சந்திரயான்-3

 



சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய நிலாப்பயணத் திட்டநிரலில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ள மூன்றாம் மிக அண்மைய நிலாத் தேட்டத் திட்டமாகும். இதில் சந்திரயான் -2 இல் இருந்தது போல ஒரு தரையிறங்கியும் தரை ஊர்தியும் அமையும். இதில் வட்டணைக்கலம் அமையாது. இதன் செலுத்துகலம் தொடர்புமுறை இடைவிடு செயற்கைக்கோளாகச் செயல்படும். செலுத்து கலம் தரை இறங்கியையும் தரை ஊர்தியையும் 100 கிமீ தொலைவில் நிலா அண்மைக்குக் கொண்டு சென்று விடும்.


சந்திரயான்-2 திட்டத்தின் இறுதிக் கட்டத்தில், உரிய வட்டணையில் வெற்றிகரமாக நுழைந்தாலும் தரையிறங்கு வழிகாட்டு மென்பொருளின் சிறுநெருடலால் தரையிறங்கி மெதுவாகத் திட்டமிட்டபடி தரையிறங்க முடியாமல் போனது. எனவே, சந்திரயான் -2 க்குப் பிறகு மற்றொரு நிலாப்பயணத் திட்டம் முன்மொழியப்பட்டது.


சந்திரயான்-3 திட்டமிட்டபடி 2023 சூலை 14, உள்ளூர் நேரம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் முதல் கட்டமாக, 100 கிமீ வட்ட வடிவ வட்டணையில் நிலாவுக்கான நுழைவு வெற்றிகரமாக முடிந்தது. தரையிறங்கியும் தரையூர்தியும் 2023 ஆகத்து 23 அன்று நிலாவின் தென் முனைப் பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றலூட்டத் தரையிறக்கம் 2023, ஆகத்து 23 அன்று மாலை 05:45 இசீநே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது; தரைதொடுதல் மாலை 06:04 இசீநே தரையிரங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த நாடு என்ற பெருமையினை இந்தியா பெறுகின்றது. ஜோகன்சுபெர்க்கில் சுற்றுப் பயணம் சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சி வாயிலாக இசுரோ அறிவியலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


சந்திரயான்-3 திட்டம் இசுரோவின் எதிர்கால கோளிடைப் பயணத் திட்டங்களுக்கான முதல் படியேற்றமாகும். இதன் முதன்மை எண்ணக்கரு முந்தைய திட்டத்தில் அடைய முடியாத மென்தறையிறக்கத் திறமையை நிறுவும் தொழில்நுட்பச் செயல்விளக்கமாகும். 


செலுத்துகலம் தரையிறங்கியோடு சேப்(SHAPE) எனும் ஆய்வுக் கருவியையும் உடன் கொண்டுசெல்கிறது. இது நிலா வட்டணையில் இருந்து வாழ்தகவு புவியின் கதிர்நிரல்களையும் முனைமைவரைவையும் பதிவு செய்யவல்ல கதிர்நிரல் முனைமையளவியாகும்.


பின்னணி

சந்திரயான் திட்டம்|சந்திரயான் நிகழ்நிரலின்]] இரண்டாம்கட்டமாக, சந்திரயான்-2 ஏவூர்தி மார்க் 3 (LVM 3) வழியாக விண்ணில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஏவியது. இதில் ஒரு சுற்றுகலனும் ஒரு தரையிறங்கியும் ஒரு தரையூர்தியும் இருந்தன. இதன் நோக்கம் தரையிறக்கியை மெதுவாக நிலாத்தரையில் 2019 செப்டம்பரில் இறக்கி தரை ஊர்தியை நிலாவில் இயக்குதலாகும்.முந்தைய அறிக்கைகளில் இருந்து இந்தியாவும் யப்பானும் கூட்டாக நிலாத் தென்முனைக்குச் செல்லத் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. இதில் யப்பான் ஏவுகலத்தையும் தரையூர்தியையும் இந்தியா தரையிறக்கியையும் வடிவமைப்பதாக இருந்துள்ளது. இத்திட்டத்தில் களப் பதக்கூறுகள் எடுத்தலும் நிலாவில் இரவில் வாழும் தொழில்நுட்பங்களும் அடங்கியுள்ளன.


சந்திரயான்-2 திட்ட விக்ரம் தரையிறங்கியின் மென்மையான தரையிறக்கம் பொய்த்துப்போனதால், 2025 ஆம் ஆண்டின் கூட்டுச்செயல் திட்டத்தைச் சிறப்பாக முடிக்க, நிலாவில் மெதுவாகத் தரையிறங்கும் மற்றொரு திட்டம் இந்தியாவுக்குத் தேவையாகிவிட்டது.


