கைலாயமலை

கைலாயமலை 


கைலாயமலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் இமயமலை உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு புகழ் பெற்ற பர்வதம் ஆகும். இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் சிந்து நதி, சட்லெச்சு ஆறு, காக்ரா ஆறு மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகின்றன. இதனருகே புகழ் பெற்ற மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளன. மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும். இங்கு வரும் யாத்திரிகர்கள் இந்த ஏரியில் புனித நீராடுவது வழக்கம். இந்த கயிலை பர்வதத்தின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வருவதைத்தான் பக்தர்கள் புனித கடமையாகக் கருதுகிறார்கள். 52 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலம் பாதையில் பயணிக்க குறைந்தபட்சம் 15 மணி நேரம் ஆகும்.




கைலாயமலை இந்து, சமண, பௌத்த சமயங்களில் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இந்து மதத்தில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகியோரின் இருப்பிடமாக கைலாயமலை கருதப்படுகிறது. சமண மதத்தில், ரிஷபதேவர் என்ற தீர்த்தங்கரர் கைலாய மலையில் முக்தி அடைந்தார். பௌத்த மதத்தில், புத்தர் தம் ஞானோபாதத்தை அடைந்த இடம் கைலாயமலை என்று கூறப்படுகிறது.

கைலாயமலையின் உயரம் மற்றும் அமைவிடம் காரணமாக, அதை ஏறுவது மிகவும் கடினமானது. இதுவரை யாரும் கைலாயமலையின் உச்சியை எட்டியதில்லை. கைலாயமலைக்கு செல்ல, நேபாளம் அல்லது திபெத் வழியாக யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

கைலாயமலையின் புனிதத்துவம் மற்றும் அதன் மர்மம் காரணமாக, இது உலகின் மிகவும் பிரபலமான புனித தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் கைலாயமலைக்கு வருகை தருகிறார்கள்.

கைலாயம் மலை பற்றிய அரிய தகவல்கள் 

சிவனின் இருப்பிடம் கைலாய மலை என்று புராணக்கதைகளிலும், ஆன்மீகக் கதைகளிலும் கூறப்பட்டுள்ளது.

இப்புவியில் உள்ள இயற்கையின் படைப்புகளில் உயரமாக இருக்கும் “மலைகள்” நம் அனைவரின் மனத்தைக் கவர்வதாகும். கிரேக்கர்கள் “ஒலிம்பஸ்” மலையையும் யூதர்கள் “சினாய்” மலையையும் இந்து, ஜைன, பவுத்த மதத்தினர்கள் “கயிலாய” மலையையும் தெய்வீக தன்மை கொண்டவையாக கருதுகின்றனர். அதிலும் நம் நாட்டின் “இமய மலைத்தொடர்களில்” இருக்கும் கயிலாய மலை உலகைக் காக்கும் கடவுளான “சிவபெருமான்” மற்றும் எண்ணற்ற சித்த புருஷர்கள் வாழும் இடமாக இந்து மத பக்தர்கள் கருதுகிறார்கள்.

கைலாய மலையை ஏறுவோர்கள் இளம் வயதிலேயே முதுமை அடையும் மர்மம்

பல அமானுஷ்ய ஆற்றலைக் கொண்ட இம்மலையில் ரகசியங்களை அறிய இம்மலையில் ஏறிய பல மலையேற்ற வீரர்கள், மீண்டும் உயிருடன் திரும்பவில்லை என இம்மலையின் ஆற்றலைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள். வேறு சில மலையேற்ற வீரர்கள் இம்மலையின் ஒரு மர்மமான பகுதியை அடைந்த போது, பல ஆண்டுகள் முதுமையடைந்தவர்களாக மாறியதாகவும், அதற்கு பின் ஓராண்டு காலத்திலேயே அவர்கள் ஒவ்வொருவராக இறந்துவிட்டதாக கூறுகிறார், அச்சம்பவத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர்.

இந்த மண்ணின் கலாச்சாரத்தில் பற்பல யாத்திரைகள் இருந்து வந்தாலும், கைலாய யாத்திரை என்பது மிக உயர்வாகக் கருதப்படுகிறது. இங்கு சென்று வருவதன் மூலம் ஆதியோகியாம் சிவனையே உணர்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

கைலாய மலையின் புரியாத மர்மங்கள் !!

