MrJazsohanisharma

எனது முதற் புகைவண்டி பிரயாணம்

 இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்  

(P. Yeharshwan)
எனது முதல் புகை வண்டி பயணத்தை கொழும்பு நோக்கி மேற்கொண்டேன்
போகும் வழியில் பல இடங்களில் மிருகங்கள், பறவைகள்   போன்றவை மேலும் கண்களுக்கு விருந்தானது
மலை குகைக்குள் ரயில் சென்றதும் நாங்கள் பயந்து விட்டதை இன்னும் மறக்க முடியாது (05/06)


(U.Haasini)
நான் முதல் முதல் புகைவண்டியில் சென்ற போது எனது மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
நான் புகைவண்டியில் சென்ற போது மரம் செடி,கொடி போன்றவற்றை ரசித்து மகிழ்ந்தேன்
நான் புகைவண்டியில் சென்ற போது வயல் வெளிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றை கண்டு மகிழ்கிதேன்  (05/06)


(M.F. Saimah)
எனது முதற் புகைவண்டி பயணம் நான் முதன்முதலாக யாழ்தேவி எனும் புகைவண்டியில் அனுராதபுரத்திலிருந்து எமது நாட்டின் பிரதான நகரான கொழும்புக்குச் சென்றேன்.
இப்புகைவண்டிப் பயணம் எனக்கு மிகப் புதுமையாகவும் பரவசமாகவும் இருந்தது.
 இப்பயணத்தின்போது இரு பக்கங்களிலும் பச்சை பசேலென காணப்பட்ட வயல்வெளிகளினதும், காடுகளினதும் ரம்மியம் என்னால் என்றும் மறக்கவே முடியாது (06/06)


(M.R Manha)
எனது முதல் புகைவண்டிப் பிரயாணம் என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவமாகும். குருநாகலில் இருந்து மாத்தறை வரை மிக நீண்ட நேர பயணமாக அமைந்தது. கொழும்பில் இருந்து மாத்தறை சென்றடையும் வரை கடற்கரை ஓரமாகவே நாம் பயணம் செய்த காட்சி பசுமரத்தாணி போல் என் மனதில் பாதித்துள்ளது(05/06)

(s.mithusha)

நான் முதல் முதலாக எனது பிறந்த தினமன்று புகையிரதத்தில் சென்றேன்

நான் புகையிரதத்தில் சென்ற போது பல இனிய காட்சிகளைக் கண்டேன்.

நான் புகையிரதத்தில் எனது குடும்பத்தோடு மிருகக்காட்சிச்சாலைக்குச் சென்றேன்  (05/06)


(F.Saliha)

எனது முதற் புகைவண்டி பிரயாணம் நான் பதுளைக்குச் செல்வதற்கு உற்சாகமாக கண்டி புகையிரத  நிலையத்திலுள்ள புகைவண்டியில்  ஏறி  யன்னல் ஓரத்தில்  இருக்கும் ஆசனத்தில்   ஆனந்தமாக அமர்ந்துக் கொண்டேன்.

புகையிரத  வண்டியில் பயணிக்கும் போது இரு பக்கங்களிலும் இருக்கும் மலைத் தொடர்கள் வானத்தைத் தொடுவது போன்ற காட்சி ரம்மிதமாக இருந்தது.

ஊற்றெடுக்கும் நீர்வீழ்ச்சிகளும் பச்சைப் பசேலென காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்களும் வளைந்து வளைந்து செல்லும் புகையிரதமும் என் மனதுக்கு மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்தது  (06/06)


(K.RUBESH)

எனது முதலாவது புகைவண்டி பயணம் கொழும்பில் இருந்து மத்திய மலைநாடான கண்டிக்கு சென்றது புகைவண்டி அழகான மலைத் தொடர்கள், சுரங்கங்கள் வழியே பாம்பு செல்வது போல வளைந்து நெளிந்து அழகாக சென்றது. கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் மலைத் தொடர்களில் இருந்துபனி மூட்டங்கள் வானைதொடுவது போல மிக அழகாக காட்சியளித்தது.  (05/06)