ஐரோப்பிய விண்வெளி முகமை(ESA) இயக்கும் ஐரோப்பிய விண்வெளிக் கண்காணிப்பு(எசுட்டிராக்) ஓர் ஒப்பந்தப்படி இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கும். இந்தப் புதிய இணை ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் ஐரோப்பிய விண்வெளி மையம் முதல் இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான்-1, சந்திரயான்-3]] நிலாச் செயற்கைக்கோள், சூரிய ஆராய்ச்சித் திட்டமான ஆதித்யா-எல்-1 போன்ற இசுரோவின் விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும். கைம்மாறாக, எதிர்கால எசா(ESA) திட்டங்கள், இசுரோ இயக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இசுட்டிராக்) நிலையங்களின் ஒத்துழைப்பைப் பெறும்.


நோக்கம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-3 இன் நோக்கங்களாகப் பின்வருபவற்றைக் கொண்டுள்ளது.


1 .தரையிறங்கியைப் பாதுகாப்பாகவும் மெதுவாகவும் நிலாத்தரையில் இறக்கிவிடல்.


2 .நிலாவில் தரையூர்தி உலாவும் திறன்களை நோக்கீட்டாலும் செயல்விளக்கத்தாலும் நிறுவுதல்


3 .நிலாவின் உட்கூற்றை நன்கு புரிந்து கொள்ளவும் நடைமுறைக்குப் பயன்படுத்தவும் நிலாத்தரையில் கிடைக்கும் வேதி, இயல்தனிமங்களின் மீது களத்திலேயே அறிவியல் செய்முறைகளை மேற்கொண்டு அவற்றின் நோக்கீடுகளைப் பதிவுசெய்தல் கோளிடை எனும் சொல் இருகோள்களுக்கு இடையே தேவைப்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கிச் செயல்படுத்தலைக் குறிக்கும் அடைமொழியாகும்.


வடிவமைப்பு



சந்திரயான்-3 பின்வரும் மூன்று முதன்மை உறுப்புகளைக் கொண்டுள்ளது


செலுத்தப் பெட்டகம்


செலுத்தப்பெட்டகம் நிலாவின் 100 கிமீ வட்டணை வரையில் தரையிறங்கியையும் தரையூர்தியையும் கொண்டுசெல்லும். இது ஒருபக்கத்தில் சூரியப் பலகமும் உச்சியில் பெரிய உருளையும்(பெட்டகத்திடை தகவமைக்கும் கூம்பு) பூட்டிய பேழை போன்ற கட்டமைப்பாகும். இந்தக் கூம்பில் தரையிறங்கி அமர்கிறது. தரையிறங்கியோடு, இப்பெட்டகம் வாழ்தகவு புவிக்கோள் கதிர்நிரல்-முனைமை அளவி(SHAPE) எனும் கருவியைப் புவியின் கதிர்நிரலையும் முனைமை அளவுகளையும் நிலா வட்டணையில் இருந்து அளக்க கொண்டு செல்லப்படுகிறது.


தரையிறங்கி


தரையிறங்கி நிலாவில் மென்மையாகத் தரையிறங்கும் பொறுப்புடையதாகும். இதுவும் நான்கு கால்களைக் கொண்ட பேழை வடிவம் தாங்கியதாகும். இதில் 800 நியூட்டன் விசைகொண்ட நான்கு உந்துபொறிகள் அமைந்துள்ளன. மேலும் கள ஆய்வுக்கான அறிவியல் கருவிகளும் தரையூர்தியும் உள்ளன.


சந்திரயான்-3 தரையிறங்கி நான்கு உந்துபொறிகளையே பெற்றிருக்கும். ஆனால், சந்திரயான்-2 திட்ட விக்ரம் தரையிறங்கியில் ஐந்து 800 நியூட்டன்கள் விசையுள்ள உந்துபொறிகள் இருந்ததற்கு இது மாறானதாகும். அதில் நடுவில் மாறாத விசையுள்ள ஓர் உந்துபொறியும் பூட்டப்பட்டிருந்தது. சந்திரயான்-3 இல் கூடுதலாக, ஒருங்கொளி டாப்பிளர் விரைவளவியும் (LDV) இணைக்கப்படுகிறது.


தரையூர்தி


தரையூர்தி ஒரு நடமாடும் ஆய்வகமாகும். இது நிலப்பரப்பில் நடமாடி பதக்கூறுகளைத் திரட்டி, நிலாவின் புவியியல், வேதியியல் உட்கூறுகளைப் பகுப்பாய்வு செய்யும். இது ஆறு சக்கரங்கள் பூட்டிய, செவ்வக அடிமனையுள்ள உருண்டோடும் தானூர்தியாகும்.இதன் மொத்தும் கால்கள் சந்திரயான்-2 ஐ விட வலிமைமிக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கூடுதல் கருவி காப்பும் தரப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பு விறைப்பை மேம்படுத்தி, பன்முக வருநிகழ்வேற்பு அமைப்புகளும் பொருத்தப்படுகின்றன.

