இங்கு எமது மாணவர்கள் பதிவு செய்த கட்டுரைகள் உள்ளன அவர்களின் கட்டுரைகளினை சரிபார்த்து புள்ளிகள் வழங்கி உள்ளோம்
மழை நாள்
(s.mithusha)
அன்று வெள்ளிக்கிழமை.காலை ஏழு மணி பாடசாலைக்குப் புறப்பட்டேன்.வானம் இருண்டு காணப்பட்டது.குளிர் காற்று வீசியது.நான் வீதி ஓரமாகக் குடை பிடித்து நடந்து சென்றேன்.வானில் பளிச் பளிச் என்று மின்னல் மின்னியது.இடி இடித்தது.நான் பயந்து விட்டேன்.அப்போது மழை பெய்யத் தொடங்கியது.நான் குடையைப் பிடித்து கொண்டு நடந்து சென்றேன்.மழையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.எனது குடையால் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.நான் அருகில் இருந்த கடைக்குள் சென்றேன்.மழை மெது மெதுவாக ஓய்ந்தது.நான் மிக விரைவாக பாடசாலைக்குச் சென்றேன். (06/06)
(A.manishankar)
அன்றோரு நாள் காலைப்பொழுது. ஓர் கடை அருகே நான் நின்றிருந்தேன். மேகம் கறுத்து காணப்பட்டது. சற்று நேரத்தில் முத்து முத்தாக மழை போழிய தொடங்கியது. அந்த மழையில் நனைவதற்கு எனக்கு மிகுந்த ஆசை. மழை பெய்வதால் மரங்கள் நீரை பெறுகின்றன. நான் மழையில் நனைந்து ஆனந்தம் அடைந்தேன். அதோடு ஆடி, பாடி மகிழ்ந்தேன்.(06/06)
(s.neha)
அன்று ஒரு சனிக்கிழமை பாடசாலைக்கு செல்லும் போது, தீடீரென்று வானம் கறுக்க இடி மின்னல் சத்தம் கேட்க துளி துளியாக மழை பெய்யதொடங்கியது. சிறிது நேரத்தின் பின் கடும் மழை பெய்யத்தொடங்கியது. விரைவாக அருகில் இருந்த கடையில் ஒதுங்கினேன். ஆனால் மழையோ விடாமல் பெய்ய பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை சிறிது ஓய்ந்த பின் குடுகுடென பாடசாலைக்கு ஓடினேன். (06/06)
(Shahfa)
1) அன்று திங்கட்கிழமை. 1.30 மணியளவில் நானும் எனது நண்பர்களும் பாடசாலையிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தோம்.
2) அப்போது வானம் இருண்டி ஹோ! ஹோ! என மழை பெய்தது.
3) அண்மையில் ஒர் நீல வண்ணமயில் தோகை விரிந்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தோம்.
4) இறுதியில் சிறுசிறு துளிகளாக மழை பெய்து முடிந்ததும் நாங்கள் வீட்டிற்குச் சென்றோம் (06/06)
(M.F. Saimah)
1.நானும் எனது அம்மாவும் பாட்டி வீட்டிலிருந்து வீதியில் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கும் போது திடீரென வானைக் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன.
2.நாங்கள் நடையின் வேகத்தை அதிகரித்தும் மழையானது இடி மின்னலுடன் \"சோ\" வென கொட்டி எம்மை நனைக்கத் தொடங்கியது.
3.பாதை எங்கும் மழை நீர் நிரம்பி இருந்ததால் மிகுந்த அச்சத்துடனும், சிரமத்துடனும் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.(06/06)
(B.Ashwin)
நான் விளையாட்டு மைதானத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்.அப்போது கண்ணைப்பறிக்கும் படியான மின்னலொன்று மின்னிச் சென்றது.பயந்துவிட்டேன்.கணப்பொழுதில் அதற்கிணையான இடிச்சத்தமும் காதைப் பிளந்தது. சற்று நேரம் கழித்து வானம் கறுத்து மழை பொழியத் தொடங்கியது.என்னில் ஆனந்தம் பெருகத் தொடங்கியது.மழையில் நனையும் ஆசை வந்தது.வியர்த்து களைத்திருந்த என்னுடலில் மழைத்துளிகள் விழத் தொடங்கின.\ நனைந்து தொப்பலாகி வீடு வந்து சேர்ந்தேன்.அன்னையின் செல்ல கண்டிப்பின் பின் குளித்து உடை மாற்றினேன்.(06/06)
(N.kiruththika)
அன்று வெள்ளிக்கிழமை .நான் அப்பாவுடன் முச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு சென்றேன். திடீரென மின்னல் பளீர் பளீர் என்று மின்னியது. நான் அச்சம் அடைந்தேன்.வீதியெங்கும் வெள்ளம் பரவியது. நான் பாடசாலைக்கு சென்றடைந்தேன். பின் குடை பிடித்தவாறு வகுப்பறைக்கு சென்றேன். மாணவர்கள் அனைவரும் ஆனந்தத்துடன் நனைந்து கொண்டே வகுப்பறைக்கு சென்றனர்.
(W. Jayaneeswar)
அன்று காலை 7:00 மணி. நான் பாடசாலை சென்று கொண்டிருக்கும் பொழுது திடீர் என்ன மழை பொலிந்தது. நான் எனது பையை திறந்து மழை கவசத்தையும் குடையும் எடுத்தேன். பளீர் ! பளீர் ! என்ன இடி இடித்தது. நான் சிறு சிறு துளியாய் எடுத்து விளையாடினேன். இறு மயில்கள் ஆடுவதைக்கண்டேன். எனக்கு அந்த நாள் மிகவும் பிடித்த நாள் ஆகும். "(04/06)