குப்பைமேனி இலை பயன்கள்

குப்பைமேனி இலை பயன்கள்

குப்பைமேனி இலை என்பது ஒரு மருத்துவ குணம் கொண்ட தாவரம் ஆகும். இது வயிற்றுப் புண், வயிற்றுப் போக்கு, வயிற்றுப்புழுக்கள், வாய்ப்புண், தொண்டைப்புண், சளி, இருமல், காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், தோல் நோய்கள் போன்ற பல நோய்களுக்கு ஓர் சிறந்த சிகிச்சையாகும்.


குப்பைமேனி இலையை பயன்படுத்தும் முறைகள்

  • குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளலாம். இந்த சாற்றை சிறியவர்கள் (12 வயதிற்கு கீழ்) 1 - 4 தேக்கரண்டி மற்றும் பெரியவர்கள் 15 - 30 மில்லி உட்கொள்ள வயிறு சுத்தமாகும், கோழையை அகற்றும், வயிற்றுப்புழுக்களை கொல்லும். 
  • குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். இந்த குடிநீர் வயிற்றுப் புண், வயிற்றுப் போக்கு, வாய்ப்புண், தொண்டைப்புண், சளி, இருமல், காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
  • குப்பைமேனி இலைகளை அரைத்து தோலில் பூசிக் கொள்ளலாம். இந்த பேஸ்ட் தோல் நோய்களை குணப்படுத்த உதவும்.

குப்பைமேனி இலையை பயன்படுத்தும் முன்னெச்சரிக்கைகள்

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குப்பைமேனி இலையை பயன்படுத்தும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
  • குப்பைமேனி இலை அதிக அளவில் உட்கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

குப்பைமேனி இலை பயன்கள்

  • இரத்தத்தை சுத்தப்படுத்தும்
  • குடல் புழுக்கள்
  • சுவாசம் மற்றும் மலச்சிக்கல்
  • தோல் நோய்கள்
  • உடல் ஆரோக்கியம்
  • சளி இருமலை குணப்படுத்தும்
  • மூல நோயை குணப்படுத்தும்
  • முகத்தின் அழகை மேம்படுத்துகிறது.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள இரத்தமும் சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இரதம் அசுத்தமனால் பல உடல் நல குறைபாடுகள் ஏற்படும்.

அதாவது முகப்பரு, அலர்ச்சி, மஞ்சள் காமாலை, தலைவலி, உடல் எரிச்சல்,கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, முடி உதிர்தல், உடல் சோர்வு மற்றும் தோல் சுருக்கம் போன்றவை ஏற்பட இரத்த சுத்தமின்மையும் ஒரு காரணம் ஆகும்.

இரதம் சுத்தமாக இருப்பது மிக மிக அவசியம் இரத்தத்தை சுத்தமாக்கி உடலை பலமாக்கும் மூலிகை தான் இந்த குப்பை மேனி செடி இலை.

பயன்படுத்தும் முறை:

குப்பைமேனி செடி ஒன்றை வேருடன் பிடுங்கி நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு அதனுடன் ஏழு(07) மிளகு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வந்தால் இரதம் சுத்தம் ஆகி இரத்த ஓட்டமும் சீராகும்.

குடல் புழுக்கள்

சிறியவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிரச்சனையாக இருக்கும் குடல் புழுக்களுக்கு சிறந்த தீர்வு குப்பை மேனி.

பயன்படுத்தும் முறை:

வேருடன் குப்பைமேனி செடியை பிடுங்கி நீரினால் கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து கசாயம் போன்று செய்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறி விடும்.

சுவாசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை

குப்பைமேனி இலை சாற்றை காச்சிய பாலில் கலந்து குடித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்குவதுடன் மலச்சிக்கலும் நீங்கும்.

தோல் நோய்கள்

அனைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு குப்பைமேனி இலை சிறந்த தீர்வாகும்.

தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் காயங்கள், தீ புண்கள் கூட ஆறும். அதே போன்று உடலில் ஏதாவது புண்கள் இருந்தால் வெண்ணீரில் குப்பைமேனி இலைகளை போட்டு வெண்ணீர் ஆறிய பின் குளித்து வந்தால் உடலில் உள்ள புண்கள் மறையும்.

அதே போன்று குப்பைமேனிஇலை சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து பூசினால் படர்தாமரை, சொறி, சிரங்கு மற்றும் பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

படுக்கை புண் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை விளக்குஎண்ணையில் சேர்த்து காய்ச்சி படுக்கை புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் படுக்கை புண் ஆறும்.

உடல் ஆரோக்கியம்

பத்து குப்பைமேனி இலைகளை பசும்பாலில் சேர்த்து வேகவைத்து குடித்து வந்தால் உடல் அழகும் ஆரோக்கியமும் பெரும்.

சளி இருமலை குணப்படுத்தும்

சளி உள்ளவர்கள் குப்பைமேனி இலைகளை தண்ணீரில் வேகவைத்து கசாயம் போல் குடித்து வந்தால் சளி இருமல் கட்டுப்படும்.

மூல நோயை குணப்படுத்தும்

மூல நோய் உள்ளவர்களுக்கு குப்பைமேனி இல்லை சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி இலைகளை காய வைத்து நன்றாக காயவைத்து பொடி ஆக்கிக்கொண்டு அதில் சிறிது நெய் சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எல்லா வகை மூலமும் குணமாகும்.

அதே போன்று குப்பைமேனி இலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து மலவாய் வழியாக உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும்.

முகத்தின் அழகை மேம்படுத்துகிறது.

இதற்கு குப்பைமேனி இலையை மஞ்சலுடன் அரைத்து பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் உதிர்ந்து முகம் பொலிவாக மாறும்.

குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

குப்பைமேனி இலை சாற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் அருந்துவதால் இரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குப்பைமேனி சாற்றை வாரத்தில் இரண்டு முறை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எதற்கு எடுத்தாலும் மருத்துவரிடம் செல்வதை தவிர்த்து எமக்கு அருகில் எளிதில் கிடைக்க கூடிய இது போன்ற மூலிகைகளை பயன்படுத்தி வந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் எந்த வித பக்க விளைவுகளும் இருக்காது.

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர்.

மருத்துவ குணங்கள்:

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post