MrJazsohanisharma

வாக்கியம் அமைக்குக - 03 (வாசிப்பு மனிதனை பூரணமாக்குகின்றது)

வாசிப்பு, மனித வாழ்க்கையின் முக்கியமான ஒரு அம்சமாகும். இது அறிவை வளர்க்கும், மன அமைதியைக் கொண்டுவரும் மற்றும் தனித் தன்மையை உருவாக்கும் ஒரு அத்தியாவசிய கருவியாக செயல்படுகிறது. வாசிப்பு மனிதனை பூரணமாக்குவதில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிக்கலாம்.

அரசியல் வளர்ச்சி:

வாசிப்பு, நமக்கு புதிய தகவல்களை வழங்குகிறது. இதனால் நாம் உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும் மற்றும் அறிவை விருத்தி செய்ய முடியும். புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நமக்கு அறிவியல், அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு மாற்றங்களை பற்றிய தகவல்களை வழங்குகின்றன.

தன்னிறைவாக்கம்:

நூல்கள் மற்றும் கதைகள் நமக்கு தற்காப்பு மற்றும் சுயமனத்தை மேம்படுத்த உதவுகிறது. மனிதன் தனித்துவமான எண்ணங்களை உருவாக்கி, தன்னைத்தானே அறிந்துகொள்ளும் வாய்ப்புகளை பெறுகிறான். இது அவரின் தனித்துவத்தை வளர்க்கும் மற்றும் நெருக்கமான தன்மை உள்ள ஆவணங்களைப் பெறும் வாய்ப்புகளை வழங்குகிறது.

மன அமைதி:

வாசிப்பு, மன அமைதியை வழங்குகிறது. புத்தகங்கள் மற்றும் கவிதைகள் மனதை அழுத்தமில்லாமல், சந்தோஷமாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் மனதின் அமைதியை ஊக்குவிக்கிறது.

சமூக மற்றும் பண்பாட்டு புரிதல்:

வாசிப்பு, உலகளாவிய விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இது நமக்கு பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார உரையாடல்களை எளிதாக புரிந்து கொள்ள உதவுகிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளின் பண்பாட்டையும், வாழ்க்கை முறைகளையும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

அழகு மற்றும் சுகாதார உறவுகள்:

புத்தகங்கள் மற்றும் கவிதைகள், மொழியின் அழகை நமக்கு வழங்குகின்றன. இது நமது அழகியல் செருகலை மேம்படுத்தி, சுயநம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. இது நமக்கு நமது தற்காப்பு மற்றும் அன்புக் கண்வூட்டுகளுக்கு உதவுகிறது.

(B.Ashwin)

1.வாசிப்பு என்பது எதிர்கால வெற்றிக்குரிய ஒரு திறவுகோலாகும்.

2.தற்கால  உலகத்தில் திறமையாக தொழிற்படுவதற்கு வாசிப்பு ஒரு அடிப்படை தேவையாகும்.

3.சுவராஸ்யமான வாசிப்பின் மூலம்  ஒருபுறம் மகிழ்வும் இன்னொரு புறம் அறிவு வளர்ச்சியும் ஏற்படுகின்றது



T.abinusha

1.வாசிப்பதால் வாசிப்புத்திறனும் பேச்சுத் திறனும் உயர்வடைகின்றது.

2.புது விடயங்களை மிக விரைவில் அறிந்துகொள்ளமுடிகின்றது.
3 . வாசிப்பது மிகவும் சிறந்த ஒரு பொழுதுபோக்காகும்.


M.F.Saimah

1,மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

2,நாம் பல நூல்களை வாசிக்கும் போது எமது வாசிப்பு திறன் வளர்ச்சியடைவதோடு எமது அறியாமையும் நீங்குகின்றது.
3,எனவே நாம் அறிவுக்கு விருந்தளிக்கும் அனைத்து நூல்களையும் வாசித்து எம்மை பூரணப்படுத்தி எமது வாழ்வை வெற்றியின் பாதையில் இட்டுச்செல்வோம்.


S.நேஹா

1,வாசிப்பு என்பது ஒரு மனிதனை பூரணமாக்குவது மட்டுமின்றி வாசிப்பு திறனையும் கூட்டுகின்றது.

