ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். எங்கள் பள்ளி முதல்வரின் நாமம் திரு.சிதம்பரப்பிள்ளை வரதராஜா.இரண்டு பிரதி அதிபர்களை கொண்ட எமது பாடசாலையில் கலை.விஞ்ஞானம்.கணிதம்.வர்த்தகம்.போன்ற பிரிவுகளும் உண்டு. வருடந்தோறும் குறிப்பிட்டளவு மாணவ.மாணவிகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் பெருமை எங்கள் பள்ளிக்கே உண்டு. மூன்று மாடிக் கட்டடங்கள் எட்டுடன் ,விஞ்ஞான ஆய்வு கூடம்.கணணி அறை.மொழி அறை.கணித அறை.ஆங்கில அறை.மனையியல் அறை.நடன.சங்கீத.சித்திர அறை நூலகம்.ஆலோசனை வழிகாட்டல் அறை.பல்லூடக அறை. ஆசிரியர் ஓய்வறை.பொது மண்டபம். சிற்றுண்டிச்சாலை என பல உண்டு. எனது பெற்றோரும் இங்கேயே படித்து பட்டம் பெற்றதால் எனது பாடசாலையை நானும் நேசிக்கின்றேன். (06/06)
- பனை மரத்தின் பயன்கள்
- நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை
- சந்திரயான் 3
- கிட்னி செயலிழப்பு காரணம்
- செப்பேடுகள் என்றால் என்ன?
s.neha
எனது பாடசாலை மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியா எனும் இடத்தில் அமைந்துள்ள அழகிய எழில் கொஞ்சும் சென்ஜோசப் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலையை சுற்றி அனைவரது கண்ணை கவரும் பூஞ்செடிகளை நாட்டி அழகு படுத்தியுள்ளனர். இப்பாடசாலையில் அருகிலேயே கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர். அதுவும் ஒவ்வொரு சுவருக்கும் புதிய வர்ணம் தீட்டி புனர் நிர்மாணம் செய்து தற்பொழுது விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எனது பாடசாலையை நான் மிகவும் நேசிக்கின்றேன். (06/06)
M.A.M.Amhar
எனது பாடசாலை வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பொருக்குவட்டான் எனும் கிராமத்தில் அல் மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. எனது பாடசாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்களும்,முப்பத்தைந்து ஆசிரியர்களும் இங்கு உள்ளனர். எனது பாடசாலையில் நூலகம்,கண்ணி அரை,ஆசிரியர் ஓய்வு அரை,தொழுகை அரை,மற்றும் சிறுவர் பூங்கா,விளையாட்டு மைதானம் என்பவை எனது பாடசாலையின் மிகப்பெரிய வளங்கள் ஆகும். இதுவே எனது கிராமத்தில் உள்ள பாடசாலையின் பெருமையாகும். (04/06)
v. Thurka
எனது பாடசாலையின் பெயர் மன் /தலைமன்னார் துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை. இது தலைமன்னார் துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. எனது பாடசாலை அதிபரின் பெயர் திருமதி. ஜூடி குருஸ் ஆகும். இங்கு 13 ஆசிரியர்களும், 210 மாணவர்களும் உள்ளனர். எனது பாடசாலை கடல் பிரதேசத்தின் அருகாமையில் இயற்கை அழகு சூழ அமைந்துள்ளது. ஓங்கி வளர்ந்த பனைமரங்களும் அதனுடன் வரும் மெல்லிய தென்றலும் சேர்ந்த அமைதியான கற்றல் சூழலை கொண்டது எனது பாடசாலை. இங்கு பாடசாலை கட்டிடங்களோடு சேர்த்து அழகிய வண்ண பூங்காவும் அமைந்த்துள்ளது. எனது பாடசாலை மன்னார் மாவட்டத்தில் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக சிறந்து விளங்குவதோடு, ஊக்கத்தோடு வளர்ச்சியடைந்து வரும் பாடசாலை என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன். (05/06)
V.S.Srimitha
"எனது பாடசாலை. மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் எனும் நகரில் ஹைலன்ஸ் கல்லூரி அமைந்துள்ளது. எனது பாடசாலையில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். எனது பாடசாலை நூற்று இருபத்தைந்து ஆண்டுகளை கடந்த பலமையான பாடசாலை ஆகும். எனது பாடசாலையில் திருவள்ளுவர் சிலையும், விநாயகர் கோயில் உள்ளது. (05/06)
මට දෙමළ මගේ පාසල ගැන සිංහල තේරුමත් සමඟ වාක්ය 5 ක් එවන්න කෝ
ReplyDeleteඑවනවා ද
Delete