தரையூர்தி வடிவமைப்புக் கூறுபாடுகளாவன:


  1. ஆறு சக்கர வடிவமைப்பு
  2. எடை 26 கிலோகிராம்கள் (57 pounds)
  3. தரையில் இயங்கும் நெடுக்கம் 500 மீட்டர்கள் (1,600 அடி)
  4. எதிர்பார்க்கும் ஆயுள்: ஒரு நிலா நாள் (14 புவி நாட்கள்)
  5. சந்திரயான்-3 இன் தரையூர்தி கீழ்வரும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும்:


  • நிலா மேற்பரப்பின் உட்கூறுகள்
  • நிலா மண்ணில் பனிநீர் உள்ளமை
  • நிலா மொத்தல்களின் வரலாறு
  • நிலா வளிமண்டலப் படிமலர்ச்சி

அறிவியல் கருவிகள்


தரையிறங்கி


தரையிறங்கியில் கீழ்வரும் மூன்று அறிவியல் கருவிகளும் உள்ளன:


சந்திரா மேற்பரப்பு வெப்ப இயற்பியல் செய்முறை (சேசுட்டு-ChaSTE) நிலா மேற்பரப்பு வெப்பக் கடத்துதிறத்தையும் வெப்பநிலையையும் அளக்கும்.

நிலா நிலநடுக்க செயல்பாட்டளவி ( இல்சா-ILSA) நிலநடுக்கமானி இறங்கிய களத்தின் நிலநடுக்கத்தை அளக்கும்.

இலங்முயர் ஆய்வி (ராம்பா-எல்பி(RHAMBA-LP) நிலாப்பரப்பு மின்ம அடர்த்தியையும் வேறுபாடுகளையும் அளக்கும்.

தரையூர்தி


தரையூர்தியில் கீழ்வரும் இரண்டு அறிவியல் கருவிகள் உள்ளன:


ஆல்பாத் துகள் எக்சுக்கதிர் கதிர்நிரல் அளவி (APXS) வேதிம உட்கூற்றையும் நிலாப் பரப்பின் கனிமவியல் உட்கூற்றையும் உய்த்துணரும்.

ஒருங்கொளி கிளர்முறிவு கதிர்நிரல்பதிப்பி (LIBS), இறங்கும் களத்தில் அமையும் நிலா மண், பாறைகளின் மகனீசியம், அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டிட்டானியம், இரேடான் இரும்பு ஆகிய வேதித் தனிமங்களைப் பதிவுசெய்யும்.

செலுத்தப் பெட்டகம்


இப்பெட்டகம் வாழ்தகவு புவிக்கோள் கதிர்நிரல்-முனைமை அளவி(SHAPE) எனும் கருவியைப் புவியின் கதிர்நிரலையும் முனைமை அளவுகளையும் நிலா வட்டணையில் இருந்து அளக்கக் கொண்டு செல்லப்படுகிறது.


ஏவுதல்

சந்திரயான் -3 திட்டமிட்டபடி 2023 ஜூலை 14, இசீநே 2:35 மணி(இசீநே) பிற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள சிறி அரிகோட்டா நகரத்தில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. ஏவூர்தி விண்ணில் இயல்பாக முன்னேறிப் பாய்ந்தது என இசுரோ அறிவித்தது. ஏவிய 176 மணித்துளிகளில் சந்திரயான்-3 விண்கலம் ஏவூர்தியில் இருந்து தனியே பிரிந்தது. ஏவிய ஏழு மணித்துளிகளில் 210 கிமீ குத்துயரத்தை அடைந்த பின்னர் இதன் புவிமைய ஒத்தியங்கும் வட்டணையில் நிலைநிறுத்தப்பட்டது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் தோராயமாக 384,400 கிலோமீட்டர்கள் ஆகும். ஆகத்து 23 அல்லது ஆகத்து 24 ஆகிய நாட்களில் சந்திரயான்-3 நிலவின் தென்முனைப் பகுதியில் மென்மையான தரையிறக்கத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இசுரோ செய்த கணக்கீட்டின்படி, நிலாவின் புவியண்மை நிகழும்போது சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்குச் சூலை மாதத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு சிறப்பு நடவடிக்கையாகும்.


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகத்து 5 அன்று நிலா வட்டணை நுழைவை வெற்றிகரமாக முடித்து சந்திரயான்=3 விண்கலத்தை நிலாமைய வட்டணையில் நிலைநிறுத்தியது. இந்த நடவடிக்கையை பெங்களூருவில் உள்ள இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, சட்டளை வலைப்பினையம்(இசுட்டிராக்-ISTRAC) நிறைவேற்றியது.


