எனது நாடு அழகானது


இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்  

M.F. Saimah

*எனது நாடு நாற்புறமும் கடலால் சூழப்பட்டு இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் அழகிய தீவாகும்.

*அழகிய மலைகள், நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகள் என்பவற்றால் எனது இலங்கை நாடு மேலும் அழகு பெறுகின்றது.

*எனது நாடு உயர்ந்த மலைகளிலிருந்து பாய்ந்தோடும் அருவிகளாலும் இயற்கை அழகுடைய கடற்கரைகளாலும் வனப்பு மிக்கதாக காணப்படுகின்றது."(06/06)

மழைநாள் கட்டுரை (essay about rainy day)

சர்க்கரை நோய்  என்றால் என்ன? 

இணையம் என்றால் என்ன ?

M.A.M.Amhar

*எனது நாடு இந்தியாக்கு  தெற்குகே இந்து சமுத்திரத்தின் மத்தியில்  அமைந்துள்ளது.  

*எமது நாட்டில் இயற்கை வளங்களான திருகோணமலை துறைமுகம். எழில் கொஞ்சும் இயற்கை வளங்கள் நிறைய உள்ளது.  

*நான்கு பக்கம் கடலால் சூழப்பட்ட தீவு எமது இலங்கை நாடாகும். (05/06)


F.Saliha

1)இலங்கை  நாடானது  பல இயற்கை வளங்களை     தன்னகத்தே கொண்டமைந்த  ஓர் அழகிய  நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட  ஒரு தீவாகும்.

2) மத்திய மலை நாட்டிலே பச்சைப்பசேலென கண்ணுக்கு குளிர்ச்சி தரும் தேயிலைத்தோட்டங்களும்,  இறப்பர் தோட்டங்களும்  இன்னும் எழில் சேர்க்கின்றன.

3) பல ஏரிகளும்,  வானைத் தொடும் நீர்வீழ்ச்சிகளும், இடைக்கிடை பரந்த ஆறுகளும் கடவுளின் கைவண்ணத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். (06/06)


t.akshaja

*எமது நாடு இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள அழகிய முத்தாகும்.

*இங்கு திருகோணமலையில் அமைந்துள்ள  இயற்கை துறைமுகமானது  நாட்டின் அழகினை மெருகூட்டுகிறது.

*மலைநாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகள்,மலைகள்,பேராதனை தாவரவியல் பூங்கா என்பன மேலும் மேலும் எமது நாட்டிற்கு அழகு சேர்கின்றது. "(06/06)


s.riththes

 எமது நாடு இலங்கை இயற்கையில் அழகு நிறைந்தது. இலங்கை நாற்புறமும் காதலால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.இது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இலங்கையை ஸ்ரீலங்கா, தப்பினேன் , ஈழம் ,இரத்தினதுவீபம் என் பல பெயர்களில் அழைப்பார்கள். (04/06)


M.R Manha

எமது நாடு நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஓர் அழகிய தீவாகும். 

*வான் உயர எட்டி நிற்கும் மலைத்தொடர்களும் அதிலிருந்து பாய்ந்து வரும் அருவிகளும் இயற்கை அன்னை எம் நாட்டிற்கு அளித்த கொடைகளாகும். 

*எமது நாட்டின் அழகை இரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். (06/06)


V. Thurka

எனது நாடு இலங்கை. இது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவாகும். இது  இந்து சமுத்திரத்தின் முத்து என்ற சிறப்பு பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறது. 

அழகிய  நீல கடல் பொன்னிற  மணல் பறப்போடு கரையோரத்தினை  அழகு செய்ய , மத்யபிரதேசத்தில் பச்சை பசோல் என குறிஞ்சியும், குறிஞ்சி சார் இடமும் மிகவும் ரம்மியமாக அழகுக்கு அழகு சேர்ந்து  கொண்டிருக்கும் இயற்கை எழில் நிறைந்தது  நாடு எனது நாடு.\

ஏலம், கறுவா, முத்து, மாணிக்கம் ஏற்றுமதி செய்வதில் சிறந்து விளங்குவது எனதுநாடு. 

பன்முக கலாச்சாரம் , பலமொழி பேசும் நாடு இது       என்பதனாலும் அந்நியர்களின் வருகை அமோகமாக கொண்ட நாடு எமது நாடு. 

இயற்கை துறைமுகம். இயற்க்கை அதிசயங்களும் தன்னகத்தே கொண்டு இந்து சமுத்திரத்தில் தனக்கென தனி இடம் கொண்டு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக விளங்குவது எமது நாடு என்பதில் மிகவும்  பெருமை. (04/06)


B.Ashwin

இயற்கையாகவே அழகு நிறைந்தது எம் நாடு.இலங்கையை இரத்தின துவீபம்.ஆசியாவின் வைரம் .இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுவதுண்டு.நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட ஓர் அழகிய தீவாகும்.இங்கு விண்ணைத் தொடும் மலைகளும்.எப்போதும் வற்றாத ஆறுகளும்.பரபரப்புடன் பாயும் நீர்வீழ்ச்சிகளும்.பச்சைக்கம்பளம் போர்த்திய தேயிலைத்தோட்டங்களும்.எமது நாட்டை இன்னும் அழகாக்குகின்றன. பொன்நிறமான கடற்கரைகளும்.பனிபடர்ந்த காடுகளும்.பசுமையான  புல்வெளிகளும்.தலையாட்டும் வயல்வெளிகளும்.புனிதமான நகரங்களும்.ஓங்கி  உயர்ந்த மரங்களும் இலங்கையின் அழகுக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன.உல்லாசபயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் எமது நாடும் ஒன்று என்பதில் பெருமைப்படுகின்றேன்.பல இனத்தவர் ஒற்றுமையுடன் வாழும் தேசமாகும்.பல கலாசாரங்களை தன்னகத்தே கொண்ட நாடாகும்.உண்மையிலேயே இலங்கை ஓர் சொர்க்கபுரித் தீவாகும்." (06/06)


diloshan

எமது நாடு  இயற்கை வளங்கள் வாய்ந்த நாடு.எங்கள் நாட்டில் ஆசியாக்கண்டத்தின் மிகவும் உயரமான கோபுரம் உள்ளது.என் நாட்டில் தேயிலை,இறப்பர் ஆகிய இரு உற்பத்திகள் நடைபெற்று வருகிறது. எமது நாட்டில் ஒர் இயற்கை துறைமுகம் உள்ளது.எனது நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள் உள்ளன. "(06/06)


