(s.mithusha)
01.நான் கண்டெடுத்த பணப்பையில் மிக வெகுமதியான ஒரு தங்க மோதிரமும் சில நாணயத்தாள்களும் இருந்தன.
02.அந்த பணப்பையை உடனே எடுத்துக்கொண்டு மிக விரைவாகச் சென்று ஊர் பெரியவர்களிடம் கொடுத்தேன்.
03.அந்தப் பணப்பையிலிருந்த தங்க மோதிரத்தையும் நாணத்தாள்களையும் திருடாது கொண்டு வந்து தந்ததிற்கு மிக்க நன்றி எனக்கூறி என்னைப் பாராட்டினார்கள். (06/06)
(Shahfa)
1.அன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் நான் கடைக்குச் சென்று கொண்டிருந்தேன் சற்று தூரம் செல்லும் போது பாதை ஒரு பணப்பையொன்று இருந்தது.
2.அந்த பணப்பையில் நிறைய பணங்களும் நகைகளும் இருந்தன.
3.சுற்றும் முற்றும் பார்த்தேன் தூரத்தில் ஒரு பெரியவர் தனது பணப்பை காணாமல் போய்விட்டது என கூறி அழுதுகொண்டிருந்தார்
4.நான் அங்கே போய் அந்த பணப்பையை அவரிடம் கொடுத்தேன் அந்த பெரியாரும் அங்கிருந்தவர்களும் எனக்கு நன்றி கூறி பாராட்டினார்கள்
5.நான் மிகுந்த சந்தோசத்துடன் வீடு திரும்பினேன் (06/06)
(M.F. Saimah)
பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வீதியோரமாக ஒரு பணப்பை இருப்பதை கண்டெடுத்தேன்.
நான் அப்பணப்பையை மிகுந்த பதற்றத்துடன் எடுத்துச் சென்று அப்பாவிடம் ஒப்படைத்தேன்.
அதனுள்ளே ஆள் அடையாள அட்டை இருப்பதை கண்ட அப்பா அப்பையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு அவரிடம் ஒப்படைத்தார். (06/06)
(t.akshaja)
நான் பாடசாலை சென்று கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் ஓர் பணப்பை தென்பட்டது அதை நான் எடுத்தேன்.
அதை கொண்டு சென்று எனது பாடசாலை அதிபரிடம் கொடுத்தேன். அதை அதிபர் திறந்து அடையாள அட்டையை பார்த்த பொழுது எமது பாடசாலை ஆசிரியரது என தெரிய வந்தது.
அதிபர் ஆசிரியரை அழைத்து பணப்பையை கொடுத்தார். ஆசிரியர் காலைக்கூட்டத்தில் என்னைப் பாராட்டி பரிசு வழங்கினார் (06/06)
(U.Haasini)
நானும் எனது அம்மாவும் பூங்காவிற்கு நடந்து சென்ற போது வழியில் ஒரு பணப்பை கீழே விழுந்து கிடந்தது நான் அந்த பணப்பையை எனது அம்மாவுடன் காவல் நிலையத்தில் கொண்டு சென்று கொடுத்தேன் அங்குள்ள அதிகாரிகள் அப் பையை உரியவரிடம் தகவல் அனுப்பி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்கள் நான் மிகவும் மகிழ்ச்சியாக பூங்காவிற்கு சென்று விளையாடி விட்டு வீடு திரும்பினோம் (05/06)
(v. Thurka)
அன்று நான் எனது மாலைநேர வகுப்பிற்கு சென்று விட்டு வரும் வழியில் ஒரு பணப்பை போன்ற ஒன்று கீழே கிடைப்பதனை கண்டேன்.
அதனை எடுத்து திறந்து பார்க்கும் போது அதில் எனக்கு நன்கு தெரிந்த ஒரு வயதான பாட்டியின் முதியோர் அடையாள அட்டையும், அத்தானோடு சிறு தொகை பணமும் இருந்ததை க்கண்டேன்.
வேகமாக வீட்டுக்கு சென்று அம்மாவிடம் நடந்ததை கூறி பணப்பையினையும் கொடுத்தேன். அம்மாவும் என்னையும் அழைத்துக்கொண்டு பையை தவரவிட்ட பாட்டியின் வீட்டுக்குசென்றோம். அங்கு பையை தவறவிட்ட கவலையில் பாட்டி தவித்துக்கொண்டிருந்ததை கண்டோம்.
பாட்டியிடம் நடந்ததை கூறி பையினையும் கொடுத்தோம். மிகவும் மகிழ்ச்சியாக அதை பெற்றுக்கொண்ட பாட்டி. தனது முதியோர் கொடுப்பனவை எடுத்துக்கொண்டு வரும் வழியில் பையினை தவறவிட்டதாகவும். எங்கு தவரவிட்டேன்
என தெரியாமல் தவித்ததாகவும் கூறி என்னையும் கட்டிப்பிடித்து முத்தமும் இட்டார்.
