MrJazsohanisharma

அழகிய அந்தி மாலை நேரம் ... (20/12/2020)

இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்  



(Purushothman kiruththish)

மாலைக் கதிரவன் மேற்கு வானில் தங்கத் தகடு போல் அழகாகத் தோன்றுவான்.

இரை தேடச் சென்ற பறவைகள் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பும்.

வானத்தில் மேகக் கூட்டங்கள் கண்ணுக்கினிய பல வர்ண நிறங்களில் காட்சி தரும்.    (05/06)



(M.F. Saimah)

அழகிய அந்திமாலை நேரம்.

*அழகிய அந்திமாலை வேளையில் சூரியன் தகதகவென நெருப்புப் பந்து போல காட்சியளித்தான்.

*மேய்ச்சலுக்காக சென்ற  ஆவினங்கள் இருப்பிடம் நோக்கி நிரை நிரையாக திரும்பிக்கொண்டிருந்தன.

*இருள் அரக்கன் உலகை மூடிக்கொள்ளும் வேளை கருமேகங்கள் வானில் புடைசூழத்தொடங்கின. (06/06)



(V.S.Srimitha)

அழகிய அந்தி மாலை மேற்கு வானில் சூரியன் தனது பொற்கரங்களை பரப்பிக்கொண்டு மறைகின்றான். 

பறவைகள் தனது இருப்பிடத்தை நோக்கி விரைவாக பறந்து செல்கின்றன. 

நீலச் சேலையில் தங்கப் பொட்டுகள் போல நட்சத்திரங்கள் மின்ன ஆரம்பித்தன.(05/06)



 (M.A.M.Amhar)

1.அழகிய மாலைப் பொழுதில் சூரியன் செம்மஞ்சல் நிறத்தில் காட்சி அளித்தான். 

2.இறை தேடிச்சென்ற பறவைகள்,மிருகங்கள் தம் இருப்பிடம் நோக்கி செல்கின்றன.

 3.காரிருள் மேகங்கள் சூரியனை மறைத்து நிலவின் ஒளியை உலகெங்கும் பரப்புகின்றன.(04/06)



(t.akshaja)

1.ஆதவன் தன் சூட்டைக்குறைத்து மேற்குவானில் தங்கத்தாமரை போல் காட்சி தருகின்றான்.

2கருநீலக்கடலும் நிலவானும் ஒன்றை ஒன்று தொடும் காட்சி என் மனதை வியப்புக்குள்ளாக்கியது.

3.கடற்கரையில் சிறுவர்கள் வண்ண வண்ண பலூன்பறக்கவிட்டு  மகிழ்ச்சியடையும் காட்சியும் நீருக்குள் காணப்படும் கற்பாறைகள் கருமைநிற எருமைகள் போல் காணப்பட்டதைக் கண்டு மனமகிழ்ச்சியடைந்தேன்..(05/06)



(s.riththes)

அழகிய அந்தி மாலை நேரம்  காலையில் சூரியன் மேலே எழும்பி வருவது சூரிய உதயம். மாலையில் மேற்கே மறைவது அந்தி மாலை நேரம். காட்சிகளில் மாலைகண்காட்சியும் சிறந்த தொன்றாகும் .அமைதியாகும் நேரமே சாலையாகும். காலையும் இரவும் சேர்ந்து போல் அழகிய மஞ்சள் நிறத்தில் தோன்றும் அந்தி வேளை. (04/06)


(s.neha)

மாலைநேரத்தில் பகலவன் தன் பொற்சுடர்களை  வீசிக்கொண்டு மேற்கு வானில் தன் கடமைகளை  நிறைவேற்றி மறையும் காட்சி அழகோ அழகு.

*அத்துடன் நிலவு மகள் தன் கடமைகளை நிறைவேற்ற மெதுமெதுவாக மேலெழுகிறாள்.

