இலங்கையின் மத்திய வங்கியானது பல்வேறு மதிப்புள்ள நாணயத் தாள்களை வெளியிட்டுள்ளது. இந்த நாணயத் தாள்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நாணயத் தாள்கள் பின்வருமாறு
நாணயத் தாள்களில் காணப்படும் சிறப்பம்சங்கள்
1. இலங்கையின் அடையாளங்கள்
இலங்கை நாணயத் தாள்களில், நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் இயற்கை அழகுகளை பிரதிபலிக்கும் படங்கள் இடம்பெறுவது வழக்கம். இது நாட்டின் அடையாளங்களைக் காட்டும் ஒரு வழியாகும்.
2. பாதுகாப்பு அம்சங்கள்
கள்ளநோட்டுகளைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நாணயத் தாள்களில் இடம்பெற்றுள்ளன. இதில் நீர் குறி, மறைக்கப்பட்ட படங்கள், மற்றும் உயர்ந்த தரமான காகிதம் ஆகியவை அடங்கும்.
3. மத்திய வங்கியின் முத்திரை
ஒவ்வொரு நாணயத் தாளிலும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ முத்திரை காணப்படும். இது அந்தத் தாளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும்.
நாணயத் தாள்களின் பயன்பாடு
1. பொருட்கள் வாங்குதல்
அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு நாணயத் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2. சேவைகளுக்கு பணம் செலுத்துதல்
பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கும் நாணயத் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
3. பரிவர்த்தனைகள்
வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் நாணயத் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முக்கிய குறிப்பு
1. நாணயத் தாள்களின் வடிவமைப்பு
காலப்போக்கில் நாணயத் தாள்களின் வடிவமைப்பு மாறுபடலாம்.
2. மதிப்பு
நாணயத் தாள்களின் மதிப்பு நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்து மாறுபடலாம்.
மேலும் தகவல்களுக்கு
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு இலங்கையில் நாணயங்கள் வெளியிடுவதற்கு மத்திய ஏக உரிமைகளையும் ஏக அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது.
வெளியிடப்பட்ட 11ஆவது நாணயத் தாள் தொடரின் தொனிப்பொருள் "அபிவித்தி சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக்காரர்கள்"
இலங்கை நாணயங்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள்
நாணயங்கள் மற்றும் நோட்டுகள்
இலங்கை ரூபா (LKR) நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நோட்டுகளும் நாணயங்களும் பல்வேறு மதிப்பீடுகளில் வருகின்றன. எ.g., ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 500, மற்றும் ரூ. 1000 நோட்டுகள்.
நாணயங்கள் 1 ரூபா, 2 ரூபா, 5 ரூபா, மற்றும் 10 ரூபா மதிப்பீடுகளில் உள்ளன.
அடையாளங்கள்
நாணயங்களும் நோட்டுகளும் இலங்கையின் வரலாறு, கலாச்சாரம், மற்றும் பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில நாணயங்களில், இலங்கைத் தேசிய முத்திரை, புகழ்பெற்ற விலங்குகள், மற்றும் முக்கியமான கட்டிடங்களின் படங்கள் உள்ளன.
வரலாறு
இலங்கை ரூபா 1872ல் நிறுவப்பட்டது.
இதற்கு முன், இலங்கையில் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
எண் மாற்றங்கள்
நாணயங்கள் மற்றும் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் உச்சிவிலை பல முறை மாற்றப்பட்டுள்ளது, அவற்றில் ஒவ்வொரு மாற்றமும் பல்வேறு சின்னங்கள் மற்றும் கோரப்படங்கள் கொண்டுள்ளது.
மிகைப்படுத்தல்
நாணயங்கள் மற்றும் நோட்டுகள் பொதுவாக சிக்கலான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன, அவை போலி நாணயங்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.20முக்கியமான நிறம்: கடும் மண்ணிறம் பருமன் : 128 x 67 மி.மீ
தாளின் முன்பக்கம்
தாளின் முன்பக்கத்தின் மத்தியில் தற்பொழுது காணப்படுகின்றவாறும் வரலாற்றுக் காலத்தில் காணப்பட்டவாறுமான கொழும்பு துறைமுகத்தின் தோற்றம் வரையப்பட்டுள்ளது. தாளின் வலது பக்கத்தில் காணப்படுகின்ற பறவை இலங்கையின் பறவையினமான செரண்டிப் செவி ஆந்தை (ஓட்டஸ் திலகோவோமானி) ஆகும். தாளின் இடதுபக்க கீழ்ப் பகுதியின் மூலையில் காணப்படும் வண்ணத்துப் பூச்சி பறநெட் (சிம்பவேடேறநைஸ்) ஆகும்.
தாளின் பின்பக்கம்
தாளின் பின்பக்கத்தின் மத்தியில் பாரம்பரிய வெஸ் நெத்தும நடனக்காரர் அவருக்குப் பக்கத்திலுள்ள கெட்ட பெறய மேளக்காரரின் தாளத்திற்கேற்ப நடனமாடுகின்றார். சுபீட்சத்தின் அடையாளமான பூரண கும்பம் அல்லது 'செல்வம் நிறைந்த பானை" தாளின் வலதுபக்க மேற்பகுதியில் காணப்படுகின்றது. லியவெல அல்லது 'ஒற்றைப்பூச்செடி வடிவம்" தாளின் வலதுபக்கத்தில் காணப்படுகின்றது.
ரூ.50
முக்கியமான நிறம்: நீலம் பருமன் : 133 x 67 மி.மீ