(s.neha)

எனது முதற் புகைவண்டிப்பிரயாணமானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அதன் போது புகைவண்டி கடகட என கூச்சலிட்டவாறு மிகவும் வேகமாக சென்றதால் எனக்கு பயமாகவும் குதூகலமாகவும் இருந்தது.அங்கிருந்த ஜன்னலீனூடாக பார்த்தபோது ஏராளமான மரஞ்செடிகொடிகள் காணப்பட்டன.  (05/06)


(M.A.M.Amhar)

எனது முதல் பயணமானது நானும்,என் குடும்பத்தில் உள்ளவர்களும் கொழும்புக்கு புகைவண்டியில் சென்றது தான் மறக்கமுடியாத  பயணமாகும்.  

புகைவண்டியானது ஆடிஆடி வலைந்து நெலிந்து காடு மேடுஎல்லாம் சென்று கொண்டிருந்தது.                   

பச்சைக்கம்பளம்  விரித்தது போல் வயல்களும்,ஆங்காங்கே வீடுகளும்,நீர் ஓடைகளும் பார்ப்பதற்கு வியப்பாக  இருந்தது. எனக்கு இப்பயணம் புது அனுபவத்தை தருகின்றது.  (04/06)


(v. Thurka)
எனது முதல் புகைவண்டி பிரயாணம்  நினைத்து பார்க்கும் போதே  அவ்வளவு  அழகிய தருணம் அது என்றுமே  மறக்க முடியத பசுமை நினைவு என்  கண்முன்னே வந்து நிற்கிறது. 

எனக்கு  இந்தியாவில்  கோயம்புத்தூரில்  இருந்து  ஊட்டிக்கு  புகைவண்டியில் செல்வதற்கு . ஒரு வாய்ப்பு கிடைத்தது  அதுவே எனது  முதல் புகைவண்டி பிரயாணமாக இருந்தது. 

கோவை நிலையத்தில் இருந்து  புகைவண்டி புறப்பட தொடங்கியது   மெது  மெதுவாக  நகரத்தொடங்கிய புகைவண்டி  கொஞ்சம் கொஞ்சமாக தனது வேகத்தை கூட்டிக்கொண்டு  வானுயர்ந்த பாக்கு மரங்களின் நடுவே அழகாக வளைந்த்து நெளித்து ஓடத்தொடங்கியது. 

இருபுறமும் பாக்கும், தென்னையும் கலந்த தோப்புக்களின் நடுவே இசையோடு அழகாய்  பயணித்துக்கொண்டிருந்தவேளை அவ்வப்போது எட்டிப்பார்க்கும்  நகர்புறத்தின் அழகும்  மிகவும் என்னை கவர்ந்திழுத்தது. 

விரைவாக சென்ற புகையிரதம் கொஞ்சம் கொஞ்சமாக  தான் வேகத்தை குறைக்க மெதுவாக நானும் தலையை நீட்டி எட்டி பார்கையில்  சில்லென்ற  காற்றோடு   பணி கூட்டம் முகத்தை தொட்டுவிட்டு போவது போல்  இருந்தது. 

எங்கு பார்த்தாலும்  பச்சை பசோல் என்றிருக்கும்  மலைத்தொடர்களும், சில்லென்ற  மேகக்  கூட்டங்களும்,   புகைவண்டியின்  சத்தம் கேட்டு அங்கும் இங்கும் ஓடி ஒழிகின்ற  மான், குதிரை போன்ற விலங்கினங்களும் , மலைத்தொடரிலே  தவழ்ந்து வரும் அருவிகளும் புகையிரதம் ஊட்டியை நோக்கி வந்துவிட்டிட்டது என்பதனை  இயற்கையின்      பிரதிபளிப்போடு   பறைசாற்றி நின்றது இன்னும் நீங்காது உள்ளது அந்த புகைவண்டிப்பயணம்  (03/06)


(சசிராஐ் விதுர்சா)
எனது  முதல்  புகைவண்டிப்  பிரயாணம் .நான்  ஒரு  நாள்  முதன்  முதலாக  கொழும்பிற்கு  புகையிரதத்தில்  சென்றிருந்தேன்.

