MrJazsohanisharma

ஒத்தகருத்துச் சொற்கள்

 01. அரசன்  - மன்னன்

02. அகம் - உள்ளம்

03. அக்கறை - ஆர்வம்

04. அக்கிரமம் - அநியாயம்

05. அகங்கை - உள்ளங்கை

06. அகதி - கதியற்றவன்

07. அங்காடி - சந்தை

08. அங்கு - அவ்விடம்

09. அச்சம் - பயம்

10. அஞ்சலி - வணக்கம்

11. அடவி - காடு

12. அச்சன் - தந்தை

13. அடிசில் - உணவு

14. அடியிடல் - தொடங்குதல்

15. அடைதல் - சேர்தல்

16. அண்ணம் - மேல்வாய்

17. அன்னம் - உணவு

18. அண்மை - சமீபம்

19. அணங்கு - அழகு , பெண்,

20. அணை- வரம்பு

21. அண்ணல் - சிறந்தோர், தலவர்

22. அதரம் - உதடு

23. அத்தனையும் - யாவும்

24. அத்தி - எலும்பு, ஒருவகை மரம்

25. அந்தம் - முடிவு

26. அந்திநேரம் - மாலைநேரம்

27. அபயம் - அடைக்கலம்

28. அகங்காரம் - ஆணவம்,செருக்கு,

29. அக்கரம் - எழுத்து

30. அக்கினி - நெருப்பு

31. அங்கத்துவம் - உறுப்புரிமை

32. அகண்டம் - முழுமை

33. அகம்பாவம் - தற்பெருமை

34. அச்சாரம் - முன்பணம்

35. அசுவம் - குதிரை

36. அஞ்சுதல் - பயப்படுதல்

37. அடர்த்தி - செறிவு

38. அச்சாணி - கடையாணி ,

39. அடிமை - தொண்டன்

40. அடையாளம் - சின்னம்

41. அடைக்கலம் - தஞ்சம்

42. அணிகலன் - ஆபரணம்

43. அனல் - தீ , சூடு

44. அண்டம் - உலகம்

45. அதிதி - விருந்தினர்

46. அதர் - வழி

47. அத்தை - மாமி

48. அபசாரம் - குற்றம்

49. அந்தரங்கம் - இரகசியம்

50. அவதாரம் - திவ்யபிறப்பு

51. அன்பு - நேசம்

52. அற்புதம் - அதிசயம்

53. அஞ்சல்தலை - முத்திரை

54. அல் - இரவு

55. அந்நியர் - பகைவர்

56. அநீதி - அநியாயம்

57. அழகு - வடிவு

58. அழைத்தல் - கூப்பிடுதல்

59. அறிதல் - தெரிதல்

60. அரண் - கோட்டை

61. அரன் - சிவன்

62. அறிவியல் - விஞ்ஞானம்

63. அலகு - சொண்டு

64. அளகு - பெட்டைக்கோழி

65. அளி - கொடு, வண்டு

66. அலி - பேடி

67. அளித்தல் - கொடுத்தல்

68. அழித்தல் - இல்லாமல் செய்தல்

69. அலை - திரை

70. அளை - புற்று

71. அழை - கூப்பிடு

72. அல்லல் - துன்பம்

73. அவி - தேவர் உணவு

74. அழி பசி - மிகுந்த பசி

75. அபாயம் - ஆபத்து

76. அனுமதி - உத்தரவு

77. அறம் - தருமம்

78. அமைச்சர் - மந்திரிமார்

79. அலங்கரித்தல் - அழகுபடுத்தல்

80. அரசிறை - வரி

81. அறிஞர் - சான்றோர்

82. அடி - பாதம்

83. அரி - சிங்கம்

84. அசைதல் - ஆடல்

85. அந்தணர் - மறையவர்

86. அறிவு - ஞானம்

87. அரவம் - பாம்பு ,சத்தம்

88. அலர் - பூ

89. அம்பலம் - சபை

90. அம்பு பாணம்

91. அத்திரம் - கணை

92. அனங்கன் - காமன்

93. அரி - பரி

94. அமர் - யுத்தம்

95. அழல் - நெருப்பு

96. அவனி - உலகம்

97. அமுது - உணவு

98. அயன் - பிரமன்

99. அரங்கம் - நாடக சாலை

100. அருள் - இரக்கம்

101. அரற்றல் - அழுதல்

102. அவா - விருப்பம்

103. அரவம் - ஒலி

104. அருகுதல் - குறைதல்

105. அளகம் - கூந்தல்

106. அம்புலி - சந்திரன்

107. அண்ணன் தமைமன்

108. அனந்தல் - நித்திரை

109. அம்புயம் - தாமரை

110. அப்பு - நீர்

111. அருந்துதல் - உண்ணல்

112. அகிலம் - பூமி

113. அரிவை - பெண்

114. அந்தகன்- எமன்

115. அறவர் - முனிவர்

116. அசலம் - மலை


117. அயர்வு - சோர்வு



Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post