தாளின் முன்பக்கம்
தாளின் மத்தியில் மன்னம்பிட்டியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பாலம் பொறிக்கப்பட்டுள்ளது. புகைவண்டி மற்றும் ஏனைய ஊர்திகள் பயணிப்பதற்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட பாலம் புதிய பாலத்திற்கு இடப்பக்கம் காணப்படுகின்றது. இவை இரண்டிற்கும் மேலே வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார வளைவுப் பாலம் மங்கிய தோற்றத்தில் காணப்படுகின்றது. தாளின் வலது பக்கத்தில் இலங்கையின் நீல வெட்டிவால் குருவி (ஈயுமினாஸ் சொர்டியா) காணப்படுகிறது. தாளின் இடதுபக்கத்தில் காணப்படும் வண்ணாத்துப்பூச்சி த புளு ஓக் லீவ் (காலிமா பிலாசஸ்) ஆகும்.

தாளின் பின்பக்கம்
தாளின் பின்பக்கத்தினை நிலைக்குத்தாகப் பார்க்கும் பொழுது, வடிகபட்டுன நடனக்கலைஞர் (தாழ்நாட்டு பாரம்பரிய நடனக்கலைக்குரியவர்) யக்பெற மேளகாரரின் தாளத்திற்கேற்ப நடனமாடுவதையும் மேளகாரர் இடதுபக்கத்திலுமுள்ள நடனக்கலைஞருக்கு மேளம் அடிப்பதையும் காணலாம். புங்கலச காவல் கல்லும் சுபீட்சத்தின் அடையாளமான பூரண கும்பமும் தாளின் வலது பக்கத்தில் மேலே காணப்படுகின்றன. தாளின் வலது பக்கத்தில் லியவெல அல்லது 'ஒற்றைப் பூச்செடி வடிவம்" காணப்படுகின்றது.
ரூ.100
முக்கியமான நிறம்: : இளமஞ்சள் பருமன் : 138 x 67 மி.மீ

தாளின் முன்பக்கம்
தாளின் மத்தியில் நுரைச்சோலை நிலக்கரி வலு பொறிச் செயற்றிட்டமும் அதற்கு மேலே, லக்ஷபான நீர்வீழ்ச்சியும் நீர்வீழ்ச்சியினால் உருவாக்கப்பட்ட மின்வலுவினைக் கடத்தும் கம்பிவடங்களும் காணப்படுகின்றன. இலங்கை செவ்வலகு வேலைக்காரக் குருவி (ரியூடோய்டொஸ் றூவெஸ்சென்) வலப்பக்கத்திலும் வண்ணத்திப்பூச்சியான ஒட்டோம் லீவ் (டொலர்சாலியா பிசல்ரிடாவே) இடது பக்கத்திலும் காணப்படுகின்றன.

தாளின் பின்பக்கம்
தாளின் பின்பக்கத்தினை நிலைக்குத்தாகப் பார்க்கும் பொழுது மிருதங்கம் வாசிப்பவர் இருந்து கொண்டு தனது மிருதங்கத்தினை வாசிப்பதனையும் பரதநாட்டிய தாரகை அவரின் இடதுபக்கத்தில் நடனமாடுவதையும் காணலாம். நாக (ஏழு தலைகளைக் கொண்ட நாகம்) காவல் கல் மேலே வலதுபக்கத்தில் காணப்படுகின்றது. ''தித்வலிய வெல" என அழைக்கப்படும் இரட்டை மலர் வடிவம் வலதுபக்கத்தில் காணப்படுகின்றது.
ரூ.500
முக்கியமான நிறம்: ஊதா பருமன் : 143 x 67 மி.மீ

