பென்குயின் பற்றிய தகவல்கள்

பென்குயின் பற்றிய தகவல்கள்

பென்குயின்கள் என்பது நீரில் வாழும் பறவைகள் ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. உலகம் முழுவதும் சுமார் 18 இனங்களிலான பென்குயின்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியது பேரரசப் பென்குயின் (Emperor penguin) ஆகும். இதன் உயரம் 1.1 முதல் 1.3 மீட்டர் வரை இருக்கும். மிகச்சிறியது சிறிய பென்குயின் (Little penguin) ஆகும். இதன் உயரம் 30 முதல் 35 சென்டிமீட்டர் வரை இருக்கும்.



பென்குயின்கள் தங்கள் இறகுகளைப் பயன்படுத்தி கடலில் நீந்துகின்றன. இவற்றின் இறகுகள் நீரில் நனையாமல் இருக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பென்குயின்கள் கடலில் வேகமாக நீந்தும் திறன் பெற்றவை. இவை ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்த முடியும்.

பென்குயின்கள் முக்கியமாக மீன், கணவாய்கள், டால்பின்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உண்கின்றன. இவை ஒரு நாளில் தங்கள் உடல் எடையைப் போன்ற அளவு உணவை உட்கொள்கின்றன.

பென்குயின்கள் சமூக விலங்குகள் ஆகும். இவை கூட்டமாக வாழ்கின்றன. இனப்பெருக்க காலத்தில் ஆண் மற்றும் பெண் பென்குயின்கள் இணைந்து கூடு கட்டி குஞ்சுகளை வளர்க்கின்றன.

பென்குயின்கள் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன. கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு, கடல் மாசுபாடு போன்ற காரணிகள் பென்குயின்களின் வாழ்விடத்தை பாதிக்கின்றன. மேலும், சில இனங்கள் வேட்டையாடுபவர்களால் வேட்டையாடப்படுகின்றன.

பென்குயின்கள் உலகின் மிகவும் பிரபலமான கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றாகும். இவை பல நாடுகளின் அடையாளமாகவும் விளங்குகின்றன.

பென்குயின்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

  • பென்குயின்கள் தங்கள் இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால், குளிர்காலத்தில் உறைந்துவிடாமல் தடுக்கப்படுகின்றன.
  • பென்குயின்கள் தங்கள் முதுகில் மட்டுமே முடி வளர்கின்றன.
  • பென்குயின்கள் ஒரு நாளில் 70% நேரத்தை தூங்கிக் கழிக்கின்றன.
  • பென்குயின்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழலாம்.

பென்குயின் பறவையின் வாழ்விடம் எது?

இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன.

பென்குயின் - ஒரு அரிசி மூட்டையைத் தூக்கி நிறுத்தி வைத்தது போல இருக்கும் வெயிட்டான பறவை. பறவையினத்தை சார்ந்த இந்த பென்குயின் பறவைகளால் பறக்கமுடியாது. 

மிகவும் கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் இவை மிகவும் சாதுவானவை. பனிப்பாறைகள் நிறைந்த, துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வாழும். ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், அண்டார்டிகா, பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் வாழும் இடங்கள்.


பெரிய பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும். தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இவை நல்ல தண்ணீரைக் குடிக்காது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

பென்குயின் கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது முகமூடி போட்ட மனிதன் போல இருக்கும். இதற்கு குட்டை கழுத்து, கனத்த உடம்பு. வால் கொஞ்சம் மட்டும் உண்டு. இதன் உடல் முழுவதும் தண்ணீர் புகாத வாட்டர் புரூப் (Water Proof) சிறகுகள் உள்ளன. கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று அடுக்குச் சிறகுகள் இதன் உடம்பில் இருக்கும்.


பென்குயின் உடம்பில் தினசரி 150 கிராம் சிறகுகள் வரை உதிர்ந்து விடும். ஆனால், 12 நாட்களில் புதுச்சிறகுகள் முளைத்து விடும். தன் உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு, கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும் பென்குயின்.

இதற்கு பிடித்த உணவு கடல்மீன்கள்தான். கடலில் டைவ் அடித்து வெகு ஆழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்து லபக், லபக்கென்று சாப்பிடும். கடலில் 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும்.

ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால், காலால் இவை நடக்காது. வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங் செய்யும். பென்குயின்கள் நிலத்தில் எதையும் சாப்பிடாது. பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் பல நாட்களாக கரைக்குத் திரும்பாமல் நீந்தும்.

  
அதிகம் நேரம் நீரிலேயே இருப்பதால் பென்குயின்கள் உடலில் சிறு அழுக்குகூட இருக்காது. எப்பொழுதும் மேக்கப் போட்ட நடிகை போல கிளாமராக இருக்கும். இந்த பிரெஷ் தோற்றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு, நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும். தனது காதல் மனைவியைத் தவிர பிற பென்குயின்களை ஒரு போதும் ஆண் பென்குயின் நாடுவதில்லை.

மாலை நேரம் வந்துவிட்டால் பென்குயின்களுக்கு குஷி பிறந்துவிடும். கடற்கரையில் காலார நடக்கும்போதே காதல் பிறந்துவிடும். காதலனும், காதலியும் எதிரெதிரே பார்த்தபடி நின்று கொள்ளும். நீண்ட நேர முத்த மழை நடக்கும். முத்தத்துக்குப் பின், இறக்கைகளை படபடவென்று அடித்துக் கொள்ளும். பிறகு, காதலியின் தலையை தன் சிறகுக்குள் மறைத்து இரண்டறக் கலக்கும் ஆண் பென்குயின்.

