ஆடி அமாவாசை என்றால் என்ன?

ஆடி அமாவாசை என்றால் என்ன?


ஆடி அமாவாசை என்பது இந்து மதத்தில் முக்கியமான திருவிழா. இந்த நாளில், மக்கள் தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு படையல் இடுகிறார்கள். ஆடி அமாவாசை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை நாளை வருகிறது.

இந்த ஆடி மாதம் 2 அமாவாசை உள்ளது. அதில் ஆடி, 31-ம் திகதி, அதாவது ஓகஸ்ட் 16ம் திகதி வரும் அமாவாசையை கடைபிடிக்க வேண்டும். அமாவாசை திதி ஓகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை மதியம் 12.42 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாள் ஓகஸ்ட் 16 மதியம் 3.07 வரை அமாவாசை திதி உள்ளது.


ஆடி அமாவாசையில், மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புதிய ஆடை அணிந்து, கோவிலுக்குச் செல்கிறார்கள். கோவிலில், அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். தர்ப்பணம் என்பது தண்ணீர், பழம், இலைகள், உணவு போன்றவற்றை நதி அல்லது குளத்தில் விடுவதைக் குறிக்கும். மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளையும் படையல் இடுகிறார்கள்.



ஆடி அமாவாசையில், மக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களின் ஆசிகளைப் பெற்று, அவர்களின் ஆத்மாக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஆடி அமாவாசை என்பது இந்து மதத்தில் முக்கியமான திருவிழா. இந்த நாளில், மக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

அப்பா இறந்தவர்கள் பிடிக்கும் விரதம் ஆடிஅமாவாசை விரதம் ஆகும்


ஆடி அமாவாசையில் சாப்பிடக்கூடிய சில உணவுகள் இங்கே:
  • அரிசி
  • பருப்பு
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • பால்
  • தேன்
  • நெய்
  • சர்க்கரை
  • மிளகு
  • சீரகம்
ஆடி அமாவாசையில், மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் இடுகிறார்கள். இந்த உணவுகள் முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு பிடித்தவை என்று நம்பப்படுகிறது. ஆடி அமாவாசையில், மக்கள் தங்கள் முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியும் சந்தோஷமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

சென்னை: சிறப்பு மிகுந்த ஆடி அமாவாசை நாளில் நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பி பூலோகத்திற்கு வருவதாக நம்பப்படுகிறது. எனவே நம்முடைய முன்னோர்களை வரவேற்கும் விதமாக நாம் எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் அளிப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வீடு தேடி வரும் முன்னோர்கள்: அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்தராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.

முன்னோர்கள் மகிழ்ச்சி: ஆகஸ்ட் 16 அன்று புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது அவர்களுக்கு பிடித்தமான உணவுப்பொருட்களை படையல் இடலாம் கருப்பு எள்ளும் வைத்து வழிபட வேண்டும். பித்ரு லோகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் முன்னோர்கள் அமாவாசை அன்று தர்ப்பணம் வழங்குவதன் மூலம் அந்த நீரைப் பெறுவதாகவும், அதைப் பெற்றுத் திருப்தி அடைவதாகவும் ஐதீகம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் பித்ரு தோஷம் நீங்கும். முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.

பித்ரு தர்ப்பணம்: ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களையும் யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அமாவாசை நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

ஆடி அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவைகள்

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆடியில் சுபகாரியங்கள் செய்யலாமா?

ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம். இதை எதிர்மறையான ஒன்றாக நினைக்கத் தேவையில்லை. மாறாக இறைவழிபாட்டிற்கு என இருக்கும் மாதம் என்று புரிந்துகொள்ளலாம். சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆடிமாதம். கடகம் சந்திரனின் வீடு. பொதுவாகவே சூரியனும் சந்திரனும் இணைந்தால் அந்த நாள் புனிதமான அமாவாசை தினம் என்கிறது சாஸ்திரம். சூரியன் ஒரு மாதம் முழுவதும் சந்திரனின் வீட்டிலேயே சஞ்சாரம் செய்கிறார் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவேதான் இந்த மாதம் முழுவதுமே நாம் இறைவழிபாட்டிற்கும் பித்ரு வழிபாட்டுக்கும் உரிய மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடியில் ஆண்டாள் அவதரித்த பூரம், அன்னை இந்த உலகுக்கு ஹரியும் சிவனும் ஒன்று என்று எடுத்துச் சொன்ன ஆடித்தபசு, காவிரியைக் கொண்டாடும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேலும் இந்த மாதம் தட்சிணாயினப் புண்ணியகாலத்தின் தொடக்கமாகும். மேலும் மாதம்தோறும் பித்ரு வழிபாட்டுக்குரிய தினமான அமாவாசை இந்த மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி, புரட்டாசி, தை, மாசி, ஆகிய மாதங்களில் வரும் அமாவாசைகள் முக்கியமானவை. அனைத்து அமாவாசைகளிலும் தர்ப்பணம் செய்து வழிபட இயலாதவர்கள் குறைந்த பட்சம் இந்த நான்கு மாத அமாவாசைகளிலாவது முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆடி அமாவாசை என்ன முக்கியத்துவம்? எப்போது?

ஆடி அமாவாசை நாளில், அதிகாலையில் எழுந்து, அவரவர் வழக்கப்படி காலைப் பொழுதின் வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுதல் சிறப்பு. மறைந்துவிட்ட தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படி அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஆடி அமாவாசை தினம் இந்த ஆண்டு எப்போது என்னும் கேள்வி பலருக்கும் உள்ளது. காரணம், இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வருகின்றன. அதாவது ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1 - ம் தேதி (ஜூலை - 17) அன்றும் ஆடி 31-ம் தேதி (ஆகஸ்ட் -16) அன்றும் அமாவாசை தினமாக அமைகின்றன.

பொதுவாக இதுபோன்று இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தை அதிக மாதம் என்பார்கள். அதிக மாதங்கள் அனைத்துமே முன்னோர்கள் வழிபாட்டுக்கானவை. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.

இந்த சூழ்நிலையில் இரண்டு அமாவாசை தினங்களில் எது ஆடி அமாவாசை என்றால் இரண்டுமே முன்னோர் வழிபாடுகளுக்கு உரிய அமாவாசை தினங்கள்தான் என்றாலும் ஆடி அமாவாசை என்னும் சிறப்பினைப் பெறுவது இரண்டாவதாக வரும் அமாவாசை தினமே.

அமாவாசை நாளில் செய்யவேண்டியவை

அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.

பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும்.

பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும்.

ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம்

காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம். காலை நீராடிவிட்டு, பூணூல் அணிந்து முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும். மேலும் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும். 