V.S.Srimitha

எனது நாடு இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுகின்றது.

எனது நாடு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ளது.

எனது நாடு நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு  அழகிய தீவாகும்.

எனது  நாடு இயற்கை துறைமுகத்தை கொண்டுள்ளது.

எனது நாடு மலைகள், நதிகள் ,நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது

எனது நாட்டில் புகழ் பெற்ற அழகிய சுவர் ஓவியங்களைக்கொண்ட சீகிரியாக் குன்று அமைந்துள்ளது.(06/06)



s.neha

"(1) எமது நாடு இந்து சமுத்திரத்தின் மத்தியில் நாற்புரமும்    கடலால் சூழப்பட்டு காணப்படும் ஓர் அழகிய தீவாகும்.

(2)இயற்கை வளங்களை கொண்ட இந்த நாட்டில், ஏராளமான பிரசித்தி பெற்ற இடங்களும், வணக்கஸ்தலங்களும் காணப்படுகின்றன.

(3)இங்கே முக்கியமாக தேயிலை, இறப்பர், தென்னை போன்ற தாவரச்செய்கைகள் அதிகமாக காணப்படுகின்றன.

(4)இலங்கையை நாம் தம்பன்னி, செரண்டிப், தப்ரபேன், சீல துவீபம், சீலயி, செயிலான், செயிலாவோ, சிலான், சிலோன், ஈழம் எனும் பெயர்களால் அழைப்பதுண்டு.

(5)அத்துடன் மூவின மக்களும் வழிபடும் புனித இடமாக சிவனொளிப்பாதமலை மற்றும் கதிர்காமம் விளங்குகின்றது.

(6)இலங்கையின் மொத்தப்பரப்பளவு 65610 சதுரகிலோமீற்றர்களும் மொத்த நீளம் 433 கீலோமீற்றராகவும் மொத்த அகலம் 226 கீலோமீற்றராகவும் காணப்படுகின்றது.

(7)இலங்கையின் வரலாற்றை நாம் தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற காவியங்களினூடாக அறியலாம்.

(8)இலங்கையின் உயரமான மேட்டிநிலமாக ஹற்றனும் உயரமான குன்றாக கொக்காகல குன்றும் உயரமான அணைக்கட்டாக விக்டாரியா அணைகட்டும் உயரமான மலையாக பேதுருதாலகால மலையும் உயரமான நீர்வீழ்ச்சியாக பம்பரகந்த நீர்வீழச்சியும் காணப்படுகின்றது.

(9)இலங்கையின் தேசிய வனமான சிங்கராஜ வனத்தில் இலங்கைக்கே உரித்தான தாவரங்களும், அதிசிய தாவரங்களும் வளர்கின்றன.

(10)இலங்கையின் தேசிய மரம் நாகமரமும் தேசிய மலர் அல்லி மலரும் தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டமும் தேசிய பறவையாக காட்டுக்கோழியும் விளங்குகின்றன." (06/06)

மேலும் அறிந்து கொள்ள....


இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி யார்?

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றப்பட்டதன் பின்னர், கட்சி சார்பின்றி பதிவியேற்ற இலங்கையின் இலங்கையின் முதல் ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ ஆவார்.

இலங்கை அமைந்துள்ள சமுத்திரம் எது?

இலங்கை, இந்தியாவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடாகும்.

லங்கா எனும் பெயரில் இருந்த நாடு எந்த அரசியல் யாப்பின் பெயர் மாற்றப்பட்டது?

எனினும், இது உடனடியாக அடக்கப்பட்டது. 1972ல் மேலாட்சி நிலை ஒழிக்கப்பட்டு நாடு குடியரசானது. நாட்டின் பெயரும் சிறீ லங்கா என மாற்றப்பட்டது. சிறுபான்மையினருக்கெதிரான அடக்குமுறைகளும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களால் தூண்டப்பட்ட இன உணர்ச்சியும் 1970களில் வட பகுதியில் தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வழிகோலின.

ஜனாதிபதி ஆட்சி முறை என்றால் என்ன?

குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு இந்திய அரசு மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது.

இலங்கை தமிழர்கள் யார்?

இலங்கைத் தமிழர் அல்லது ஈழத்தமிழர் (Sri Lankan Tamils) என்னும் தொடர், இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத்தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவளித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு.

இலங்கையின் மிகப் பெரிய குளம் எது?

இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது

இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டம் எது?

இலங்கை அரசின் மக்கட் தொகை கணக்கெடுப்பின் இடைக்கால அறிக்கையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வட மாவட்டங்களில், ஒரு சதுர கிலோமீட்டரில் நூற்றுக்கும் குறைவான மக்களே வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கட் தொகை அடர்த்தியை பொறுத்தவரையில் கொழும்பு மாவட்டமே முன்னிலை வகிக்கிறது.


Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post

Advertisement

Advertisement