இணைவு முடியும்வரை டிரம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டு பென்குயின்களும் எழுப்பிக் கொண்டேயிருக்கும். அதை கேட்டு இணைவு நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்து, மற்ற பென்குயின்கள் வேறு பக்கம் முகத்தைத் திரும்பிக்கொள்ளும். டிரம்பெட் இசை, இறக்கைகள் படபடவென அடிக்கும் சத்தம் இரண்டும் நின்றுவிட்டால் இணைவு முடிந்துவிட்டது என அர்த்தம்.

வயிற்றில் முட்டை உருவாகி, டெலிவரி டைம் வந்ததும், கடற்கரையில் புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் முட்டையிடுவதற்கு கூடும். இளம் பச்சை அல்லது வெள்ளை நிற முட்டைகள் இடும்..30 முதல் 60 நாட்கள் வரை அடைகாப்பு நடக்கும். கணவனுக்கும் இதில் பங்குண்டு. இரண்டும் பாதி பாதி நாட்கள் ஷிப்ட் முறையில் அடைகாக்கும். அந்த நாட்கள் முழுவதும் அன்ன ஆகாரம் சாப்பிடாது. பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால், பென்குயின் தனது பாதச் சவ்வுகளுக்கு இடையில் முட்டையை வைத்தபடி அன்ன நடை நடந்து இடம் பெயரும். பென்குயின்களை பார்க்க ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நிறைய டூரிஸ்ட்கள் குவிகிறார்கள்.

1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.
2.தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காககழித்துவிடும்.
3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.
4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும் இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.
5. இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.
6. இதன் உடல் வெப்பநிலையும் மனிதர்களை போல் தான். திமிங்கலங்களை போல் தோலின் அடிபகுதி முழுவதும் கொழுப்பால் சூழபட்டிருக்கும். ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும்.
7. இவற்றின் உணவு மீன்கள்,மற்றும் இறால்கள், இதன் அலகின் முன்பகுதி வளைந்து காணப்படும் இவை வழுக்கும் தன்மையுள்ள மீன்களை தவறவிடாமல் பிடித்துகொள்ளும்.
8. இவை நன்னீரை குடிக்காது மற்றும் நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.
9. மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும். பின் நல்ல ஆண் துணையையை தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது பின்னர் குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க. இந்த சொந்தம் பெரும்பாலும் வருடகணக்கில் தொடரும்.
10. பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில்பெண் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்).
11.குஞ்சு பொரித்து வெளியே வந்ததும் கத்தும், பெற்றோர்கள் அதன் குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும்.
12. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றை பிற பறவைகளிடம் ஒப்படைத்து விட்டு (sort of like a daycare) கடலுக்குள் சென்று உணவு தேட ஆரம்பிக்கும்.
13. பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல்கள் தான் இதன் முதல் எதிரி.
14. மனிதர்களை போல் நன்றாக பொழுதுபோக்க கரணம் அடிக்கும், சர்பிங் பண்ணும்...
15. 17 வகையான பென்குயின் இனம் உள்ளது. 

பென்குயின் வகைகள்.

  • அரச பென்குயின், (Aptenodytes patagonicus)
  • பேரரசப் பென்குயின், (Aptenodytes forsteri)
  • கெண்டூ பென்குயின், (Pygoscelis papua)
  • அடேலி பென்குயின், (Pygoscelis adeliae)
  • தாடியுள்ள பென்குயின், (Pygoscelis antarctica)
  • ராக்ஹோப்பெர் பென்குயின், (Eudyptes chrysocome)
  • பியோர்லாண்ட் பென்குயின், (Eudyptes pachyrhynchus)
  • ஸ்னேர்ஸ் பென்குயின், (Eudyptes robustus)
  • நிமிர்-கொண்டை பென்குயின், (Eudyptes sclateri)
  • மக்கரோனி பென்குயின், (Eudyptes chrysolophus)
  • மஞ்சட்கண் பென்குயின், மெகாடைப்டெஸ் அண்டிபோடெஸ் (Megadyptes antipodes)
  • சிறிய பென்குயின் (அல்லது தேவதை பென்குயின்), (Eudyptula minor)
  • ஆபிரிக்கப் பென்குயின், (Spheniscus demersus)
  • மகெலனிக் பென்குயின், (Spheniscus magellanicus)
  • ஹும்போல்ட் பென்குயின், (Spheniscus humboldti)
  • கலப்பகொஸ் பென்குயின், (Spheniscus mendiculus)
என மொத்தம் 17 வகை பென்குயின்கள் உள்ளன.

  • பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.
  • தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காககழித்துவிடும்.
  • நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.
  • இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும் இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.
  • இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.
  • இதன் உடல் வெப்பநிலையும் மனிதர்களை போல் தான். திமிங்கலங்களை போல் தோலின் அடிபகுதி முழுவதும் கொழுப்பால் சூழபட்டிருக்கும். ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும்.
  • இவற்றின் உணவு மீன்கள்,மற்றும் இறால்கள், இதன் அலகின் முன்பகுதி வளைந்து காணப்படும் இவை வழுக்கும் தன்மையுள்ள மீன்களை தவறவிடாமல் பிடித்துகொள்ளும்.
  • இவை நன்னீரை குடிக்காது மற்றும் நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.
  • மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும். பின் நல்ல ஆண் துணையையை தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க. இந்த சொந்தம் பெரும்பாலும் வருடகணக்கில் தொடரும்.
  • பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில்பெண் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்)
  • குஞ்சு பொரித்து வெளியே வந்ததும் கத்தும், பெற்றோர்கள் அதன் குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும்.
  • குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றை பிற பறவைகளிடம் ஒப்படைத்து விட்டு (sort of like a daycare) கடலுக்குள் சென்று உணவு தேட ஆரம்பிக்கும்.
  • பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல்கள் தான் இதன் முதல் எதிரி.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post