1.எனது நண்பன் மிகவும் நல்லவன் என்மேல் நிறைய அன்பு உள்ளவன்
.2எனக்கு படிப்புவிடையத்தில் நிறைய உதவி செய்வான்.
3.அவன் எனக்கு ஒரு நாள் பாடநூல் கொண்டுவந்து தந்தான் அதை என்னால் மறக்க முடியாது. (M.A.M. Amhar , Al minhaj m.v ) (05/06)
*கல்விச்சுற்றுலா ஒன்றின் போது பாடசாலை மாணவர்களிடம் பணம் கேட்டிருந்த நிலையில் எங்களிடம் பணம் இல்லை. *ஆதலால் எனது நண்பர்களிடம் நான் "நான் கல்விச்சுற்றுலாவிற்கு வரமாட்டேன் நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு சென்று வாருங்கள்" என்றவுடன் எனது நண்பன் அவனுடைய கையிலிருந்த பணத்தை எனக்கு தந்து "நண்பா நீ இல்லாமல் நாங்கள் மட்டும் எப்படி மகிழ்ச்சியோடு சென்று வருவது நீயும் இப்பணத்தை வைத்துக்கொண்டு எம்முடன் வா" என்றான். *அவன் செய்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். (S.நேஹா, சென்ஜோசப் ஆரம்ப தமிழ் வித்தியாலயம்) (05/06)
*எனது நண்பன் நான் வறுமையில் இருந்ந பொழுது கல்வி கற்பதற்கு அப்பியாசக்கொப்பிகள் வாங்கி தந்தார். * அவர் எனக்கு பாடம் சம்மந்தமான சந்தேகங்களை தீர்த்தார். *நான் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்கு பண உதவி செய்து என்னைஅன்போடு மேலோங்க வைத்தார்.இதனால் என் அருமை நண்பனின் நினைவுகள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.(T.akshaja, Kn/pallavi hindu primary vidyalayam) (05/06)
*நானும் எனது நண்பனும் வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து என்னை நோக்கி வந்தது. *அவ்வேளை எனது நண்பன் எனது கையை பற்றி இழுத்து என்னை காப்பாற்றினான். *எனது உயிரை காப்பாற்றிய எனது நண்பன் செய்த உதவி எனக்கு எப்போதும் நினைவிருக்கின்றது.(M.F.Saimah, Zahira College Anuradhapura ) (05/06)
1.ஒரு நாள் மாலை நானும் எனது நண்பியும் வெளயாடிக்கொண்டிருந்த வேலை எனது காலில் எதோ ஓன்று குத்தியது போல் இருந்தது. இருவரும் தேடி பார்க்கையில் ஒரு பாம்பு தீண்டியது என தெரிய வந்தது. 2.உடனே எனது நண்பி அருகில் இருந்த பெரியவர்களை சத்தமிட்டு கூப்பிட்டதுடன் பாம்பு தீண்டிய இடத்தையும் சவர்க்காரம் கொண்டு நன்றாக கழுவி முதல் உதவியும் செய்தால். 3.நண்பியின் கூப்பிடும் குரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து என்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். நொடிப்பொழுதி விவேகமாக செயல்பட்டு எனது உயிரை காப்பாற்றிய நண்பியின் உதவி எப்போதும் என் நினைவில் இருந்துகொண்டே இருக்கும்.(V. Thurka. RCTM School) (04/06)
நான் ஒரு நாள் பாடசாலை செல்லும் போது எங்களுடைய மோட்டார் வாகனம் பழுதாகி விட்டது. அப்போது வழியில் வந்த எனது நண்பன் என்னை அவர்கள் காரில் ஏற்றி பாடசாலை க்கு கூட்டி சென்றார். அன்று எங்களுக்கு பரீட்சை நடை பெற இருந்தது. உரிய நேரத்தில் வந்து விட்டம். அந்த உதவியை என்றும் என்னால் மறக்க முடியாது (P. Yeharshwan , Bt St Michael's college ) (05/06)
*என் இக்கட்டான நிலையை அறிந்து தக்க சமயத்தில் உதவி செய்த என் நண்பனை நான் எப்போதும் மறவேன். *என்னைப்போல் இடர் படும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவன் என் நண்பனே ஆவான். *"காலத்தினால் செய்த ந ன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்பெரிது" எனும் குறளுக்கு இணங்க செயற்பட்ட அவனை என் நண்பன் என சொல்லிக் கொள்வதில் ஆனந்தமடைகின்றேன். (B.Ashwin, V/Pk m.v) (06/06)
1.பரீட்சை எழுதிய பொழுது என்னுடைய பென்சில் முறிந்ததால் நண்பன் பென்சில் தந்து உதவினார். 2.அப்போது அது சிறிய உதவியாக இருந்தாலும் எனக்கு பெரிய உதவியாக இருந்தது. 3.இவ்வுதவியை நான் எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன்.( T.Thushaaran , Jaffna hindu primary school ) (05/06)