இமயமலை

இமயமலையில் அமைந்திருக்கிறது கைலாய மலை. இந்து மதத்தில் கைலாய மலை என்பது மிகவும் புனிதத்துக்கு உரியது. கைலாயத்தின் இரகசியங்களை அறிய முற்பட்டவர்கள், இறந்து போவதாகவும், தெய்வபக்தியுடன் போய் வருபவர்கள் நல்ல நிலையை அடைவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

பிரம்மனின் இருப்பிடம் சத்யலோகம், விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அது போலவே சிவனின் இருப்பிடம் கைலாயம் என்று புராணக்கதைகளிலும், ஆன்மீகக் கதைகளிலும் கூறப்பட்டுள்ளது.

சத்யலோகமும், வைகுண்டமும் மனித கண்களுக்குத் தெரியாதது எனவும், கண்களுக்குப் புலப்படும் ஒரே தேவலோகம் கைலாயம் எனவும் இந்துக்கள் நம்புகிறார்கள். கைலாயத்தில் இருக்கும் சிறப்புகளைப் பற்றி இங்கு பார்ப்போம்:

இமயமலை

இந்தியாவின் வடக்குப் பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவுக்கும் திபெத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. அதாவது இதன் இருப்பிடம் திபெத் நாட்டினால் எல்லை கொள்ளப்படுகிறது.

நதிகள்

சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா போன்ற புகழ் பெற்ற ஆறுகள் இந்த மலையில் உற்பத்தியாகின்றன. இது மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக இருக்கும் அதே வேளையில், இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது.

கைலாய மலை - பெயர்க்காரணம்


கைலாய மலை 6638 மீ உயரம் கொண்டதாகும். 'கெலாசா' எனும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவான 'கைலாசம்' எனும் பெயருக்கு படிகக் கற்கள் என்று பொருள். பார்ப்பதற்கு அழகிய படிகக் கற்கள் போலவே சூரிய ஒளியில் ஜொலிக்கிறது.

மத நம்பிக்கைகள்

கைலாய மலை ஒவ்வொரு மதத்தின்படியும் ஒவ்வொரு நம்பிக்கை கொண்டதாக இருக்கிறது. இந்து மதத்தின்படி, கைலாய மலையில் சிவன் வாழ்வதாகவும், அவ்வப்போது பார்வதியுடன் தியானம் செய்வார் எனவும் அந்த நேரம் மயான அமைதி நிலவும் எனவும் அங்கு சென்று வந்த பக்தர்கள் கூறுகின்றனர்.

சமண மதப்படி

கைலாய மலை, மேரு மலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்குதான் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷிபானந்தா மோட்சம் அடைந்ததாக நம்புகின்றனர் சமணர்கள்.

புத்தர்களின் நம்பிக்கை

கிபி 7ம் நூற்றாண்டுகளில் புத்தமதம் நன்கு பரவியிருந்த போது, திபெத்தில் இந்த கைலாயத்தில் தான் புத்த சக்ரசம்வாரா இருந்தார் என்று நம்பப்படுகிறது. மேலும் உள்ளூர் மதமான போன் என்பவர்கள் அவர்களது கடவுள் வாழ்ந்த இடமாக கைலயாத்தைக் கருதுகின்றனர்.

மானசரோவர் ஏரி


உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஒரே நன்னீர் ஏரி என்ற புகழ்பெற்றது மானசரோவர் ஏரி ஆகும். இதை பிரம்மதேவர் உருவாக்கியதாக ஆன்மீகவாதிகளால் நம்பப்படுகிறது.

சிவபெருமான் குளிக்கும் ஏரி


பாலையும் நீரையும் தனித்தனியாக பிரித்து வைக்கும் அன்னப்பறவைகள் வாழும் இடமாகவும், இந்த இடம் ஆன்மிகவாதிகளால் நம்பப்படுகிறது. மேலும், முனிவர்களும், தேவர்களும், சிவபெருமானோடு சேர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் இந்த ஏரியில் வந்து நீராடுவதாக நம்பிக்கை உள்ளது.

இந்து மதத்தின்படி மானசரோவர் ஏாியை தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏாியின் நீரைப் பருகினால் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கைலாயமலையைப் போலவே, மானசரோவர் ஏாியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர். இவ்வோியில் நீராடினாலும், இவ்வோி நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இவ்வோியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் இவ்வோி நீாில் புனித நீராடி மகிழ்கின்றனர்.