தொடர்ந்த நிலாமைய நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆகத்து 17, the விக்ரம் தரையிறங்கி செலுத்து பெட்டகத்தில் இருந்து பிரிக்கப்பட்டது; தரையிறங்கி நிலா மேற்பரப்பை அடைவதற்கான தன் சொந்தப் பயணத்தைத் தொடங்கியது. அடுத்த நடவடிக்கையை ஆகத்து 18 இல் மேற்கொண்டு தரையிறங்கி 117கிமீ க்கு 153கிமீ ஆக, நீள்வட்டத் தாழ்வட்டணையில் தரையிறங்க ஏந்தாக முதல்முறையாக வட்டணை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகத்து 20 அன்று தரையிறங்கியின் வட்டணை உயரம் 60 நொடிகள் எரியூட்டல் வழியாக 25கிமீக்கு 134கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.



விண்வெளி வீரர்களின் பயணங்கள் பற்றி என்ன அறிந்துள்ளீர்களா? 

இவர்களும் எட்டு மணி துாங்குகிறார்கள் என்பது உண்மைதானா?

விண்வெளி வீரர்களின் தனிமைப் பயணம் விசித்திரமானது. பல சுவாரஸ்ஸியங்கள் நிறைந்தது. பூமிக்கும் நிலவுக்கும் இடையே 2,38,857 மைல் துாரம் இரு்ககின்றது. 69 மணி 8 நிமிடங்களில் அப்பொலோ விண்கலம்8, நிலவினைத் தொட்டது. அப்பொலோ11, 3 நாட்கள் 3 மணி 41 நிமிடங்களில் நிலவில் முதல் மனிதனைச் சேர்த்தது. செவ்வாய் கிரகத்திற்கு சென்று வர 9 மாதங்கள் எடுத்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ராக்கெட்டில் செல்லும் விண்வெளி வீரர்களின் தனிமைதான்!

பல் துலக்குகிற வேளை இது…..

இந்தப் பயணியின் தனிமை எப்படி கழிகின்றது?

😊 தினமும் உட்பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம்.

😊 பற்பசை மூலம் தினமும் பல்துலக்க வேண்டும்.

😊 தங்களைச் சுற்றியுள்ள அறைகளின் சுவர்கள், தரை போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.( நான்கு வித்தியாசமான குப்பைத் தொட்டிகளில்தான் அந்தந்த கழிவுகளைப் போடவேண்டும்.)

ஐஸ்கிரீம் சாப்பிட அருயைான இடமாம்…

😊 சாப்பிடும் தன்மையிலுள்ள பழங்களைச் சாப்பிடலாம். அல்லது நீர் கலந்து சாப்பிடக் கூடிய உணவுகளும் உண்டு.

😊 உப்பும், பெப்பரும் திரவ நிலையில் கிடைக்கின்றன.

😊 சாப்பிடும் அளவும் உண்டு. தினசரி மூன்று வேளைகளுக்கு 1900 கலோரி உணவிலிருந்து3200 கலோரி வரை சாப்பிடுகிறார்கள்.

😊 தங்கள் உடம்பில், புவிஈர்ப்பு இல்லாத நிலையில், ஏற்படும் மாறுதல்களை விஞ்ஞான முறையில் ஆய்வு செய்ய வேண்டியதும் இவர்கள் பணி.

பிட்ஸா சாப்பிடுவோமா என்று கேட்கிறார்கள்..

😊 45 நிமிடங்களுக்கொருமுறை சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் காணமுடிவதோடு, விண்வெளிக் கப்பல்களிலுள்ள பல ஜன்னல்கள் ஊடாக “பூமி சுழல்வதை” பார்த்துக் கொண்டிருப்பது இவர்கள் பொழுதுபோக்கு

😊 விரும்பும் நேரங்களில் உடற்பயிற்சி செய்ய ஒரு டிரெட்மில் இருக்கின்றது.

உடற் பயிற்சி வேளை….

😊 மிகக் குறைவான புவிஈர்ப்பு திசையின் காரணமாக, இவர்கள் எந்த பொஸிஷனிலும் துாங்கலாம்.

😊 ஹோல்டால் மாதிரி ஒரு பெரிய பையில் தினசரி 8 மணி நேரம் இவர்கள் துாங்குவது என்பது உண்மைதான்.(துாக்கத்தின் நடுவே டாய்லட் சென்று வரவும் முடியும்)

😊 கனவுகள் காண்பதாகவும் சில விண்வெளிவீரர்கள் சொல்லியுள்ளார்கள். குறட்டை விட்டுத் துாங்கியவர்களும் உண்டு.

நாசாவில் விண்வெளி வீரர்களுக்கு 16 வகைப் பயிற்சிகள், 2 வருடங்களுக்கு ஏன் வழங்கப்படுகின்றன என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.


Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post