நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை

நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை


திருவள்ளுவர் ஒரு தமிழ் மொழிக் கவிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார். இவர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவர் எழுதிய திருக்குறள், உலகின் மிக முக்கியமான இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருக்குறள் 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு பழமொழியைப் போன்றது. திருக்குறள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது, அது ஒழுக்கம், நெறிமுறைகள், தத்துவம் மற்றும் வாழ்க்கையின் பொருள் பற்றியது. திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.




திருக்குறளை எழுதியவர் யார் in Tamil?


திருவள்ளுவர் ஒரு சிறந்த கவிஞர், தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் தனது எழுத்துக்களில், மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகள் மற்றும் நெறிமுறைகளைப் பற்றி விளக்கியுள்ளார். திருக்குறள், ஒரு மனிதன் எவ்வாறு சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாகக் கருதப்படுகிறது.

திருவள்ளுவரின் திருக்குறள், உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல், பல நாடுகளில் உள்ள மக்களால் படிக்கப்பட்டு போற்றப்படுகிறது. திருக்குறள், ஒரு மனிதன் எவ்வாறு சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாகக் கருதப்படுகிறது.

திருவள்ளுவர் நூற்றாண்டு என்ன?

இவர் வாழ்ந்த காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி எட்டாம் நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம் என சொல்லப்படுகிறது.

திருவள்ளுவர் இயற்பெயர் என்ன?

தமிழ் மக்கள் தம் வாழ்வில் நித்தம் வாசித்து, இன்புற்று, சிந்தித்து, தாமும் கடைபிடித்து, பிறருக்கும் எடுத்துக் கூறி உயர்ந்து வாழ உதவும், தமிழ் இலக்கிய நூல் திருக்குறளாகும். இத்திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” என்று தொடங்கி, இரண்டு அடிகளில் உலகத் தத்துவங்கள் மொத்தமும் ‘திருக்குறள்’ என்னும் படைப்பில் நமக்கு கொடுத்துள்ளார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் எங்கு, எப்போது, யாருக்கு பிறந்தார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், அவர் இயற்பெயர் என்ன, வாழ்ந்த இடம் எது என்ற விவரங்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்திருக்கலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள். இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.

திருவள்ளுவரின் வேறு பெயர் என்ன?


திருவள்ளுவருக்கு வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதர், மாதானுபங்கி, நாயனார், பொய்யில்புலவர், நான்முகனார், பொய்யாமொழிப் புலவர், தேவர், பெருநாவலர் என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு.

திருக்குறளுக்கு முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, வான்மறை, உலகப் பொதுமறை, என்ற வேறு பெயர்கள் உண்டு.

முப்பால் எனும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. திருக்குறளில் மொத்தம் 1330 இரண்டடி குறள்கள் உள்ளன. அவை 133 அதிகாரங்களின் கீழ், 10 குறள்கள் எனக் கொடுக்கப்பட்டுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

திருவள்ளுவர் வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியாதுப் போயினும் அவர் இயற்றிய திருக்குறள் நன்னெறி நூல் இன்றும் உலகளாவில் கொண்டாடப்படுகின்றது.

திருக்குறள் சாதி, மதம், இனம், மொழிகளை கடந்து, வாழ்வியல் நெறிகளை உலகின் அனைத்து மக்களுக்கும் எடுத்து கூறுவதால் இதனை உலகப் பொதுமறை என்கிறோம்.

அன்பு, அறம், அகிம்சை, நீதி, நேர்மை, நல்லொழுக்கம், அரசியல், நட்பு, கல்வி, குடும்பம், இன்பம், இயற்கை என வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய நெறிகளை, புரிந்து கொள்ள வேண்டிய தத்துவங்களை, வாழ்வியலை குறள் வெண்பாக்களில் நமக்கு திருக்குறளில் கொடுத்துள்ளார் வள்ளுவர்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்று பாரதியாரால் வள்ளுவர் புகழப்படுகிறார்.

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என ஔவையார் திருக்குறளை கூறியுள்ளார்.

ஔவையார் மட்டுமல்ல திருவள்ளுவமாலை என்னும் நூலில் திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் சங்கப் புலவர்கள் பலரும் பாடியுள்ளனர்.

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்று போற்றியுள்ளார் பாரதிதாசன்.

நமது பாரதத்தின் தந்தையெனப் போற்றப்படும் காந்தியடிகள் பிரஞ்சு மொழியில் திருக்குறளை படித்தப்பின் தான் தமிழ்ப் பயிலக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படிக்க வேண்டும் என்பதால் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டார் மட்டுமல்ல வெளி நாட்டு அறிஞர்களும் திருக்குறளை வாசித்து புகழாரம் சூட்டியுள்ளனர். இங்கிலாந்து பேரரசி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் கற்கும் நூலாகத் திருக்குறளை கொண்டிருந்தார்.

பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள, உலகப் புகழ் பெற்ற திருக்குறள், தமிழ் இலக்கியங்களிலேயே ஆகச்சிறந்த நூல் எனக் கருதப்படுகிறது. திருக்குறளால் உலக இலக்கிய அரங்கில் தமிழுக்கென ஒரு தனி இடம் கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இத்தகைய திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை போற்றும் வண்ணம் தமிழக அரசு ஜனவரி 15 ஆம் நாளை திருவள்ளுவர் தினமாக அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் நிகழ்வாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நாள் அரசு விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

பகுத்தறிவு சிந்தனைகள் கொண்டு, காலம் கடந்து, எல்லை கடந்து நிற்கும் திருக்குறளை நாம் தினம் வாசிப்பதும், அதன் வழி நடப்பதும், நம் அடுத்த சந்ததியற்கு எடுத்துச் செல்வதும், அதைக் கொடுத்த திருவள்ளுவரை நினைப்பதும் நம் கடமையாகும்.

திருக்குறள் எவ்வாறு போற்றப்படுகிறது?

குறுகிய செய்யுள் என்பதே “திருக்குறள்” ஆகும். திருக்குறல் நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் குறள் வெண்பா எனும் வெண்பா வகையைச் சேர்ந்தது. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆன முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். இந்த நூலினை உலக மக்கள் அனைவராலும் உலக பொதுமறை நூலாக போற்றப்படுகிறது.

திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் யார்?

வேணுகோபால் சர்மா தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் ஆவார். இவர் 17.12.1908 இல் அன்றைய சேலம் ஜில்லா காமாட்சிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.

திருக்குறள் எந்த எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 22 இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வருகிறது.

ஒரே சொல் 6 முறை வரும் குறள் எது?

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு" என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.

திருக்குறளுக்கு இணையாக போற்றப்படும் நூல் எது?

இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர் யார்?

போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது?

உலகப் பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அத்தனை மனிதர்களும் ஏற்கக் கூடிய பொதுவான நீதிகளை வள்ளுவம் சொல்வதால் அதற்கு அந்தப் பெருமை என்கிறோம்.


Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post