அமாவாசைக்கு பயன்படுத்தக்கூடாத காய்கறிகள்
1. முட்டகோஸ்

2.நூக்கல்

3.முள்ளங்கி

4.கீரையில் அகத்திகிரை செய்யலாம்

5.பீன்ஸ்

6.உருளைகிழங்கு

7.காரட்

8.கத்தரிக்காய்

9.வெண்டைக்காய்

10.காலிஃபளவர்

11.ப்ரெக்கோலி

12.பட்டாணி

13.வெங்காயம்

14.பூண்டு

15.பெருங்காயம்

16.தக்காளி

17.கத்தரிக்காய்

18.சொள சொள

19.சுரக்காய்

20.முருங்கக்காய்

21.கோவக்காய்

22.பீட்ருட்

23.பச்சைமிளகாய்

அமாவாசையில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்

1. அவரக்காய்

2. புடலங்காய்

3. பயத்தங்காய்

4. வாழைத்தண்டு

5. வாழைப்பூ

6. வாழைக்காய்

7. சக்கரவள்ளி

8. சேனை

9. சேப்பங்கிழங்கு

10. பிரண்டை

11. மாங்காய்

12. இஞ்சி

13. நெல்லிக்காய்

14. மாங்கா இஞ்சி

15. பாரிக்காய்

16. பாகற்காய்

17. மிளகு

18. கரிவேப்பிலை

19. பாசிப்பருப்பு

20. உளூந்து

21. கோதுமை

22. வெல்லம்

23.வெள்ளை பூசணிக்காய்

24. மஞ்சள் பூசணிக்காய்

ஜோதிடத்தில் சூரியனை பிதுர்காரகன் என்பர். பிதுர் என்பது, தந்தையை குறிக்கும். சந்திரனை மாத்ருகாரகன் என்பர். மாத்ரு என்றால் தாய் என்று அர்த்தம். சூரியனும், சந்திரனும் அமாவாசைகளில்தான் சேரும். எனவே தந்தை மற்றும் தாய்க்குரிய கிரகம் ஒன்றாகக் கூடி வரும் நாளில், இவர்களை நினைப்பது பொருத்தமாக இருக்கும். அதனால்தான் அமாவாசையை முன்னோர் வழிபாட்டு நாளாக கருதுகின்றனர். பிதுர்லோகம் எனப்படும் முன்னோர் உலகத்தில் இருப்பவர்களுக்கு, நாம் கொடுக்கும் தர்ப்பண பொருளான எள்ளும், நீரையும் சூரிய பகவானே அவர்களிடம் கொண்டு சேர்க்கிறார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இன்னொரு விசேஷ தகவல். செவ்வாய்க்கிழமையன்று அமாவாசை வருமானால், அதை பவுமாதி அமாவாசை என்பர். பவுமன் என்றால் செவ்வாய் என பொருள். செவ்வாயை பூமிகாரகன் என்பர். இந்நாளில், நிலம் வாங்குவது சம்பந்தப்பட்ட பேச்சை ஆரம்பித்தல், கடனை அடைத்தல் ஆகிய பணிகளைச் செய்யலாம். இந்நாளில் கடன் தீர்க்கப்பட்டால், மீண்டும் கடன் தொல்லை வராது என்பர். இவ்வாண்டு ஆடி அமாவாசை நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.55 மணிக்கே தொடங்கி விடுகிறது. இதில் இருந்து மாலை சூரியன் மறையும் நேரமான மாலை 6.33 மணிக்குள் மேற்கண்ட பணிகளைச் செய்யலாம். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை தர்ப்பணம் செய்யலாம். அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் புனிதமானது. சந்திரனின் வீடான கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது நிகழும் அமாவாசை ஆடி அமாவாசை. இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பொதுவாக ஆடி அமாவாசை நாளில்தான் பித்ருக்கள் பூமியை நோக்கிய தம் பயணத்தை தொடங்குவர். எனவே ஆடி அமாவாசை தர்ப்பணம் என்பது பித்ருக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் ஆசியைப் பெற்றுத் தரும். பொதுவாக நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் 12 பேர். தந்தை வழியில் தந்தை, பாட்டனார், பாட்டனாரின் தகப்பனார், தாயார், தகப்பனாரின் தாயார் மற்றும் பாட்டனாரின் தாயார் ஆகிய அறுவருக்குத் தர்ப்பணம் வழங்க வேண்டும். அதே போல் தாய் வழியிலும் தாயாரின் தகப்பனார், தாயின் தகப்பனாரின் தகப்பனார், தாயின் பாட்டனாருக்குத் தகப்பனார், தாய்க்குத் தாய், தாய்ப் பாட்டனாருக்கு மனைவி, தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டி ஆகிய அறுவருக்கும் கட்டாயம் தர்ப்பணம் வழங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இவர்கள் தாய் தந்தையரின் இரண்டு தலைமுறை பித்ருக்கள். 

இவர்கள் தவிர சகாருணீகர்கள் எனப்படும் பங்காளிகள், உறவினர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் அத்தகைய சிறப்பான தினங்களாகும். நாளை மறுநாள் புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். 
மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். 

இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது. மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் முன்னோர்களின் படங்கள் முன்னிலையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயாசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். 

அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள். அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். 

அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்.. திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும். இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது. பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல.. காய்கறிகள் தானமாக தரவேண்டும், குறிப்பாக பூசணிக்காய்.. ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும்.. 

அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள்.. முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும் அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. 

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.

சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் வரும் நாள் தான் அமாவாசை ஆகும். ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அமாவாசை தோன்றும். அவற்றில், தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய இரண்டுமே மிகச்சிறப்பு வாய்ந்தவை. முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியம் செய்யவும், வேண்டி விரதம் இருக்கவும் ஏற்ற நாளாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை, ஜூலை 28 அன்று வருகிறது. கடக ராசியில் ஏற்கனவே சூரியன் சஞ்சரிக்கும் நிலையில், சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது தோன்றும் அமாவாசை மிகச்சிறப்பானது. ஆடி அமாவாசையின் சிறப்பு, எப்போது தர்ப்பணம் செய்யலாம், விரத முறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிரத்தையும் (மிகுந்த அக்கறையுடன்) நாம் செய்யும் காரியம் தான் சிரார்த்தம் என்று மருவி உள்ளது. எனவே, இந்த நாளில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் அனைத்து காரியங்களை செய்ய வேண்டும்.

ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும்.

குறிப்பாக, பித்ரு காரியம் செய்ய, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையச் செய்யும் புண்ணிய ஸ்தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் அலைமோதுவார்கள். ஆனால், அந்த இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் நீர் நிலைகள் அல்லது வீட்டிலேயே கூட அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.

வீடு முழுவதையும் தண்ணீர் விட்டு கழுவி, சுத்தம் செய்து, பூஜையறையில் சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, அலங்கரிக்க வேண்டும். முதல் நாளே, இதை செய்து விட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்ததால், பெரிய அளவில் ஒரு இடத்தில் ஒன்று கூடி தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நீர் நிலைகளில் கூட்டாக தர்ப்பணம் செய்ய வாய்ப்புள்ளவர்கள், மற்றவர்களுடன் சேர்த்து, பித்ருக்களை வேண்டி தர்ப்பணம் செய்து முடிக்கலாம். இல்லையென்றால், வீட்டில் புரோகிதரை வரவழைத்து தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் செய்ய முடியவில்லை என்னும் பட்சத்தில், உணவு சமைத்து அன்னதானம் செய்யலாம்.

இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால், சுமங்கலிப் பெண்களை சாப்பிட வரவேற்று, உணவு பரிமாறி, அவரவருக்கு இயன்ற வகையில் சேலை, மஞ்சள், குங்குமம் வழங்கி வழிபட்டு முன்னோர்களின் ஆசி பெறலாம்.

குழந்தைகள் தவிர்த்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர், உங்கள் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். எத்தனை நபர்களை வணங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு தனித்தனியாக வாழை இலையில் உணவு பரிமாறி படைக்கலாம், அல்லது பெரிய தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் பரிமாறி படைக்கலாம்.

முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.

காகமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும்


காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் / காகம் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்துள்ளார்கள், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

மேலும், காகம் சனீஸ்வரரின் வாகனம் ஆகும். எனவே, சனி தோஷம் நீங்கும் என்பதும், ஏழரைச் சனி, அஷ்டம சனியின் தாக்கம் குறையும் என்பதும் நம்பிக்கை.

காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.


தானமாக என்ன கொடுக்கலாம்?


பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை, உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம். சிலர், கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்குவர். ஆனால், அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மேலும், அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும்.?


இந்த ஆண்டு அமாவாசை திதி 27 ஜூலை 2022 அன்று இரவு 10.06க்குத் தொடங்கி, 28 ஜூலை வரை நீடிக்கிறது. எனவே, 28 ஜூலை அன்று காலை சூரிய உதயத்துக்குப் பின்னர், பிற்பகல் 3 மணி வரை எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம், திதி கொடுக்கலாம்.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post