நான் கண்ட கனவு கட்டுரை

கனவுகள் மனித அனுபவத்தின் ஒரு மர்மமான மற்றும் சுவாரஸ்யமான பகுதியாகும். நாம் தூங்கும்போது நமது மனம் என்ன செய்கிறது என்பதற்கான ஒரு ஜன்னலை அவை வழங்குகின்றன, மேலும் அவை படைப்பாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் உணர்ச்சியின் ஊற்றாக இருக்கலாம்.


கனவுகள் பல நூற்றாண்டுகளாக மக்களால் கவர்ச்சியடைந்தன, மேலும் அவற்றின் அர்த்தத்தைப் பற்றிய பல கோட்பாடுகள் உள்ளன. சிலர் கனவுகள் நமது ஆழ்ந்த ஆழ்மனதிலிருந்து வரும் செய்திகள் என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் அவை வெறுமனே நமது தினசரி வாழ்க்கையின் சிதைவுகள் என்று நம்புகிறார்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும், கனவுகள் சக்திவாய்ந்தவை மற்றும் அர்த்தமுள்ளதாக இருக்கலாம். அவை நமக்கு புதிய யோசனைகளைக் கொடுக்கலாம், நமது சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண உதவும், மேலும் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் ஆழமான புரிதலை வழங்கலாம்.

கனவுகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்

  • அனைவரும் கனவு காண்கிறார்கள், குழந்தைகள் கூட.
  • நாம் பெரும்பாலும் இரவில் பல கனவுகளைக் காண்கிறோம், ஆனால் பெரும்பாலானவை நமக்கு நினைவில் இல்லை.
  • கனவுகள் கருப்பு மற்றும் வெள்ளையில் அல்லது வண்ணத்தில் இருக்கலாம்.
  • நாம் கனவில் எந்த உணர்வையும் அனுபவிக்க முடியும்.
  • சில கனவுகள் மிகவும் யதார்த்தமானவை, நாம் விழித்திருப்பதைப் போல உணரலாம்.

உங்கள் கனவுகளை நினைவில் கொள்வதற்கான வழிகள்

  • நீங்கள் விழித்தவுடன், உங்கள் கனவு பற்றி ஒரு கையேட்டில் எழுத முயற்சிக்கவும்.
  • உங்கள் கனவுகளைப் பற்றி பேசுங்கள்.
  • உங்கள் கனவுகளைப் பற்றி வரையவும் அல்லது ஓவியம் வரையவும்.
  • உங்கள் கனவுகளைப் பற்றிய ஒரு பத்திரிகையை வைத்திருங்கள்.

உங்கள் கனவுகளைப் புரிந்துகொள்வது எப்படி

  • உங்கள் கனவுகளில் தோன்றும் சின்னங்கள் மற்றும் உருவகங்களைப் பற்றி சிந்தியுங்கள்.
  • உங்கள் கனவுகள் உங்கள் விழி வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
  • உங்கள் கனவுகள் உங்களுக்கு என்ன சொல்ல முயற்சிக்கின்றன என்பதைப் பற்றி உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

கனவுகள் ஒரு மர்மம், ஆனால் அவை நமது வாழ்க்கையில் மதிப்புமிக்க கருவியாகவும் இருக்கலாம். நேரம் மற்றும் கவனத்துடன், நாம் நமது கனவுகளின் மொழியைக் கற்றுக்கொண்டு, அவை வழங்கும் ஞானத்திலிருந்து பயனடையலாம்.

இந்த பதிவில் “நான் கண்ட கனவு கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.


நான் கண்ட வினோத கனவு கட்டுரை – 1

அன்று ஒரு வெள்ளிக்கிழமை நானும் எனது அம்மாவும் கோயிலுக்கு சென்றிருந்தோம். கோயிலில் வழிபட்டு முடிந்து வீடு திரும்பும்போது கோயில் வாசலில் முதியவர் ஒருவர் அதிஸ்ட இலாப சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அதை கண்ட நான் அம்மாவிடம் எனக்கு ஒரு சீட்டினை வாங்கி தருமாறு கூறினேன். ஆரம்பத்தில் என்னை கடிந்து கொண்டாலும் நான் அடம்பிடித்தமையால் வாங்கித் தந்தார்.

அன்றிரவு தூங்கும் பொழுது தலையணையின் அடியில் அதை கவனமாக வைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் தூங்கிய உடன் கனவில் என் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருப்பதையும் அவர் கையில் செய்தி பத்திரிக்கை வைத்திருப்பதை பார்த்த நான் அதில் அன்றைய நாளுக்கான அதிஸ்ட இலாப சீட்டுக்களில் வெற்றி பெற்ற சீட்டுக்களின் இலக்கங்கள் பிரசுரமாகியிருப்பதை கண்டேன்.

அதை உற்று நோக்கிய போது அதில் நான் வாங்கியிருந்த சீட்டினுடைய இலக்கமும் பிரசுரமாகி இருப்பகை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசினை வெற்றிபெற்றதை நினைத்து மிகவும் பூரிப்படைந்திருந்தேன்.

வெற்றிப் பெற்ற பணத்தினை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எல்லாம் என்னுடைய சிந்தனை விரிவடைய தொடங்கியது.

