MrJazsohanisharma

நான் கண்டு கழித்த அழகிய மிருகக்காட்சிச்சாலை (14/12/2020)

இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்  

நான் சென்ற மிருகக்காட்சி சாலை மிகவும் அழகானது.

*அங்கு இருந்த மிருகங்களினதும் பறவைகளினதும் மீனினங்களினதும் பல வண்ணநிறங்கள் என் கண்களை கவர்தது.


*அதில்   புள்ளி மான்கள் துள்ளிக்குதிக்கும் அழகும் குரங்குகள் மரங்களில் தாவிக்குதிக்கும் அழகும் என்னை மகிழ்வித்து.     (t.akshaja)  (05/06)




"1.நானும். நண்பர்களும் மிருககாட்சி  சாலைக்குள் சென்றும்.    


 2.வண்ண மீனவர்களும்,பெரிய  ஒட்டகச்சிவிங்கியும்,கண்ணைக் கவரும் நிறங்களில் வண்ணத்துடன் பூச்சிகள் கண்டோம்.


3.யானைகள் சாகசம்  செய்வதைப்  பார்த்து  மகிழ்ச்சி  அடைந்தோம். "   (M.A.M.Amhar) (04/06)




"*நான் சென்ற மிருகக்காட்சிசாலையில் ஏராளமான விலங்குகள், பூச்சியினங்கள், மீனினங்கள் என்பன காணப்பட்டன.\*


அங்கே "அங்கு பல உயிரினங்களைக் கண்டு மகிழ்ந்தேன். மிருகக்காட்சி சாலையின் ஒரு பகுதியில் இருந்த வண்ண வண்ண மீன் இனங்களைக் கண்டுகளித்தேன். பின்னர் பஞ்சவர்ணக் கிளி, பறவைகள், முதலை, மான்கள், வரிக் குதிரை, குரங்குகள், காண்டாமிருகம், யானை, சிங்கம், புலி என பல வகையான உயிரினங்களைக் கண்டுமகிழ்ந்தேன்.  (s.neha) (04/06)



"நான் சென்ற மிருகக் காட்சிச்சாலை மிகவும்\ இரசனைக்குரியது.அது கொழும்பில் உள்ளது.தெகிவளை மிருகக் காட்சி சாலைதான் து.அங்கே பல மிருகங்கள். பறவைகள். ஊர்வன. நீர்வாழ் உயிரினங்கள் ஈரூட வாழி என பலவற்றை கண்டேன்.அவற்றை பார்க்க பயமும்.பிரமிப்பும் ஒருங்கே வந்தன.அவைகளை பராமரிக்க பராமரிப்பாளரும் இருந்தனர்.அங்கே எனக்குப் பிடித்த ஓரிடம் மீன்கள் அதிகம் காணப்பட்ட இடம்தான்.கடலுக்குள் நிற்பது போன்ற ஓர் உணர்வை தந்தது."   (B.Ashwin) (05/06)




"நான் கண்டு கழித்த மிருகக்காட்சிச் சாலை மிக வியக்கத்தக்கதாக இருந்தது .அங்கே இருந்த பல மிருகங்கள் அவைகளின் சுதந்திரத்தை இழந்த நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது .இருந்தாலும் அவைகள் என்னுடைய கையில் இருந்த உணவுப் பொதியை அவதானித்தது .நான் அவைகளுக்கு என்னிடம் இருந்த உணவை கொடுக்க முயன்ற போது குறும்பு கார குரங்கு அதை பறித்து விட்டது .மேலும் பல சுவாரசியமான பல விடயங்களை அவதானித்து கழித்து விட்டு வீட்டு வவந்தேன் .." (M.INOJ EBIN) (05/06)




"*நாங்கள் மிருகக்காட்சி சாலையை பார்த்துக் கொண்டு செல்லும் போது மயில் ஒன்று தோகை விரித்தாடியது. 


*யானை சாகாசம் பார்க்கும் போது யானைகள் தாளத்திற்கு ஏற்ப ஆடின.


*அங்கிருந்த தடாகமொன்றில் பலவண்ண மீன்கள் கண்கொள்ளா காட்சியாக இருந்தன."(M.R Manha) (05/06)




"நான் கண்டு களித்த அழகிய மிருகக்காட்சிசாலை.


*எமது நாட்டின் தேசிய மிருகக்காட்சி சாலையான தெகிவளைக்கு பலவிதமான விலங்குகளை கண்டு களிக்க சென்றிருந்தேன்.


*அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் தனது கழுத்தை நீட்டிக்கொண்டு மரங்களிலுள்ள இலைகுழைகளை உண்டுகொண்டிருந்தன.


*வண்ண வண்ண மீன்களெல்லாம் கண்ணாடிப் பெட்டியினுள் நீந்திய காட்சி என்னைப் பரவசப்படுத்தியது.


*யானைகளின் நடனம், விளையாட்டு என்பன காண்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது." (M.F.Saimah) (05/06)




Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post