தாளின் முன்பக்கம்
தாளின் முன்பக்கத்தின் மத்தியில் கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் மற்றும் இலங்கை வங்கி தலைமை அலுவலகம் என்பன பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு வலப்புறமாகவுள்ள தோற்றம் ''லங்காதிலக விகாரை" என அழைக்கப்படும் கண்டியிலுள்ள ஒரு பண்டைய பௌத்த ஆலயமாகும். இலங்கை நாட்டுக் கிளியான மெறால்ட் கொலார்ட் பரகீத் (லயார்ட் பரகீத் - பிசிட்டாசுல கல்தொறப்பே தாளின் வலதுபக்கத்திலும் இலங்கை வண்ணாத்துப்பூச்சியான சிலோன் இன்டிகோறோயல் (தாயுறிய அறிட) இடதுபக்கத்திலும் காணப்படுகின்றது.
தாளின் பின்பக்கம்
தாளின் பின்பக்கத்தில் தெல்மே நெதும நடனக்கலைஞரும் அவருக்கு இடதுபக்கத்தில் யக்பெற மேளகாரரும் பொறிக்கப்பட்டிருக்கின்றனர். பதுமநிதி காவல் கால் தாளின் மேலே வலது பக்கத்தில் காணப்படுகிறது. ''டிவித்வ லிய வெல" என அழைக்கப்படும் இரட்டை பூச்செடி வடிவமைப்பு வலதுபக்கத்தின் அடிப்பக்கத்திற்கு மேலே காணப்படுகிறது.
ரூ.1000
முக்கியமான நிறம்: பச்சை பருமன் : 148 x 67 மி.மீ

தாளின் முன்பக்கம்
தாளின் முன்பக்கத்தின் மத்தியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட றம்பொட சுரங்கப்பாதை வரையப்பட்டுள்ளமையினை காணமுடியும். சுரங்கப்பாதை வரையப்பட்டுள்ளமைக்கு இடதுப்பக்கமாக சுரங்கப்பாதை கட்டப்படுவதற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டதெனக் கருதப்படும் பாறைச் சுவர் வரையப்பட்டுள்ளது. தாளின் வலதுபக்கத்தில் இலங்கைப் பறவையான சின்னக்கிளி (லொறிக்குலஸ் பெறிலினஸ்) காணப்படுகின்ற வேளையில் தாளின் இடதுபக்கத்தில் வைற் போர் றிங் (யப்திமா சிலோனிக்கா) என்ற வண்ணத்துப்பூச்சி காணப்படுகின்றது.
தாளின் பின்பக்கம்
தாளின் பின்பக்கத்தில் தவில் பெற மேளகாரரும் மல்பதய நெத்தும் நடனக்கலைஞரும் பொறிக்கப்பட்டுள்ளனர். தாளின் வலது மேல் பக்கத்தில் காவல் தெய்வங்களுடன் காவல் கல் வரையப்பட்டுள்ளது. வலதுபக்க ஓரத்தில் ''டிவித்வ லி பெல" என அழைக்கப்படும் இரட்டை மலர் வடிவமைப்பு காணப்படுகின்றன.
ரூ.5000
முக்கியமான நிறம்: தங்க நிறம் பருமன் : 153 x 67 மி.மீ
தாளின் முன்பக்கம்
தாளின் நடுப்பகுதியில் இரண்டு அணைகள் காணப்படுகின்றன. இடதுபக்கமுள்ளது வெஹெரகல அணையாகும். வலதுபக்கத்திலுள்ள கன்னியொன் அணை மங்கலான தோற்றத்தில் காணப்படுகின்றது. வலதுபக்கத்தில் இலங்கை மஞ்சள் செவிக் கொண்டைக் குருவி (பிக்னோநோடஸ் பெனிசிலாட்டஸ்) பறவை பொறிக்கப்பட்டுள்ள வேளையில் லெமன் மைக்கிறன்ட் வண்ணத்துப்பூச்சி (கட்டங்சிலியா பொமோனோ) தாளின் இடதுபக்கத்தில் காணப்படுகிறது.
தாளின் பின்பக்கம்
தாளின் மத்தியில் நாகறக்ஷ நடனக்கலைஞரும் குறுளுறக்ஷ நடனக்கலைஞரும் காணப்படுகின்றனர். தாளின் மேல் வலதுபக்கத்தில் ரத்னபிரசாதய காவல் கல் காணப்படுகின்றது. கல்பவறக்ஷ மலர் வடிவம் தாளின் வலதுபக்க ஓரத்தில் காணப்படுகின்றது.