நான் அவ்வாறு சிந்தித்து கொண்டிருக்கும் போது தான் ஒரு குரல் என்னை அதட்டும் தொனியில் “ பாடசாலைக்கு நேரமாகிவிட்டது எழும்பு” என்றது

திடுக்கிட்டு பார்த்த போது தான் புரிந்தது நான் கண்டவை அனைத்தும் கனவென்று. கனவு கலைந்த விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் பாடசலை செல்வதற்கு தயாராகினேன்.

நான் கண்ட கனவு கட்டுரை – 2

“தூக்கத்தில் வருவது அல்ல கனவு. மாறாக உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு ஆகும்” என ஐயா அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளார். இக்கருத்திற்கு ஏற்றவாறு என் வாழ்க்கை பாதையினை மாற்றியமைத்தது ஒரு கனவு தான்.

ஒரு நாள் வெயிலில் அதிக நேரம் விளையாடியதன் விளைவாக நேரத்திற்கே தூங்கிவிட்டேன். பின்னர் ஒரு கனவு கண்டேன். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ஒரு இடத்தில் நான் ஒரு மேடையில் அமர்ந்துள்ளேன்.

எனக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. ஆம் நான் செய்த சாதனைகளுக்காக எனக்கு நடைபெறும் பராட்டு விழாவிலே நான் அமர்ந்திருக்கின்றேன. அங்குள்ள மேடையிலே பேசுகின்ற அனைவரும் என்னை பராட்டி மகிழ்வித்து பேசுகின்றனர்.

ஏனெனில் நான் ஒரு அரசியல்வாதியாக நேர்மையுடனும் கடமை உணர்வுடனும் செய்த செயல்களுக்காக என்னை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். என் பெற்றோரும் உறவினர்களும் கூட இந்த கூட்டத்தில் இருக்கின்றனர்.

என்னை நினைத்து அவர்கள் பெருமை படுவதனை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்தது. அந்த விழா நடைபெற்று முடியும் தருணத்தில் என்னுடைய கனவும் கலைந்து நான் விழித்துக் கொண்டேன்.

நான் கண்ட கனவு தொடர்பாக என் பெற்றோரிடம் நான் கூறிய போது அவர்கள் கனவில் வந்தது போலவே நான் நிஜத்திலும் சிறந்த ஒரு அரசியல்வாதியாக வர வேண்டும் என்று கூறினர்.

அதற்காக நான் நன்றாக கல்வி கற்க வேண்டும் எனவும் கூறினர். அன்றிலிருந்து சிறந்த அரசியல் வாதியாக வர வேண்டும் என்பதை என் இலட்சியமாக்கிக் கொண்டேன்.

உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு தொழிலைத் தங்கள் வாழ்க்கை இலட்சியமாக கொண்டிருப்பர். அத்தகைய கனவுகளில், அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர். அத்தகைய கனவு நனவாகும் போது, வாழ்வே அவர்களுக்கு வெளிச்சமாகிறது. அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு. நான் ஒரு மருத்துவரானால்……….

எனக்கு இத்தகைய கனவு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாய் இருப்பவரே என் மாமா டாக்டர் மதியழகன் தான். மிகப் பெரிய வீடு, அழகான நவீன வாகனம், சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு போன்றவற்றைக் காணும் போது, நானும் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற வைராக்கியம் என்னும் உறுதி பெற்றுக் கொண்டே வருகிறது.

நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவேன். பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுடன் பழகி, அவர்களின் பிரச்சினையைக் கண்டறிவேன். அவர்களை அன்பாக விசாரித்து, நோய்க்கேற்ற மருந்து கொடுப்பேன். அவர்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிப்பேன். கைராசிக்கார மருத்தவர் என அனைவரும் போற்றும் வண்ணம் நடந்து கொள்வேன்.

நான் கண்ட கனவு நான் ஒரு விமானத்தில் விமானியாக பறக்கின்ற சந்தர்ப்பம் ஆகும் எல்லோருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் அதுபோல நான் சிறுவயதில் இருந்தே வானத்திலே பறக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாகும்.

சிறுவயதில் மாலை நேரத்தில் நண்பர்களுடன் விளையாடும் போது அந்தி வானத்தில் உயர பறக்கின்ற அழகான பறவைகள் பலவற்றை நான் பார்த்திருக்கின்றேன். அவை உயர உயர இந்த வானத்தை கிழித்து கொண்டு பறக்கும்.

அதனை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய மனதுக்குள் நானும் ஒரு நாள் இந்த வானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. மனிதர்களுக்கு பறவை போல சிறகுகள் இல்லை சிறகுகள் மட்டும் இருந்தால் இந்த உலகமெங்கும் பறந்திருப்போமோ என்னவோ.

ஆனால் பறவைகளை போலவே பறக்க விமானங்கள் உருவாகி விட்டனவே. ஆகவே நான் விமானியாக வர பல உயர் கல்விகளை கற்று ஒரு விமானத்தை இந்த வானிலே ஓட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

வானத்திலே பறக்கின்ற விமானத்தை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொன்றாகும். இது ஒன்றும் அத்தனை சுலபமானதல்ல என்று பெரியவர்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

ஆனால் என்னால் நிச்சயமாக விமானியாக பறக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நமது இந்தியாவின் கனவுகளின் நாயகன் டாக்டர் அப்துல்கலாமை போல நானும் வானத்தில் பறக்கின்ற நிலையை அடைய நிச்சயமாக முயற்சி செய்வேன். நான் கண்ட கனவை நிறைவேற்ற நான் கடினமாக உழைப்பேன்.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post