மானசரோவர் ஏாியானது பல காலங்களுக்கு முன்பாகவே ஆசிய நதிகளான பிரம்மபுத்திரா, காகரா, சிந்து மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் மூலமாக யாத்ரீகர்களால் கருதப்பட்டது. எனவே யாத்ரீகர்கள் இவ்விடத்தை மையப்பகுதியாக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981- வரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1980-க்குப் பிறகு மறுபடியும் இந்திய யாத்ரீகர்களின் காலடிச் சுவடுகள் பதியத் தொடங்கின.

புவியியல் அமைப்பு


மானசரோவர் ஏாி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மிக உயரத்தில் அமைந்துள்ள தூய நீர் ஏாியாகும். பொதுவாக உப்பு நீர் ஏாிகள் திபெத்திய பீடபூமிகளில் அமைந்திருக்கும். மானசரோவர் ஏாி வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 88 மீட்டர் ஆகும். இதன் ஆழம் மிக அதிக அளவான 90 மீ ஆழம். இதன் அடிப்பரப்பளவு 123.6 சதுர மைல்கள். மானசரோவர் ஏாியானது, இராட்சதலம் ஏரியுடன் கங்கா கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளது. மானசரோவர் ஏாியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது.

மானசரோவர் ஏாியில் உள்ள நீர் வழிந்து ராக்ஸ்டல் உப்புநீர் ஏாியில் சேருகிறது. இவ்விரு ஏாிகளும் சட்லெஜ் நதி பாயும் நிலப்பகுதியின் ஒரு பகுதியான உள்ளன. ஆனால் பாறைகள் சிதைவுற்றதால் இரு வேறு பகுதிகளாக பிாிந்து காணப்படுகிறது.

மானசரோவர் ஏரியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் கைலாயம் உள்ளது. இந்த ஏரியில் குளித்து விட்டுச் செல்வதால், பக்தர்கள் முக்தி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிரதிபலிக்கும் மலையில் அற்புத காட்சி

52 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை சுற்றி வரும்போது, இரண்டு இடங்களில் இந்த மலையின் அற்புதக் காட்சியை நாம் காண முடியும். அதுவும் சூரியஒளியில் பிரதிபலிக்கும் இந்த மலையின் காட்சி சுகு, ஜெய்தி எனும் இரண்டு இடங்களில்தான் நன்றாகத் தெரிகிறது:

கைலாயத்துக்கு செல்பவர்கள் அனைவருக்கும், இது போன்ற காட்சி தென்படுவதில்லை. இதனை அரிதிலும் அரிய காட்சி என்றும் கௌரிசங்கர் காட்சி எனவும் குறிப்பிடுகின்றனர்:

இந்த மலையில் நிறைய மர்மங்கள் ஒளிந்துள்ளனவாம். அதிலும், சிவன் ருத்ரதாண்டவமாடும் போது பனிமலை சறுக்கல்கள் வருவதாகவும், சிவன் பார்வதி தேவியுடன் மானசரோவரில் தோன்றும் காட்சி கண்களுக்குத் தெரிவதாகவும் பலர் கூறியுள்ளனர். ஆனால் உண்மை கண்டறிகிறேன் என்று செல்பவர்கள் இறந்து விடுகின்றனர் என்றும் பரவலாக பேச்சு உள்ளது.

இராட்சதலம் ஏரி


மானசரோவருக்கு பக்கத்திலேயே இராட்சதலம் ஏரியும் உள்ளது. இது உப்புத்தன்மை கொண்டாக உள்ளது. இந்த இராட்சதலம் ஏரியின் தீவில் இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தூரத்தில் தொலைவில் உள்ளது.

கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.

மலையேற்றம்

இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு Hugh Ruttledge என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000 அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு Herbert Tichy என்பவர் Gurla Mandhata ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது. " பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.

திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 22,000 அடிகள் ஆகும்.

இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன், கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. விஷ்ணு புராணம் கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.

கைலாச மலை எந்த நாடு?

இந்தியா, நேபாளம், திபெத், சீனா ஆகியவற்றின் அரசியல், ராஜீய உறவு, பாதுகாப்பு கட்டமைப்புடன் தொடர்புடைய கைலாயம், உண்மையில் சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post