*காகங்களும் மற்றும் சில பறவைகளும் உணவுகளை எடுத்துக்கொண்டு தன் வாழ்விடத்தையும் குஞ்சுகளையும் தேடிக்கொண்டு பறந்து செல்கின்றன.(06/06)


(v. Thurka)

இதுவரை நேரமும் சுட்டெரிக்கும் வெப்பத்தை            அனலாய்   பரப்பிய ஆதவன்  இப்பொழுது  தன் நிலையில் சற்று இறக்கத்தை  கொண்டவனாய்  மெல்லிய இளம் மஞ்சள்    நிறத்தில் அதாவது பகலும் அல்லாது, இரவும் அல்லாது இரண்டும் கலந்த மாலை பொழுதாய்  மனதுக்கு ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தான். காற்றிலே பஞ்சு திரள்கள் பறந்தோடுவது போல் மேகக்கூட்டங்கள்  வானிலே தவழ்ந்து கொண்டிருந்தன. வானிலே பறவைகள் தங்களுக்குரிய கூவும் மொழிகளில்,  இனிமையாக  கீச்சிட்டுக்கொண்டே உறைவிடம் நோக்கி பறந்து கொண்டிருந்தன. உணவு தேடி சென்ற விலகினமும் அவசர,  அவசரமாக  குளக்கரையிலே  நீர் அருந்தி விட்டு ஓய்விடம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் காட்சி இயற்கைக்கு மேலும் அழகு சேர்த்தது. கீழ்வானில் கதிரவனும் மெல்ல, மெல்ல ஒலிந்துகொள்ளும் அந்த காட்சி கொள்ளை அழகாக இருந்தது. (04/06)



(M. A. R. M. Faatik)

மாலைக்காட்சி மனதுக்கு இன்பம் தருகின்றது.செங்கதிரவன் மறையும் செவ்வானக் காட்சி பார்ப்போரை பரவசப்படுத்துகின்றது.மாலைப்பொழுதில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தனது கூட்டை நோக்கி பறக்கும் காட்சி கண்ணுக்கு ரம்யமாக உள்ளது.ஓளி மெல்ல மெல்ல மறைந்து இருள் சூழ ஆரம்பிக்கின்றது. (04/06)


(B.Ashwin)

இயற்கைத் தாயானவள் எம் கண்களுக்கு விருந்தாக அர்ப்பணிக்கும் காட்சிகளில் மாலைக்காட்சியும் ஒன்றாகும்.பகல் முழுவதும் இயந்திரமாக ஓடியாடி உழைக்கும் மனிதர்கள் முதல் பாடிப்பறக்கும் புள்ளினங்கள் வரை அமைதியாகும் நேரமே மாலையாகும்.                         

வான மகள் நாணி வெட்கத்தினால் ஒளிந்து கொள்ள நிலவு மகள் தோன்றும் காலமே இதுவாகும்.மேற்குத்திசை செக்கச்செவேல் என சிவக்கிறது.அங்கே பரவியிருந்த வெண்முகில்கள்   தீப்பற்றி எரிவது போல் காட்சி தருகின்றன.

மல்லிகையும் முல்லையும் மொட்டவிழ்ந்து சிரிக்கின்றன.பொய்கையிலே தாமரை மலர் குவிகிறது.புள்ளினங்கள் தங்கள் கூட்டை நோக்கி விரைகின்றன.கால்நடைகள் தத்தம் வீடு நோக்கி செல்கின்றன.வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்புகின்றனர்.பெண்கள் வீடு துடைத்து விளக்கேற்றுகின்றனர்.விளையாடிய சிறுவர் வீடு திரும்புகின்றனர்.படிக்கத் தொடங்குகின்றனர்.ரம்மியமான மாலை வேளையை ஆனந்தத்துடன் அனுபவிப்போம்.(06/06)


(K.RUBESH)

மேற்கு வானில் கதிரவன்  செம் பொற்குடம் போல்  காட்சி தருகிறான். 

2) இரை தேடச்சென்ற பட்சிகள் இருப்பிடங்களுக்கு  விரைந்து செல்கின்றன.

3) தொழிலாளர்கள் தமது கடமைகளை முடித்துக் கொண்டு வீடு களுக்கு செல்கின்றார்கள். (05/06)


(M.R Manha)

மேற்கு வானில் சூரியன் செந்நிற பந்து போல் காட்சியளித்தான். 

காலையில் இரை தேடிச்சென்ற புள்ளினங்கள் தம் இருப்பிடம் நோக்கி கூட்டங் கூட்டமாக திரும்பின.

பூமித் தாய் மெல்ல மெல்ல இருள் எனும் ஆடை அணியத் தொடங்கினாள்.(04/06)


Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post