2,வாசிப்பதன் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம். 3,வாசிப்பு திறன் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது. P. Yeharshwan 1,மாணவர்கள் ஆகிய நாங்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் பேசும் திறனை மேம்படுத்த முடியும் 2,மேலும் பல புதிய தகவல்களை அறிய முடிகிறது 3,வாசிப்பு ஒரு மனிதனை முழுமை ஆக்குகிறது Diloshan வாசிப்பு மனிதனிதனிற்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும் . வாசிப்பபால் மனிதனிற்கு மகிழ்ச்சியும் அறிவும் கிடைக்கிறது . அதேநேரம் வாசிப்பு ஒரு பொழுதுபோக்காகும் அமைதகிறது. M.INOJ EBIN
வாசிப்பு என்பது ஒவ்வொரு மாணவருக்கும் இருக்கவேண்டிய ஒரு நல்ல பழக்கம் ஆகும் .இதனால் எமக்கு பல தெரியாதவிடயங்களையும் அறிந்திட முடியும் இதனால் மாணவர்களாகிய நாம் கல்வியில் சிறந்து விளங்க முடியும்


TAkshaja

*காலை எழுந்தவுடன் பத்திரிகையை வாசிபதனால் உலகில் மூலை முடுக்கிலும் நிகழும் முக்கியமான சம்பவங்களையும் பத்திரிகை
நமக்கு தருகின்றது.

*மாணவர்கள் அறிவியல் சம்பந்தமான விடயங்களை புத்தகங்கள், பத்திரிகைகள்,சிறுவர் நீதிநூல்கள் என்பவற்றை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்கின்றனர்.
*மக்களுக்கு பயன் தரும் விடயங்கள் பற்றிய கட்டுரைகள் என்பவற்றையும் பெறுவதற்கு பத்திரிகைகள் கதைப்புத்தகங்கள் என்பவற்றை வாசிப்பது பயன் தரும் பொழுது போக்காகவும் அமைகின்றது.


F.Saliha


1) புத்தகங்களை வாசிப்பதால் எமக்கு பொது அறிவு விருத்தி அடைவதுடன் சமுதாயத்தில் சிறந்த அறிஞர் ஆகலாம்.

2)எமது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க வாசிப்பு உதவுகிறது.
3)மாணவராகிய நாம் வாசிப்பதனால் எழுத்துப் பிழையின்றி எழுதுவதற்கு பயிற்சியாகவும் வாசிப்பு உறுதுணையாகின்றது.

K.RUBESH

1) மனிதன் வாசிக்க வாசிக்க அவனது கல்வி அறிவு கூடும்
2) நாம் சிறு வயதில் இருந்து நல்ல கதைப்புத்தகங்கள், பத்திரிகைகள் அறிவு சார்ந்த அம்சங்களை வாசிப்பதால் எமக்கு நல்ல அறிவுக கிடைக்கும்
3) ஒருவரை நல்ல மனிதனாக வாழ வைப்பதற்கு வாசிப்பு மிக முக்கியமாக அமைகின்றது


V. Thurka

1.மனித மேம்பாட்டுக்கும்,
அறிவு வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் வாசிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். இதனால் தான் "வாசிப்பு ஒரு மனிதனை புராணமாக்குகிறது" என சிறப்பாக சொல்லப்படுகிறது.

2.வாசிப்பு என்பதன் பொருள் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தப்படவேண்டும்.அதாவது வாசிக்கும் போது கண்கள் மட்டுமோ அல்லது வாய் மட்டுமோ வாசிக்க கூடாது ஆழமாகவும், நிதானமாகவும் விடயத்தை உள்வாங்கி மனதில் பதித்துக்கொள்ளவேண்டும் அப்பொழுது தான் அது ஒரு நிறைவான வாசிப்பாக அமையும்.
3. வாசிப்பின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் பொருட்டே ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடங்கி 31ம் திகதிவரை வாசிப்பு மாதமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.


M.U Hiba Zyenab
1,பல வகையான புத்தகங்களை வாசிப்பதால் அறிவு உண்டாகும்.

2,வாசிப்பதால் எமது மூலை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

3,புத்தகங்களை வாசிப்பதால் தாமே சுயமாக கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதலாம்.







Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post