கோகினூர் வைரம் - Koh i Noor Diamond
இந்த வைரம் இந்தியாவின் கோல்கொண்டா பகுதியில் உள்ள கொல்லூர் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மரபு கூறும் வரலாற்றின் படி இது காக்கத்திய அரசகுடி ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வாரங்கல்லில் உள்ள பத்திரகாளி அம்மன் சிலையின் இடது கண்ணாக இந்த வைரம் பொருத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தென்னிந்தியப் படையெடுப்பின் போது இதை கொள்ளையடித்ததாக கதைகள் உள்ளன.
1. முகலாய பேரரசு காலம்
- முகலாய பேரரசின் நிறுவனர் பாபர் (Babur) தனது "பாபர்நாமா" (Baburnama) நூலில் இந்த வைரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
- பின்னர் இது அக்பர், ஷாஜகான், மற்றும் ஆரங்கசேப் போன்ற மன்னர்களின் கைகளில் இருந்தது.
- ஷாஜகான் தாஜ்மஹால் கட்டியபோது, கோகினூர் வைரம் முகலாயக் கல்லறைகளில் முக்கியமான பொக்கிஷமாக இருந்தது.
2. பாரசீக படையெடுப்பு (1739)
- 1739 ஆம் ஆண்டு, பாரசீக ஆட்சியாளர் நாதர் ஷா, டெல்லியைத் தாக்கி முகலாய அரசின் செல்வங்களைப் பறித்தார்.
- அவருக்குக் கிடைத்த செல்வங்களில் முக்கியமான ஒன்று கோகினூர் வைரம்.
- அதைப் பார்த்த அவர் மகிழ்ச்சியில் "இது ஒரு ஒளியின் மலை" என்று கூறி, இதற்கு “கோகினூர்” எனப் பெயர் வைத்தார். இதுவே இப்பெயரின் தோற்றம்.
3. ஆப்கான் மற்றும் சிக் பேரரசு (1747–1849)
- நாதர் ஷா இறந்தபின் வைரம் அவரது பேரரசில் இருந்து ஆப்கான் ஆட்சியாளர்களிடம் சென்றது.
- பின்னர் இது சிக் பேரரசர் மகாராஜா ரஞ்சித் சிங் க்கு (Ranjit Singh) கிடைத்தது.
- ரஞ்சித் சிங் இதை தன் பொக்கிஷமாக வைத்துக் கொண்டார் மற்றும் இதனை சிக்கிசத்தின் (Sikhism) புனித தங்கக் கோவிலுக்குக் கொடுக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
4. பிரிட்டிஷ் கையில் (1849)
- 1849-ல் சிக் பேரரசு வீழ்ந்தபின் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனி லாகூர் உடன்படிக்கையின் (Treaty of Lahore) படி கோஹினூரை கைப்பற்றியது.
- அதன்பின் வைரம் இங்கிலாந்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டு ராணி விக்டோரியாவுக்கு வழங்கப்பட்டது.
- 1851-ல் இது லண்டனில் நடைபெற்ற உலகக் கண்காட்சியில் (Great Exhibition) பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
5. வடிவ மாற்றம்
- மூலமாக கோஹினூர் வைரம் 186 காரட் எடையுடன் இருந்தது.ஆனால், அதை பிரிட்டிஷ் நகை வடிவமைப்பாளர்கள் மீண்டும் வெட்டி, அதன் பிரகாசத்தையும் வடிவத்தையும் மேம்படுத்தினர்.இதனால் தற்போது அதன் எடை 105.6 காரட் ஆக குறைந்தது.
- 2022 இல் இந்திய கலாச்சார அமைச்சகம் Project Repatriation of Artefacts என்ற திட்டத்தை தொடங்கியது.
- இதில் கோகினூர் வைரம், நெடுஞ்சாளி சிற்பங்கள், சங்க காலப் பொருட்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
- 2023–2024 இல் அரசு பிரிட்டனுடன் கலாச்சார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யும் நோக்கத்தில் ஆலோசனை நடத்தியது.
- இதன் ஒரு பகுதி Shared Heritage Programme என்ற பெயரில் உருவாகலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
- அதாவது, முழு திருப்பிவற்றல் (Return) அல்ல இரு நாடுகளும் இணைந்து காட்சிப்படுத்தும் ஒப்பந்தம் இருக்கலாம்.
இந்தியாவின் கோகினூர் வைரம் மீட்பு கோரிக்கை (Repatriation of the Koh-i-Noor)
முதல் கோரிக்கை (1947–1953)
- 1947 – இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கோகினூர் வைரம் பிரிட்டிஷ் அரசால் மீண்டும் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
- 1948–1953 காலகட்டத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru) பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கை அனுப்பினார்.
சட்ட அடிப்படைகள் மற்றும் பிரிட்டனின் வாதம்
1849 இல் Treaty of Lahore என்ற ஒப்பந்தத்தின் படி சிக்குக் கிஂக்டத்தின் அரசர் மகாராஜா தலீப் சிங் (Maharaja Duleep Singh) கோகினூர் வைரத்தை பிரிட்டிஷ் ராணிக்கு பரிசளிக்க ஒப்புக் கொண்டார் என்று பிரிட்டிஷ் வாதம் முன்வைக்கிறது. இந்தியா இதை அநியாயமான ஒப்பந்தம் என்றும் காலனித்துவ அடக்குமுறை காரணமாக நடந்தது என்றும் வாதிக்கிறது.
பாகிஸ்தானின் கோரிக்கை
1976 இல் பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்தது.
இதன் பின்னர் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஈரானும் அது எங்களுக்கே சொந்தமானது என்ற வாதத்தை முன்வைத்தன.
பிரிட்டன் அனைவரின் கோரிக்கையையும் நிராகரித்தது.
2000–2015 அரசியல் மற்றும் நீதிமன்ற நிலை
- 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசு மீண்டும் வைரத்தை கோரியது.
- 2010 இல் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்தியாவுக்கு வந்தபோது அவர் கூறினார்.
- நான் பிரதமராக இருந்தால் கோகினூரை திருப்பி அளிப்பதில்லை ஒருவேளை தொடங்கினால் எல்லாவற்றையும் திருப்பி அளிக்க வேண்டி வரும்.
- 2015 இல், இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டது.
- கோகினூர் வைரம் இந்தியாவின் பாரம்பரியச் செல்வம் என்பதால் அதை திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியது.
- வழக்கின் பெயர்- All India Human Rights & Social Justice Front v. Union of India (2016)
