எனது நாளாந்த கடமைகள்

இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்   

எனது நாளாந்த கடமைகள்

N.kiruththika

காலையில் நேரத்திற்கு நித்திரை விட்டெழல். காலைக்கடன்களை முடித்தல். சூரியநமஸ்காரம் செய்தல்,தியானம் செய்தல். குளித்தல் காலை உணவு உண்ணுதல். பாடங்களை படித்தல். (05/06)




s.mithusha

எமது நாளாந்த கடமைகள் எமது வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானவையாகும்.எமது நாளாந்த கடமைகளை நாம் சரிவரச்செய்து முடிக்க வேண்டும். அவற்றுள் சில....*தினமும் அதிகாலையில் எழுந்து பல் துலக்கிக் குளிக்க வேண்டும்.*காலையில் எமது சுறுசுறுப்பிற்காக தியானச்செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.*எமது காலைக்கடன்களை முடிக்க வேண்டும்.*எமது காலை உணவை உண்ட பின் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகுதல்.*உரிய நேரத்திற்குப் பாடசாலைக்குச் செல்லல்.இவற்றை சரிவரச்செய்து வந்தால் எமது வாழ்வில் நாம் முன்னேறலாம்.  (06/06)


diloshan

நாம் அதிகாலையில் நித்திரை விட்டெழ வேண்டும். அதன் பின்பு பல்துலக்கி எமது காலைக்கடன்களை முடிக்க வேண்டும். பின்னர் பாடசாலை சீருடை அணிய வேண்டும். பின்பு காலையுணவு உண்ண வேண்டும். பாடசாலை செல்ல வேண்டும். பாடசாலை முடிந்து வீடு வந்து மதிய உணவு உண்ண வேண்டும். சிறிது நேரத்தின் பின் வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும். மாலை சிறிது நேரம்    விளையாட்ட வேண்டும். பின் குளிக்க வேண்டும். படிக்க வேண்டும். இரவுணவு உண்ண வேண்டும். நித்திரை செல்ல வேண்டும்.  (05/06)


Shahfa

1) நான் காலை 5.00 மணியலவில் எழுந்து இறைவனை வணங்குவேன்.

2) பின்னர் 5.00 மணியிலிருந்து 6.00 மணிவரை பயிற்சிப் புத்தகங்களை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுவேன்.

3) பின்னர் பாடசாலை செல்ல சீருடைகளை அணிவேன்.

4) பின்னர் காலை உணவை சாப்பிடுவேன்.

5) பின்னர் நண்பர்களுடன் பாடசாலை செல்வேன். (05/06)


M.F. Saimah

அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு இறைவனை வணங்குவதே எனது நாளாந்த கடமைகளில் முதன்மையானதாகும். பின்னர் பாடசாலை சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது எனது தலையாயக்கடமையாகும். எனது நாளாந்தக் கடமைகளுல் அம்மாவின் வேலைகளில் உதவி செய்தலும் ஒன்றாகும்.  (05/06)


s.neha

(1) நான் அதிகாலையில் துயில் எழுந்து பற்துலக்கி காலைக்கடன்களை முடித்து, பின் சிறிது நேரம் பாடம் படிப்பேன்.

(2)அதன் பிறகு உணவு உண்டு ஆடையணிகளை மாற்றுவேன்.

(3)பின் மிகவும் உற்சாகத்தோடு பாடசாலைக்கு செல்வேன்.  (05/06)


B.Ashwin

அதிகாலையில் நித்திரை விட்டெழுதல் காலைக்கடன்களை முடித்தல் சில ஆங்கிலச் சொற்களை பாடமாக்குதல் பின் குளித்தல் பாடசாலை செல்ல ஆயத்தமாகுதல் கடவுளோடு.பெற்றோரையும் வணங்குதல் பாடசாலை செல்லல் பாடங்களை மனநிறைவோடு கற்றல் மீண்டும் வீடு திரும்புதல் குளித்தல் மதிய உணவு உண்ணல் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்தல் குட்டித்தூக்கம் போடுதல் தம்பி.தங்கையோடு விளையாடுதல் உடல் கழுவி தேனீர் குடித்தல் கடவுளை துதித்தல் வீட்டுப்பாடங்களை முடித்தல் நுண்ணறிவு வினாக்கள் செய்தல் இரவுணவு உண்ணல் நாளைய பாடசாலைக்கு ஆயத்தமாதல் இரவுத்தூக்கத்திற்கு செல்லுதல்  (06/06)


U.Haasini

நான் காலையில் எழுந்து முகம் கழுவி குளிப்பேன். பின்னர் கடவுளை வழிபட்டு விபூதிபூசி கடவுளுக்கு பூக்கள்வைப்பேன்.பின்னர் காலைஉணவை உண்பேன். பின்னர் எனது காலை கடனை முடிப்பேன். (05/06)


Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post