எனக்குப்  புகையிரதத்தில்  பிரயாணம்  செய்யும்போது  மிகவும்  குதூகலமாகவும்  சற்றுப்  பயமாகவும்  இருந்தது.

ஏனென்றால்  புகையிரதத்தின்  தண்டவாளம்  பாம்பு போல்  வளைந்து   நெளிந்து   காணப்பட்டது.  (05/06)


(V.S.Srimitha)

எனது முதல் ரயில் பயணம். நான் எனது பெற்றோர்ருடன் முதல் முறையாக கொழும்புக்கு ரயிலில் பயணம் சென்றேன். எனது ரயில் பயணம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பித்து.

அன்று மழை கடுமையாக பெய்தால் போகும் வழியில் மண் மேடுகள் சரிந்து விழுந்தும்,  மரங்கள் முறிந்து விழுந்தும் எமது பயணத்தை தாமதம் படுத்தியது.

ரயில் நிறுத்தப்பட்டிருந்த வேலையில் நாங்கள் நீண்ட புகையிரத பெட்டிகளில் அங்கு இங்குமாக நடந்துக் கொண்டிருந்தோம்.

பயணம் தாமதமானாலும் சிற்றுண்டிகளை சுவைத்தும், சுரங்க பாதைகளில் கூச்சலிட்டதும், வேகமாக புகையிரதம் செல்லும்போது ஆரவாரம் செய்தது மறக்க முடியாத நினைவுகள் ஆகும்  (04/06)


(B.Ashwin)

எனது முதல் புகைவண்டி பயணமானது மிகவும் வியப்புக்குரியது.சந்தோசம் நெஞ்சில் நிறைந்தது.மிக ஆர்வத்துடனும் ஆசையுடனும் புகைவண்டியில் ஏறி சாளரத்தின் பக்கம் அமர்ந்து கொண்டேன்.விசில் ஒலியுடனும்.மக்களின் ஆரவார சத்தத்துடனும் புகைவண்டி தலைநகர் நோக்கி புறப்பட்டது.

அனைத்தும் மெல்ல நகரவும்,என் மனமும்.புகைவண்டியும் முன்னால் நகர்ந்தது.பின்னால் மரங்கள் மறைந்தது.அசையும் பச்சைக் கொடிகளும்,தலையாட்டும் வயல் வெளிகளும் என்னை வழியனுப்பி வைத்தன.

கையசைத்து ஓடி வரும் குழந்தைகளை கண்டதும் நானும் குழந்தையாகி கையசைத்தேன்.அடடா அடடா என்பது போல ஆற்றினைக் கடக்கும் ஒலியை ரசித்த படி இருந்தேன்.அப்போது வண்டிக்குள் பலதும் விற்றுக் கொண்டு வரும் வியாபாரிகளையும் சந்தித்தேன்.சிற்றுணவுகளையும் வாங்கி ருசிக்க தவறவில்லை.

ரசனையாக பாடும் பாடல் கேட்டேன்.பலபல நிலையம் கடந்து சென்றது.பலகைப்பெயர்களையும் வாசிக்கக் கூடியதாக இருந்தது.குரங்குகள் தாவும் மரங்களையும்.பாம்பு போல் நெளியும் தண்டவாளமும் என்னை பரவசப்படுத்தியது.குறுக்கிடும் பாதையில் காத்திருக்கும் பேருந்து,மகிழூந்து போன்றன நேர முக்கியத்துவத்தை உணர்த்தியது.

அம்மம்மா ஊரும் வரக்கண்டு அடுத்த சந்தோசமும் என்னை தொற்றிக்கொள்ள குஷியுடனே நின்ற புகைவண்டியில் இருந்து நான் குதித்திறங்கிக் கொண்டேன்.விசில் ஊதிய புகைவண்டிக்கு விடை கொடுத்தேன்.  (06/06)

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post