இரண்டாம் எலிசபெத் யார்?
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II) ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் ராணி ஆவார். 1952 பெப்ரவரி 6 முதல் 2022 செப்டம்பர் 8 வரை 70 ஆண்டுகள், 214 நாட்கள் அவர் ஆட்சி செய்தார். இது பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட ஆட்சிக் காலமாகும்.
அவரது வாழ்க்கை பற்றிய சில முக்கிய தகவல்கள்
- 1926 ஏப்ரல் 21 இல் பிறந்தார்.
- 1947 இல் இளவரசர் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார்.
- நான்கு குழந்தைகள்: சார்லஸ், அன், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட்.
- 1952 இல் அவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் இறந்த பிறகு ராணியாக முடிசூடினார்.
- 15 பிரதமர்களுடன் பணியாற்றினார்.
- 14 பொதுநலவாய நாடுகளின் ராணியாக இருந்தார்.
- 2022 செப்டம்பர் 8 இல் 96 வயதில் இறந்தார்.
அவரது சாதனைகள்
- 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த உலகின் முதல் பெண் ராணி.
- ஐக்கிய இராச்சியத்தை 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான பகுதிகளிலும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வழிநடத்தினார்.
- பொதுநலவாய நாடுகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
- உலகம் முழுவதும் மதிக்கப்படும் ஒரு தலைவராக இருந்தார்.
அவரது மரபு
- இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.
- அவரது ஆட்சிக் காலம் ஸ்திரத்தன்மை மற்றும் மாற்றத்தின் காலமாக இருந்தது.
- அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள ராணி மற்றும் தனது நாட்டு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார்.
முதலாம் எலிசபெத் (7 செப்டெம்பர் 1533 – 24 மார்ச் 1603) இங்கிலாந்தின் அரசியாகவும், 1558 நவம்பர் 17 முதல் இறக்கும் வரை அயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார். கன்னி அரசி, குளோரியானா அல்லது நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர் டியூடர் வம்சத்தின் ஐந்தாவதும், கடைசியுமான ஆட்சியாளர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்சியாளராகக் கருதப்படுகிறார். இவருடைய 45 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரச் செழிப்பும், இலக்கிய மலர்ச்சியும் ஏற்பட்டன. இங்கிலாந்து உலகக் கடலாதிக்க நாடுகளுள் தலையாய இடத்தைப் பெற்றது
எட்டாவது ஹென்றியின் ஆறாவது மனைவியான கேத்ரின் பார் என்பவர் எலிசபெத்தின் மீது அன்பு செலுத்தி அவருக்கு சிறந்த கல்வி கிடைக்க வழிவகை செய்தார். எலிசபெத் கேம்பிரிட்சு கல்வியாளர்கள் ஜான் செக் (ஆறாவது எட்வர்டின் ஆசிரியர்) மற்றும் ரோஜர் அஸ்சாம் ஆகியோரிடமிருந்து மனித நேய அணுகுமுறை கொண்ட பரந்த கல்வியைப் பெற்றார். அவர் பிரெஞ்சு, இத்தாலி, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இலக்கியம், இசை, நாடகம் மற்றும் நடனத்தின் மீதான எலிசபெத்தின் ஈடுபாடு அவரின் இறப்பு வரை தொடர்ந்தது. அவர் தனது படைப்புகளான பல கவிதைகளை விட்டுச் சென்றுள்ளார். அரசி எலிசபெத்தின் வாழ்நாள் காலத்தில் சேக்சுபியரால் எழுதப்பட்ட பெரும்பான்மையான நாடகங்கள் எலிசபெத்தின் முன்னால் நடித்துக்காட்டப் பட்டவையாகும். எலிசபெத் வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவராவார்
எலிசபெத்தின் அயல்நாட்டுக் கொள்கை
எலிசபெத் அயல்நாட்டுக் கொள்கையைத் திறத்துடன் கையாண்டு வந்தார். அவர் 1560 ஆம் ஆண்டிலேயே எடின்பரோ உடன்படிக்கையைச் செய்தார். அதனால் இசுகாட்லாந்துடன் அமைதி ஏற்பட்டது. பிரான்சுடன் நிகழ்ந்து வந்த போரும் நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு வளர்ந்தது. ஆயினும், நாளைடவில் இங்கிலாந்து இசுெபயினுடன் போரிட நேர்ந்தது. எலிசபெத் போரைத் தவிர்க்க முயன்றார். 16 ஆம் நுாற்றாண்டில் கத்தோலிக்க நாாடான இசுபெயின் போரார்வமுள்ளதாக இருந்ததால், இசுெபயினுக்கும், மறுப்புச் சமய நாடான இங்கிலாந்துக்கும் போர் நிகழ்வது தடுக்க முடியாததாக இருந்தது. எலிசபெத் போரை விரும்பாதவராக இருந்தாலும், ஆங்கிலேய மக்களும், அமைச்சர்களும், நாடாளுமன்றமும் அவரை விட போரார்வம் மிக்கவர்களாக இருந்தனர்.