பையினை உரியவரிடம் ஒப்படைத்த மகிழ்ச்சியில் அம்மாவும், நானும் வீட்டுக்குச்சென்றோம். (04/06)
(M.A.M.Amhar)
நானும்,தாத்தாவும் கடைக்கு போகும் போது வழியில் ஒரு பணப்பை கிடந்தைக் கண்டோம். அதை எடுத்து நான் தாத்தாவிடம் கொடுத்தேன்.
பணப்பையை திறந்து பார்த்த தாத்தா அதிலிருந்த பணத்தையும் ,அடையாள அட்டையை பார்த்தார்.
இதில் உள்ளவர் எனக்கு தெரிந்தவர் வா அவரிடம் இதை கொடுக்களாம் என்றார்.
நாங்கள் சென்று அவரிடம் அதை கொடுத்தோம் .அவர் எங்களை பாராட்டினார். (04/06)
(B.Ashwin)
நான் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது வழியோரம் விழுந்து கிடந்த ஓர் பையை கண்டேடுத்தேன்.மனதில் கலக்கமும் உடலில் பதற்றமும் தொற்றிக் கொள்ள ஓடோடி வந்து என் அன்னையிடம் கொடுத்தேன். அவர் அதனை திறந்து பார்த்த போது அதற்குள் சில நாணயத்தாள்களும்.ஒரு சோடி காப்பும்.இரு வங்கி அட்டைகளும் இருந்தன.இன்னும் தேடிய போது ஓர் தொலைபேசி எண் தென்பட்டது.அந்த இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது எதிர்முனையில் பேசிய பெண்ணிடம் விசயத்தை கூறினார்.உடனே அப்பெண் அந்தப்பை தன் தாயாருடையது என கூறினார்.அத்துடன் எமது முகவரியை பெற்றுக்கொண்டு உடனே வருவதாகவும் கூறினார். முப்பது நிமிட காத்திருப்பின் பின் இருவரும் வந்தனர்.அம்மா அப் பையை அவர்களிடம் கொடுத்து சரி பார்க்க சொன்னார்.அவர்களும் சரி பார்த்து நா தழுதழுக்க.கண்ணீர் மல்க என்னை கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்.பின் எம்மிடம் விடை பெற்றனர்.என் அம்மா என்னை பெருமிதத்துடன் பார்த்தார்.நான் அவரை பாசத்துடன் கட்டிக் கொண்டேன். (06/06)
(F.Saliha)
1) நான் பாடசாலை சென்று கொண்டிருந்த போது ஓர் அழகிய பணப்பை ஒன்றை வீதி அருகில் கண்டெடுத்தேன்.
2) உடனடியாக அதனை எடுத்து வந்து வகுப்பாசிரியரிடம் கொடுக்க, அவரோ அதிபரிடம் ஒப்படைத்தார்.
3) அது அதிபரின் பணப்பை என்பதால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்ததுடன் காலைக்கூட்டத்தில் என்னை மனப்பூர்வமாகப் பாராட்டினார்.(06/06)
(V.S.Srimitha)
ஒருவர் தனது பணப்பையை வீதியில் விட்டு சென்று விட்டார்.
நான் பாதையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த போது எனது பாதத்தில் பட்டது.
அது என்ன பை என்று பார்த்தபோது அதில் பணம் நிறைய இருந்தது. அங்கு ஒருவரும் இருக்கவில்லை.
நான் கண்டு எடுத்த பணப்பையை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று பொலிஸ் அதிகாரியிடம் கொடுத்தேன்.
அவர் எனது செயலைப்பார்த்து பாராட்டினார். (06/06)
(s.neha)
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, பாடசைலை விடுமுறை நாள் என்பதால், சுற்றாடல் பாடத்திற்கான சில பொருட்களை வாங்கி வருவதற்காக ஓர் கடையின் பாதையின் ஓரமாக நடக்கும் போது ஏதோ ஒன்று என் காலில் தட்டுபட்டது. கீழே குனிந்து பார்த்தால் ஓர் பணப்பையும் அதன் உள்ளே ஒரு தொகை பணமும் இருப்பதை நான் பார்த்தவுடன் உடனே பொலிஸ் நிலையத்திற்கு விரைந்தேன்.
அங்கே பொலிஸ் அதிகாரி என் கையில் உள்ள பணப்பையைப் பார்த்து \"உனக்கு எதற்கு இந்த பணப்பை என்று கூற நான் ஐயா நான் பாதையோரமாக நடந்து வரும் போது இந்த பணப்பை கீழை விழுந்து கிடந்தது\" என கூறினேன். அவர் என் கையில் உள்ள பணப்பையை வாங்கி அதில் உள்ள அடையாள அட்டையின் மூலமாக அவரை கண்டுபிடித்து அவரிடம் அந்த பணப்பையை கொடுக்கும் போது நீங்கள் இந்த பணப்பையை பெறுவதற்கு துணைபுரிந்தது இந்த பிள்ளையாவான் என்று என்னை சுட்டிக்காட்டினார். பணப்பையை பெற்றுக்கொண்ட சந்தோஷத்துடன் அவர் என் முதுகை தட்டி பாராட்டினார். நடந்த விடயத்தை நான் ஓடோடிச்சென்று எனது அம்மாவிடம் கூற அம்மா என்னை வாழ்த்தினார். (05/06)