பல ஆண்டுகளாக எலிசபெத் இங்கிலாந்தின் கடற்படையை வலுப்படுத்தி வந்தார். ஆயினும் இசுபெயின் மன்னரான இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் மேல் படையெடுப்பதற்காக விரைவில் ஒரு கப்பற்படையை உருவாக்கினார். "ஆர்மெடா" எனப்படும் இந்த கப்பற்படையில் இங்கிலாந்திடமிருந்த அளவிற்கு கப்பல்கள் இருந்தன. ஆயினும் அதில் கப்பலோட்டிகள் எண்ணிக்கை குறைவு. மேலும், ஆங்கிலேயக் கப்பலோட்டிகள் சிறந்த பயிற்சி பெற்றவர்கள். அவர்களுடைய கப்பல்கள் தரத்திலும் போர்த் தாக்குதலிலும் உயர்ந்தவை. 1588-இல் நடைபெற்ற பெரும் கடற்போரில் இசுபானிய ஆர்மெடா முற்றிலும் முறியடிக்கப்பட்டது. இந்த வெற்றியின் பயனாக, இங்கிலாந்து உலகில் மிகச் சிறந்த கடலாதிக்க நாடாக உயர்ந்தது. 20 ஆம் நுாற்றாண்டு வரை இங்கிலாந்து இவ்வுயர் நிலையிலேயே இருந்தது
நாடாளுமன்றத்தின் நிலை
இஸ்டூவர்ட் அரசர்கள் காலத்தில் உரிமைக்காக போராடிய நாடாளுமன்றம், எலிசபெத் காலத்தில் கை தூக்கும் மன்றமாகவே இருந்து வந்தது. நாடாளுமன்றமானது முதலாம் எலிசபெத்தின் 45 வருட ஆட்சியில் வெறும் 13 தடவையே கூடியது. மேலும், எலிசெபத் தமது விருப்பப்படியே அரசாண்டார். 1559 இல் எலிசபெத் தனது முதல் நாடாளுமன்ற அமர்வின் போது, மேலாதிக்கச் சட்டம் 1558 ஐ நிறைவேற்றினார். இச்சட்டமானது இவரது தந்தை எட்டாம் ஹென்றி இயற்றிய மேலாதிக்கச் சட்டம் 1534 ஐ மாற்றியமைத்ததாகும். அவர் இங்கிலாந்தின் தேவாலயத்தை மறுபடியும் நிறுவினார். மேலும், ஒரு புதிய மற்றும் பொதுவான பிரார்த்தனை புத்தகத்தை உருவாக்கினார். இதற்குக் காரணமாக ஒரே விதமான வழிபாட்டு முறையை வலியுறுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 91 மசோதாக்களில் 48 ஐ தனது மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்தார். பேச்சு உரிமை கோரிய பீட்டர் வென்ட் ஒர்த் என்ற அங்கத்தினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்
Tags:
மாணவர் கற்றல்